Tuesday, 2 July 2013

எல்லையில் உள்ள தமிழர் கோயிலை மியான்மருக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம்:மணிப்பூர் அரசு உறுதி!

எல்லையில் உள்ள தமிழர் கோயிலை மியான்மருக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம்:மணிப்பூர் அரசு உறுதி!

Source: Tamil CNN
மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டிற்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில் தமிழர்களின் கோயிலை மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என மணிப்பூர் அரசு உறுதியாக தெரிவித்துஉள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கும் அதன் எல்லையில் உள்ள மியான்மர் நாட்டிற்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள மோரே என்ற இடத்தில், தமிழர்களுக்கு சொந்தமான கோயில் உள்ளது.
மணிப்பூர் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்த கோயிலைச் சுற்றி, 17 ஆயிரம் தமிழர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை, மியான்மர் அரசு தன் பகுதி எனக் கோரி வருகிறது. அதை மணிப்பூர் அரசு மறுத்து வருகிறது.”"மோரே பகுதி, மணிப்பூரின் ஒருங்கிணைந்த பகுதி; அந்த பகுதியை எக்காரணம் கொண்டும் மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” என, மணிப்பூர் மாநில காங்கிரஸ் முதல்வர் உக்ராம் இபோபி அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...