Monday, 28 February 2022

உக்ரைன் நாட்டிற்காக உலகெங்கும் இறைவேண்டல்கள்

 

உக்ரைன் நாட்டிற்காக உலகெங்கும் இறைவேண்டல்கள்

இரஷ்யா, உக்ரைன் நாட்டை ஆக்ரமித்துள்ள இவ்வேளையில், அந்நாட்டின் கத்தோலிக்கருக்கு உதவும்வண்ணம் பத்து இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது, ACN அமைப்பு


மேரி தெரேசா: வத்திக்கான்

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் நிகழ்ந்தவற்றின் நினைவு, அனைத்துவிதமான வெறுப்புப் பேச்சுகளை விட்டொழிக்க, அனைத்து மக்களையும் தூண்டவேண்டும் என்று, இத்தாலிய கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

உக்ரைனில் போர் துவங்கிய முதல் நாளில், உரோம், பொலோஞ்ஞா, அசிசி போன்ற இத்தாலிய நகரங்களில், பல்வேறு அமைப்புகளோடு இணைந்து திருவிழிப்பு செபத்தில் ஈடுபட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், இத்தாலிய ஆயர்கள்,

உரோம் நகரத்தின் கொலோசேயம் என்ற இடத்தில் பிப்ரவரி 24ம் தேதி இரவில் உக்ரைன் நாட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டு, அந்நாட்டிற்காக செப வேண்டல்கள் எழுப்பப்பட்டன. பிப்ரவரி 26, இச்சனிக்கிழமை இரவில், அசிசி நகர் திருத்தலத்திலும் உக்ரைன் நாட்டிற்காக மக்கள் செபிக்கவுள்ளனர்.

உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான உதவி

மேலும், இரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்ரமித்துள்ள இவ்வேளையில், உக்ரைன் நாட்டின் கத்தோலிக்கருக்கு உதவும்வண்ணம் பத்து இலட்சம் யூரோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது, ACN எனப்படும், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.

உக்ரைன் நாட்டின் 4,879 அருள்பணியாளர்கள், மற்றும், 1,350 அருள்சகோதரிகளுக்கு  உதவுவதற்கென்று, ACN அமைப்பு இந்நிதியுதவியை அனுப்பவுள்ளது. அதோடு, கிழக்கு உக்ரைன் பகுதியிலுள்ள இரு இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களுக்கும், மற்றுமொரு கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை மறைமாவட்டத்திற்கும், இந்த அமைப்பு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது. (CNA)


No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...