Monday 28 February 2022

Estonians rally for Ukraine as Catholics pray for peace

 

Estonians rally for Ukraine as Catholics pray for peace

Catholics in Estonia are rallying around their Eastern European brothers and sisters in Ukraine, and praying for peace and an end to the Russian invasion.

By Devin Watkins

Around 30,000 Estonians demonstrated in Tallinn’s Freedom Square on Saturday afternoon to join their voices in support of peace, as Russia continued its military push to subdue Ukraine.

Thousands of people also gathered in Estonia’s other major cities of Tartu and Narva.

Ms. Marge-Marie Paas, the Communications Director of the Apostolic Administration of Estonia, took part in the Tallinn rally, and later spoke to Vatican News about the local Church’s support for Ukraine.

Moving show of support

The protest against Russia’s invasion of Ukraine was “deeply moving”, Ms. Paas said, adding that it started with the Ukrainian and Estonian national anthems.

She said Estonians welcomed a speech by President Alar Karvis, who urged Estonians to “open their hearts and the doors of their homes to Ukrainian refugees” and to show “compassion and caring.”

Ukrainian President Volodymyr Zelenskyy tweeted his gratitude to Estonians for their show of support for his countrymen.

He claimed it was the “largest demonstration in the modern history of Estonia” and told the Estonian president that the “vyshyvanka (a traditional embroidered Ukrainian shirt) suits you.”

President Zelenskyy tweeted his gratitude to Estonians
President Zelenskyy tweeted his gratitude to Estonians

Material and spiritual aid

As Ukraine bears the brunt of the Russian advance, Estonians are joining Catholics around the world in signs of spiritual and material support for Ukrainians in need.

The Estonian Red Cross has been flooded with donations of cash and household goods to be sent to Ukraine, according to ETV, Estonia’s national public broadcaster.

Ms. Paas said local Catholic parishes are “absolutely open to help refugees and support Ukrainians.”

The support goes beyond the material, added Ms. Paas. She said Estonian Catholics immediately began praying for peace in Ukraine after Russia invaded on Thursday morning.

Around 30,000 people took part in Saturday's Tallinn rally
Around 30,000 people took part in Saturday's Tallinn rally

Estonians welcome Pope’s call for day of prayer

Catholics in the “Land of Mary” are turning again to Our Lady as war shatters the peace in Europe.

They held a special Rosary on Saturday evening, and another on Sunday morning after Masses in Tallinn, to pray for peace and for the souls of those who have died in the fighting in Ukraine.

“On Ash Wednesday, we will follow the full Day of Fasting and Prayer, especially in our Cathedral where we will hold prayer vigils. We really would like in this moment to support our sisters and brothers in Ukraine through prayer.”

Pope Francis has called Christians around the world to take part in a Day of Fasting and Prayer for Peace, especially in Ukraine, on Ash Wednesday, which falls on 2 March. “I encourage believers in a special way to dedicate themselves intensely to prayer and fasting on that day. May the Queen of Peace preserve the world from the madness of war,” said the Pope at the Wednesday General Audience.

Secure in alliances

Estonia spent 50 years as a satellite state of the Soviet Union, and shares a 294-kilometer-long border with Russia. The European Union state is now a member of the NATO military alliance.

Asked whether Estonians are worried about a possible escalation in violence with Russia spilling over Ukraine’s borders, Ms. Paas affirms that Estonia’s alliances are “strong and safe”.

She said Estonians prefer to recall Pope St. John Paul words: “Do not be afraid.”

C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

 

C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெற்ற C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்குத் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C-9 கர்தினால்கள் அவைக் கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெற்றது. 

அந்த அவையின் கர்தினால்கள் தங்கள் சொந்த பகுதிகளில் உள்ள சமூக-அரசியல் மற்றும் திருஅவை நிலைமை குறித்து பேசிய உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் பொதுநிலையினருக்கும் தங்களுக்கும் தேவையான மாற்றத்தை உருவாக்கத் தேவைப்படும், இக்கூட்டத்தின் கருப்பொருளைக் குறித்து கலந்துரையாடியதாக, திருப்பீட தகவல் தொடர்பகம், பிப்ரவரி 24, இவ்வியாழனன்று வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.  

அதைத் தொடர்ந்து, விவாதிக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில், திருத்தந்தையின், தற்போதைய திருப்பீடப் பணிகள் மற்றும் திருஅவைக் கட்டமைப்பில் தூதரகங்களின் பங்கு மற்றும், செயல்பாடு தொடர்பான சில அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், திருப்பீட தகவல் தொடர்பகம் எடுத்துரைக்கின்றது.

