Wednesday 30 September 2020

ROBERT JOHN KENNEDY: 55வது சமூகத் தொடர்பு உலக நாள் கருப்பொருள்: “வந்து ...

ROBERT JOHN KENNEDY: 55வது சமூகத் தொடர்பு உலக நாள் கருப்பொருள்: “வந்து ...:   ஊடகத் துறையில் பணியாற்றுவோர், அனைத்துவிதமான ஊடகங்களைப் பயன்படுத்துகையில், மக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலும், அவர்கள் வாழ்கின...

ROBERT JOHN KENNEDY: புனித மிக்கேலே, எமது வாழ்வு போராட்டத்தில் உதவியருளும்

ROBERT JOHN KENNEDY: புனித மிக்கேலே, எமது வாழ்வு போராட்டத்தில் உதவியருளும்:   திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு, முதன்மைத் தூதரான புனித கபிரியேலை, ஊடகங்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித கபிரிய...

ROBERT JOHN KENNEDY: பூர்வீக இன மக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது

ROBERT JOHN KENNEDY: பூர்வீக இன மக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது:   பூர்வீக இன மக்கள், உலகின் மக்கள் தொகையில் ஆறு விழுக்காடாக மட்டுமே இருப்பதையும் பொருட்படுத்தாது, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிக...

ROBERT JOHN KENNEDY: "செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" – கருத்தரங்கு

ROBERT JOHN KENNEDY: "செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" – கருத்தரங்கு:   FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடம் மேற்கொண்டுவரும் உரையாடல் வழியே, மனிதர்கள் அனைவருக்கும் உணவு கி...

ROBERT JOHN KENNEDY: கருணைக்கொலை மனித வாழ்வுக்கு எதிரான குற்றம்

ROBERT JOHN KENNEDY: கருணைக்கொலை மனித வாழ்வுக்கு எதிரான குற்றம்:   பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை பற்றிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள இவ்வேளையில், “நல்ல சமாரியர்” மடல் மிகவும் தேவையானது ...

ROBERT JOHN KENNEDY: சமுதாய நிலைநெருக்கடி சூழலில் ஒன்றிப்பு அவசியம்

ROBERT JOHN KENNEDY: சமுதாய நிலைநெருக்கடி சூழலில் ஒன்றிப்பு அவசியம்:   நீதி, மக்களாட்சி, மற்றும், தரமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை, குடிமக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமானதே. இக்கோரிக்கைகளை நிற...

ROBERT JOHN KENNEDY: ஜார்கண்டில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

ROBERT JOHN KENNEDY: ஜார்கண்டில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்:   பசுவைக் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் தலை மொட்டையடிக்கப்பட்டு, இந்து கடவுளரின் பு...

ROBERT JOHN KENNEDY: பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆ...

ROBERT JOHN KENNEDY: பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆ...:   பிலிப்பீன்ஸ் நாட்டில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்களுக்குத் தயாரிப்பாக, பிலிப்பீன்...

ROBERT JOHN KENNEDY: எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல

ROBERT JOHN KENNEDY: எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல:   இத்தாலிய இயேசு சபை சபையினர், கடந்த நாற்பது ஆண்டுகளாக, உரோம் நகரில் நடத்திவருகின்ற Astalli புலம்பெயர்ந்தோர் மையம், வறியநிலையிலுள...

ROBERT JOHN KENNEDY: நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ ஆசிய ஆயர்கள் அழைப்பு

ROBERT JOHN KENNEDY: நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ ஆசிய ஆயர்கள் அழைப்பு:   ஆசிய நாடுகளில் வாழ்ந்துவரும் கத்தோலிக்கர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ, ஆசிய ஆயர்கள...

ROBERT JOHN KENNEDY: புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில், ஒருமைப்பாடு தேவை

ROBERT JOHN KENNEDY: புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில், ஒருமைப்பாடு தேவை:   ஐரோப்பிய காரித்தாஸ் : புலம்பெயர்ந்தோர் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ள புதிய தீர்மானங்கள், நம்பிக்கையைத் தருபவைகளாக ...

ROBERT JOHN KENNEDY: அமெரிக்க அதிபர் மரணதண்டனைகளை நிறுத்த அழைப்பு

ROBERT JOHN KENNEDY: அமெரிக்க அதிபர் மரணதண்டனைகளை நிறுத்த அழைப்பு:   இவ்வாரம் அமெரிக்க ஐக்கிய நாட்டில், நிறைவேற்றப்படும் இரு மரணதண்டனைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரான Barr அவர்கள், 'Christifid...

