Tuesday, 9 July 2013

திருவனந்த புரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் 5 வயது சிறுவன்!

திருவனந்த புரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் 5 வயது சிறுவன்!

Source: Tamil CNN
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் இரு சக்கர வாகன ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது பொழுது போக்கு. இதற்காகவே அவர், விசேஷமாக வடிவமைத்த மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி தெருக்களில் சாகசம் செய்து பொதுமக்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.
மேலும் ஏராளமான பந்தயங்களில் கலந்து கொண்டு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி பரிசு பெற்றுள்ளார். இவரது மகன் ராஜா (வயது 5). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறான். சிறு வயதிலேயே ராஜாவை தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு மணிகண்டன், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்ததால் அதைப்பார்த்து ராஜாவுக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மகனுக்காக வெளிநாட்டில் இருந்து சிறுவர்கள் ஓட்டும் விசேஷ மோட்டார் சைக்கிளை மணிகண்டன் வர வழைத்து கொடுத்தார். பெட்ரோலில் ஓடும் இந்த மோட்டார் சைக்கிளில் 4 கியர்களும் உள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி இந்த மோட்டார் சைக்கிளில் ராஜா வேகமாக செல்வதை அந்த பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த மோட்டார் சைக்கிளில் ராஜா பள்ளிக்கும் சென்று வருகிறான். தனக்கு லைசென்சு கிடைக்காது என்பதால் தன்னால் அனைத்து இடங்களுக்கும் இந்த மோட்டார் சைக்கிளில் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் ராஜாவுக்கு உள்ளது.
moter

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...