இந்தக் கூட்டத்தில், FMA. துறவு சபையைச் சார்ந்த ​​இறையியலாளர் அருள்சகோதரி லிண்டா போச்சர் அவர்களின் "பெண்களின் பங்கு மற்றும் திருஅவையில் "மரியாவின் கொள்கை" என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்தும், C-9 அவை உறுப்பினர்கள் அனைவரும் கேட்டறிந்ததுடன், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர் என்றும், அத்தொடர்பகம் கூறுகின்றது.

திருத்தந்தையுடன், கர்தினால்கள், Pietro Parolin, Giuseppe Bertello, Óscar A. Rodríguez Maradiaga, S.D.B., Reinhard Marx, Sean Patrick O'Malley, O.F.M. Cap., Oswald Gracias, Fridolin Ambongo Besungu, O.F.M. Cap மற்றும் இவ்வமைப்பின் செயலர் H.E. Mons. Marco Mellino அவர்களும் பங்குபெற்றனர்.

உக்ரைன் புலம்பெயர்ந்தோரை வரவேற்க லித்துவேனியா தயார்

 

உக்ரைன் புலம்பெயர்ந்தோரை வரவேற்க லித்துவேனியா தயார்

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் முடிவடைய வேண்டும், மற்றும், அமைதி நிலவவேண்டும் - ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனில் போர் தொடங்கியது குறித்த செய்திகள் ஐரோப்பிய ஆயர்களுக்கு மிகுந்த கவலையளித்துள்ள அதேவேளை, அந்நாட்டில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பிப்பதாக, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, லித்துவேனியப் பேராயர் Gintaras Grušas  அவர்கள் கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்து வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, வில்னியுஸ் பேராயர் Grušas அவர்கள், உக்ரைன் திருஅவை மற்றும், அந்நாட்டு மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அவர்களுக்காக ஆயர்கள் இறைவேண்டல் செய்கின்றனர் என்று கூறினார்.

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புகலிடம் அளிக்க, லித்துவேனியா நாட்டின் பல்வேறு நகரங்களின் மக்கள் தயாராகி வருகின்றனர் என்றும், உக்ரைன் நாட்டிற்காக திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு நாளில், லித்துவேனிய மக்களும் அவரோடு இணைந்து அந்நாளைக் கடைப்பிடிக்கவுள்ளனர் என்றும், பேராயர் Grušas அவர்கள் கூறியுள்ளார்.  

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் பேராயர் Grušas அவர்கள் பங்குகொண்டு வருகிறார்.

உக்ரைன் நாட்டின் எல்லையிலுள்ள போலந்து நாட்டிற்கு, மிகப்பெரும் அளவில், உக்ரைன் மக்கள் புலம்பெயரக்கூடும் எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அந்நாட்டில் இடம்பெற்றுவரும் போர் முடிவடையவேண்டும், மற்றும், நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்பதற்கே ஆயர்கள் அழைப்புவிடுக்கின்றனர் எனவும், லித்துவேனியா நாட்டுப் பேராயர் கூறியுள்ளார்.  

உக்ரைன், இரஷ்யா போர், அனைவருக்கும் தோல்வி

 

உக்ரைன், இரஷ்யா போர், அனைவருக்கும் தோல்வி

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது - முதுபெரும்தந்தை பேராயர் பிட்ஸபால்லா

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபால்லா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிப்ரவரி 23, இப்புதனன்று துவங்கியுள்ள ஐந்து நாள் கூட்டத்தில் கலந்துகொண்டுவரும் முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போர் குறித்து ஆசியச் செய்தியிடம் கூறியபோது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரண்பாடுகளை மாறுபட்ட வழியில் மேற்கொள்ளலாம் என்று நம்பும் அனைவருக்கும், இப்போர் ஒரு தோல்வியாக உள்ளது என்றுரைத்துள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், மத்தியதரைக் கடல் மற்றும், மத்திய கிழக்குப் பகுதியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இரஷ்ய அரசின் இந்நடவடிக்கை, அப்பகுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று, போர் குறித்த தன் கவலையைத் தெரிவித்துள்ளார்.

