Monday, 28 February 2022

ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி

ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி



ஏறக்குறைய 6,300 கி.மீ நீளத்தைக் கொண்டு, அமேசான், மற்றும் நைல் நதிகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான நதி, சாங் சியாங்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

யாங்சி நதி, அல்லது சாங் சியாங், அல்லது யாங்சி ஜியாங் என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான நதி ஆகும். இது தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள நைல் நதிகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான நதி ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும் நதிகளில் உலகில் மிக நீளமானது இது. சீன மொழியில் சாங் ஜியாங் என்பது, நீளமான நதி எனப்பொருள் தரும். இது சீன மக்கள் குடியரசின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது, மேலும் அதன் நதிக்கரையில் நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். சீனாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் யாங்சி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. வளமான யாங்சி நதி பள்ளத்தாக்கானது, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு அளவைத் தருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆற்றின் நீரானது, நீர்ப்பாசனம், போக்குவரத்து, தொழில், எல்லை அடையாளம், போர் போன்றவற்றிற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. இது, தன் அமைவிடம் காரணமாக சீனாவை வடக்குத் தெற்காக பிரிக்கும் கோடாக கருதப்படுகிறது. இந்த நதி ஏறக்குறைய 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி, கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...