நம் பொதுவான இல்லம் பற்றிய மீள்சிந்தனைக்கு அழைப்பு

 2020.09.25-videomessaggio-ONU.jpg


எது நிரந்தரம், எது நிரந்தரமற்றது, எது முக்கியம், எது முக்கியமற்றது, எது தேவையானது, எது தேவையற்றது என்பதைக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து விலகி வாழ்வதற்கு, கொரோனா கொள்ளைநோய் நமக்கு அழைப்புவிடுக்கின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாடுகளின் அரசுகளும், அரசியல் தலைவர்களும், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும், ஒன்றுசேர்ந்து, ஒத்துழைப்பு வழங்குவது, சிறந்ததோர் வருங்காலத்தை அமைக்கும் இலக்கு நோக்கி முன்னோக்கிச் செல்ல உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் உரையாற்றினார்.

1945ம் ஆண்டு, சான் பிரான்செஸ்கோ நகரில், ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்பின் ஆவணம் கையெழுத்திடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் 193 உறுப்பு நாடுகளும் பங்குபெற்றுவரும், ஐ.நா.வின் மெய்நிகர் பொதுஅவையில், காணொளி வழியாக, செப்டம்பர் 25, இவ்வெள்ளி இந்தியநேரம் இரவு 7.30 மணியளவில்  உரையாற்றிய திருத்தந்தை, நம் பொதுவான இல்லம் பற்றிய மீள்சிந்தனைக்கு அழைப்புவிடுத்தார்.

ஐ.நா.விடம் திருத்தந்தை

அரசுகள், அரசியல், தூதரகங்கள், பன்னாட்டு அமைப்புகள் போன்ற அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஓர் இணக்கத்திற்கு வருதல், சீர்திருத்தங்கள், ஒத்துழைப்பு, மனித மாண்பு மதிக்கப்படல், அணு ஆயுதக்களைவு, மக்களின் புலம்பெயர்வு போன்ற பல்வேறு தலைப்புக்களில் இக்காணொளி வழியாக உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனத்திடம் திருப்பீடம் எதிர்பார்ப்பதை எடுத்துரைப்பதற்கு, இந்த 75ம் ஆண்டு நிறைவு நல்லதொரு தருணம் என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. நிறுவனம், முழு மனிதக் குடும்பத்திற்கும் பணியாற்றுவதில், நாடுகளுக்கிடையே ஒன்றிப்பின் அடையாளமாகவும், அதற்குச் சேவையாற்றும் ஒரு கருவியாகவும், விளங்கவேண்டும் என்று திருப்பீடம் ஆவல்கொள்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, உலகிற்கு முக்கியமானது எதுவோ, அதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று பரிந்துரைத்தார்.

முக்கியமானதைத் தெரிவு செய்ய...

உயிரைக்கொல்லும் கொரோனா கொள்ளைநோய் முன்வைத்துள்ள சவால்களை, உலகம் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், இந்த நெருக்கடி சூழல், நம் மனிதப் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும், நம் பொருளாதார, நலவாழ்வு மற்றும், சமுதாய அமைப்புக்கள் ஆகியவை பற்றி சிந்தித்துப்பார்க்க அழைப்பு விடுத்துள்ளது எனறும், திருத்தந்தை கூறினார்.

அதோடு, அடிப்படை நலவாழ்வு  பராமரிப்பைப் பெறுவதற்கு, ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்பதை உணரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும், இந்த கொள்ளைநோய் நமக்கு சுட்டிக்காட்டுகிறது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

சோதனை காலத்தில், எது நிரந்தரம், எது நிரந்தரமற்றது, எது முக்கியம், எது முக்கியமற்றது, எது தேவையானது, எது தேவையற்றது என்பதைக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து விலகி வாழ்வதற்கு, கொரோனா கொள்ளைநோய் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்ற சிந்தனையை, கடந்த மார்ச் மாதம், சிறப்பு இறைவேண்டல் நிகழ்வில் தான் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கடமையுணர்வு, ஒத்துழைப்பு, அமைதி, ஏழைகள் ஒதுக்கப்படாமை ஆகிய பாதைகளைத் தெரிவு செய்வதற்கு வலியுறுத்தினார்.