இரஷ்யா மற்றும், உக்ரைன் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரிவினைகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், தற்போது உக்ரைனில் நடைபெற்றுவரும் போர், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையேயுள்ள பிரிவினைகளை மேலும் விரிவாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி திருநீற்றுப் புதனன்று, உக்ரைன் மற்றும், உலக அமைதிக்காகக் கடைப்பிடிக்கப்படும் இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு, இக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் சாக்கோ

மேலும், பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்களும், உக்ரைனில் இடம்பற்றுவரும் போர் குறித்த கவலையை வெளியிட்டு, துன்புறும் உக்ரைன் மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில் பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டம், பிப்ரவரி 27, இஞ்ஞாயிறன்று நிறைவடையும், (AsiaNews)

இரஷ்யாவில் போராட்டம்

இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக இரஷ்யா நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து இரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான இரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுள் 1,800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

 

உக்ரைன், மாஸ்கோ போர், அனைவருக்கும் தோல்வி

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது - முதுபெரும்தந்தை பேராயர் பிட்ஸபால்லா

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில், இரஷ்ய இராணுவம் மேற்கொண்டுவரும் போர், மிகுந்த கசப்புணர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபால்லா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிப்ரவரி 23, இப்புதனன்று துவங்கியுள்ள ஐந்து நாள் கூட்டத்தில் கலந்துகொண்டுவரும் முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போர் குறித்து ஆசியச் செய்தியிடம் கூறியபோது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரண்பாடுகளை மாறுபட்ட வழியில் மேற்கொள்ளலாம் என்று நம்பும் அனைவருக்கும், இப்போர் ஒரு தோல்வியாக உள்ளது என்றுரைத்துள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், மத்தியதரைக் கடல் மற்றும், மத்திய கிழக்குப் பகுதியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இரஷ்ய அரசின் இந்நடவடிக்கை, அப்பகுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று, போர் குறித்த தன் கவலையைத் தெரிவித்துள்ளார்.

இரஷ்யா மற்றும், உக்ரைன் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரிவினைகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ள முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள், தற்போது உக்ரைனில் நடைபெற்றுவரும் போர், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையேயுள்ள பிரிவினைகளை மேலும் விரிவாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி திருநீற்றுப் புதனன்று, உக்ரைன் மற்றும், உலக அமைதிக்காகக் கடைப்பிடிக்கப்படும் இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு, இக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், முதுபெரும்தந்தை பிட்ஸபால்லா அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் சாக்கோ

மேலும், பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்களும், உக்ரைனில் இடம்பற்றுவரும் போர் குறித்த கவலையை வெளியிட்டு, துன்புறும் உக்ரைன் மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில் பிளாரன்ஸ் நகரில் நடைபெறும் கூட்டம், பிப்ரவரி 27, இஞ்ஞாயிறன்று நிறைவடையும், (AsiaNews)

இரஷ்யாவில் போராட்டம்

இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக இரஷ்யா நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து இரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான இரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுள் 1,800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

உக்ரைன் நாட்டிற்காக உலகெங்கும் இறைவேண்டல்கள்

 

உக்ரைன் நாட்டிற்காக உலகெங்கும் இறைவேண்டல்கள்

இரஷ்யா, உக்ரைன் நாட்டை ஆக்ரமித்துள்ள இவ்வேளையில், அந்நாட்டின் கத்தோலிக்கருக்கு உதவும்வண்ணம் பத்து இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது, ACN அமைப்பு


மேரி தெரேசா: வத்திக்கான்

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் நிகழ்ந்தவற்றின் நினைவு, அனைத்துவிதமான வெறுப்புப் பேச்சுகளை விட்டொழிக்க, அனைத்து மக்களையும் தூண்டவேண்டும் என்று, இத்தாலிய கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

உக்ரைனில் போர் துவங்கிய முதல் நாளில், உரோம், பொலோஞ்ஞா, அசிசி போன்ற இத்தாலிய நகரங்களில், பல்வேறு அமைப்புகளோடு இணைந்து திருவிழிப்பு செபத்தில் ஈடுபட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், இத்தாலிய ஆயர்கள்,

உரோம் நகரத்தின் கொலோசேயம் என்ற இடத்தில் பிப்ரவரி 24ம் தேதி இரவில் உக்ரைன் நாட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டு, அந்நாட்டிற்காக செப வேண்டல்கள் எழுப்பப்பட்டன. பிப்ரவரி 26, இச்சனிக்கிழமை இரவில், அசிசி நகர் திருத்தலத்திலும் உக்ரைன் நாட்டிற்காக மக்கள் செபிக்கவுள்ளனர்.

உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான உதவி

மேலும், இரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்ரமித்துள்ள இவ்வேளையில், உக்ரைன் நாட்டின் கத்தோலிக்கருக்கு உதவும்வண்ணம் பத்து இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது, ACN எனப்படும், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.

உக்ரைன் நாட்டின் 4,879 அருள்பணியாளர்கள், மற்றும், 1,350 அருள்சகோதரிகளுக்கு  உதவுவதற்கென்று, ACN அமைப்பு இந்நிதியுதவியை அனுப்பவுள்ளது. அதோடு, கிழக்கு உக்ரைன் பகுதியிலுள்ள இரு இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களுக்கும், மற்றுமொரு கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கும், இந்த அமைப்பு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது. (CNA)


மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருது

 

மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருது

மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருதைப் பெறுபவர்கள் - ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II, அரசி Rania Al Abdullah, மற்றும் FOKAL மனிதாபிமான அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II ibn Al Hussein, அரசி  Rania Al Abdullah ஆகியோருக்கும்,  FOKAL எனப்படும் ஹெய்ட்டி நாட்டு மனிதாபிமான அமைப்புக்கும், மனித உடன்பிறந்தநிலை 2022ம் ஆண்டின் Zayed விருது வழங்கப்படுவதாக, பிப்ரவரி 25, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் முஸ்லிம் உயர்குரு இமாம் அல்-அசார் அவர்களும் இணைந்து கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த உணர்வுபற்றிய ஏட்டின் அறிவுரைகளால் தூண்டப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும், அப்பகுதியில், முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகளைக் களையவும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும், ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் ஆற்றிவரும் பணிகளை, சய்யது விருதுக் குழு பாராட்டியுள்ளது

அரசி ரானியா அவர்கள், உலகெங்கும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு அயராது குரல்கொடுத்து வருகிறார் என்றும், இரக்கம் சார்ந்த நடவடிக்கைகள் வழியாக, சகிப்புத்தன்மை மற்றும், ஏற்புடைமையை ஊக்குவித்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை ஆண்டுகளில் ஜோர்டன் நாடு, இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு தன் எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும், அவர்கள் கட்டணமில்லா கல்வி உட்பட, அரசின் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டு FOKAL மனிதாபிமான அமைப்பு, அந்நாட்டு இளையோரையும், அடித்தட்டு குழுமங்களையும் உருவாக்குவதில் சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றது.

மனித உடன்பிறந்த உணர்வின் விழுமியங்களின் அடிப்படையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும், பரிவன்பு ஆகியவைகொண்ட ஓர் உலகைக் கட்டியெழுப்புவதற்குச் சிறப்புப் பங்காற்றிவருகின்ற தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது


உலகின் நான்காவது பெரிய ஆறு

 

உலகின் நான்காவது பெரிய ஆறு

இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், மிசோரி ஆற்றுப்படுகை, வேளாண்மையிலும், மற்ற தொழில்களிலும் வளர்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் மக்களின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி, அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. பொதுவாக, ஆறுகள், அவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலில் கலக்கும்வரை உள்ள அளவை வைத்து, அவற்றின் நீளம் கணக்கிடப்படுகிறது. உலகின் மிக நீளமான ஆறுகள் பட்டியலில் வட ஆப்ரிக்காவில் பாய்கின்ற நைல், தென் அமெரிக்காவில் பாய்கின்ற அமேசான், சீனாவில் பாய்கின்ற யாங்சி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாய்கின்ற மிசோரி-மிசிசிப்பி என்று ஊடகங்கள் வரிசைப்படுத்தியுள்ளன. வட அமெரிக்காவின் மிக நீளமான மிசோரி ஆறு, ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 3,767 கி.மீ. தூரம் பயணித்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு வடக்கில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பத்து மாநிலங்களிலும், கனடா நாட்டின் இரு மாநிலங்களிலும் உள்ளது. இதனை, கீழ் மிசிசிப்பி ஆற்றுடன் இணைத்து கணக்கிட்டால், இது உலகின் நான்காவது நீளமான ஆறாகும். மிசோரி ஆறு, நூற்றுக்கணக்கான துணையாறுகளைக் கொண்டுள்ளது. 12,000 ஆண்டுகளாக மக்கள் மிசோரியையும், அதன் துணையாறுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். மிசோரி ஆறு அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் வடமேற்குப் பெருவழி என்று கருதப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், மிசோரி ஆற்றுப்படுகை, வேளாண்மையிலும், மற்ற தொழில்களிலும் வளர்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் மக்களின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. இத்தகைய வளர்ச்சியால், இந்த ஆற்றில் பல்லுயிரின வகைகளும், நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறில் பதினைந்து அணைகளும், துணையாறுகளில் நூற்றுக்கணக்கான அணைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆற்றுப்படுகையில், பொழுதுபோக்கிற்காகவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 1960ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள், ஒரு கோடி மணி நேரத்தை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினர். அந்த நேரம், 1990ம் ஆண்டில் 6 கோடி  மணி நேரங்களாக அதிகரித்தது. நீர்வழிப் பயணத்திற்காக வளைந்து ஓடும் இந்த ஆறு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நேராக்கப்பட்டதால், அதன் நீளம் ஏறக்குறைய 320 கி.மீக்குக் குறைந்ததுள்ளது என்று சொல்லப்படுகிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் அம்சங்கள்

 

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் அம்சங்கள்



பாகிஸ்தானின் மக்கள் தொகையில், 3.5 விழுக்காட்டினர், கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

தெய்வநிந்தனை குற்றச்சாட்டு, கட்டாய மதமாற்றம், தொழிலில் நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள், கல்வி அமைப்பு போன்றவை பாகிஸ்தான் நாட்டில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் அம்சங்களாக உள்ளன என்று, CSJ எனப்படும் சமுதாய நீதி மையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மை சமுதாயங்களின் சமூக, அரசியல், மதம் ஆகிய சூழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் CSJ மையம், 2021ம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டிலும் நடைமுறையில் இருந்த தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் குறைந்தது 84 பேர் குற்றம் சாட்டப்பட்டனர் எனவும், இலங்கை குடிமகள் பிரியங்கா குமாரா உட்பட, மூன்று பேர் சட்டத்திற்குப் புறம்பே கொல்லப்பட்டனர் எனவும், CSJ மையம் அறிவித்துள்ளதாக, பீதேஸ் செய்தி கூறுகிறது.  

மேலும், 2021ம் ஆண்டில், 39 இந்துமதச் சிறுமிகள், 38 கிறிஸ்தவச் சிறுமிகள் மற்றும், பெண்கள், ஒரு சீக்கிய மதச் சிறுமி என, குறைந்தது 78 பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் CSJ மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பீட்டர் ஜேக்கப் என்ற கத்தோலிக்கரால் வழிநடத்தப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்ட CSJ மையம், பாகிஸ்தானில் சமய சுதந்திரம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மக்கள் தொகையில், 3.5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்கள். (Fides)


தண்ணீர் அருந்துவதில் கவனம் வேண்டும்.

 

தண்ணீர் அருந்துவதில் கவனம் வேண்டும்.



நமது உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயல்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித உடலில் செரிமானம், வியர்வை வெளியேற்றம், சத்துணவை உடலுக்குள் எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவது, உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்வதற்குத் தண்ணீர் அவசியத் தேவையாகிறது. நம் உடலில், 5 முதல் 10 விழுக்காடு வரை தண்ணீர் இழப்பு ஏற்படும்போது அது உயிருக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே 15 முதல் 20 விழுக்காடாக உயரும் பட்சத்தில், அது நம்மை மரணிக்கச் செய்துவிடுகிறது.

நமது உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயல்படுகிறது. நம்முடைய தோலினை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும்போது, தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் தண்ணீரின் அளவு குறைவதே காரணமாக அமைகிறது. மேலும், பிறக்கும் குழந்தையின் உடலில் ஏறத்தாழ 75 முதல் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் இருப்பதால்தான், அக்குழந்தையின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. இத்தண்ணீர் 50 விழுக்காடாகக் குறையும்போது, 65 முதல் 70 வயதான முதியோரின் உடலில் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே, முதுமையில் எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் நிகழ்கிறது. ஆகவே, மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 கப் வரையிலான தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் அருந்துவதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.


ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி

ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி



ஏறக்குறைய 6,300 கி.மீ நீளத்தைக் கொண்டு, அமேசான், மற்றும் நைல் நதிகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான நதி, சாங் சியாங்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

யாங்சி நதி, அல்லது சாங் சியாங், அல்லது யாங்சி ஜியாங் என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி ஆகும். இது தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள நைல் நதிகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான நதி ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் நதிகளில் உலகில் மிக நீளமானது இது. சீன மொழியில் சாங் ஜியாங் என்பது, நீளமான நதி எனப்பொருள் தரும். இது சீன மக்கள் குடியரசின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது, மேலும் அதன் நதிக்கரையில் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. வளமான யாங்சி நதி பள்ளத்தாக்கானது, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு அளவைத் தருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் நீரானது, நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொழில், எல்லை அடையாளம், போர் போன்றவற்றிற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. இது, தன் அமைவிடம் காரணமாக சீனாவை வடக்குத் தெற்காக பிரிக்கும் கோடாக கருதப்படுகிறது. இந்த நதி ஏறக்குறைய 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி, கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.