உண்மையான ஒருமைப்பாட்டுணர்வு

தோழமை உணர்வு என்பது, வெற்று வார்த்தைகள் அல்லது உறுதிப்பாடுகளோடு முடிந்துவிடக்கூடியது அல்ல, மாறாக, நம் இயல்பான வரையறைகளைக் கடந்துசெல்லும் எல்லாவிதச் சோதனைகளை தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை, கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை நமக்கு காட்டியுள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய், தொழில் சந்தையில், ‘ரோபோ’ மற்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகரித்துள்ள இவ்வேளையில், மனிதரின் மாண்பு உறுதிசெய்யப்படும் சூழலில், அவர்களின் திறமைகள் உண்மையாகவே திருப்திபெறச் செய்யும் வகையில், தொழிலில் புதியமுறைகள் தேவைப்படுகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

வீணாக்கும் கலாச்சாரம்

மனித மாண்பை மதிக்காததே, வீணாக்கும் கலாச்சாரத்திற்கு ஆரம்பம் எனவும், மனிதரின் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவது, வருங்கால நம்பிக்கை குறித்த மனித சமுதாயத்தின் எதிர்நோக்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும், கவலை தெரிவித்த திருத்தந்தை, சமய அடக்குமுறை, மனிதாபிமான நெருக்கடிகள், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பயன்பாடு, மனிதர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்தல், மனித வர்த்தகம், கட்டாயத் தொழில், பெருமளவாக மக்கள் புலம்பெயர்தல் போன்றவற்றில் பல, பன்னாட்டளவில் புறக்கணிக்கப்படுகின்றன, இந்நிலை சகித்துக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டார்.

போர் வேண்டாம், அமைதி தேவை என்றும் கூறியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், குறிப்பாக சிறார் பற்றியும், இந்த கொள்ளைநோய் முடிந்தபின்னர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகளை ஒன்றுசேர்க்கும் நோக்கத்திற்காக ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலம் முன்வைக்கும் சவால்களை மாற்றுவதற்கு, ஐ.நா. நிறுவனம் பயன்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகள் காரணமாக, ஐ.நா.வின் 75வது பொது அமர்வுக்கு, பல்வேறு உலகத் தலைவர்கள், காணொளிச் செய்திகளை ஏற்கனவே பதிவுசெய்து, அந்நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தனர். இந்தப் பொது அமர்வு, செப்டம்பர் 29ம் தேதி நிறைவடையும்.

55வது சமூகத் தொடர்பு உலக நாள் கருப்பொருள்: “வந்து பாரும்”

 திருத்தந்தை பிரான்சிஸ்


ஊடகத் துறையில் பணியாற்றுவோர், அனைத்துவிதமான ஊடகங்களைப் பயன்படுத்துகையில், மக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலும், அவர்கள் வாழ்கின்ற இடங்களிலும் சென்று சந்திப்பதற்கு, அழைப்புப் பெறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 55வது சமூகத் தொடர்பு உலக நாளுக்கு வெளியிடும் செய்திக்கு, “வந்து பாரும்” (யோவா.1,46) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று செப்டம்பர் 29, இச்செவ்வயான்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்த பிலிப்பு, நத்தனியேலிடம், “வந்து பாரும்”  என்று சொல்லியே இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார் (யோவா.1,43-46).

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார். இவ்வாறு யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா கொள்ளைநோயால் சமுதாய விலகல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், முக்கியமானது எது என்பதை ஏற்கவும், பொருள்களின் அர்த்தத்தை, உண்மையாகவே புரிந்துகொள்ளவும், சமூகத்தொடர்புகள் உதவுகின்றன என்று, இத்தலைப்பை வெளியிட்ட திருப்பீட அறிக்கை கூறுகின்றது.    

உண்மையை நாம் அனுபவிக்காவிட்டால், அதை அறிந்துகொள்ள முடியாது என்றும், மக்களைச் சந்திக்காவிட்டால், அவர்களின் இன்ப துன்பங்களில் நம்மால் பங்குகொள்ள இயலாது என்றும் கூறியுள்ள திருப்பீடம், "நீ எங்கே இருக்கிறாயோ அங்கே கடவுள் உன்னைச் சந்திக்கிறார்" என்ற கூற்று, திருஅவையில் ஊடகத்துறையில் அல்லது, சமூகத்தொடர்புத் துறையில் பணியாற்றுவோருக்கு வழிகாட்டியாக உள்ளது என்று கூறியுள்ளது.

இயேசு தம் முதல் சீடர்களை அழைக்கையில், அவர்களை நேரில் சென்று சந்தித்து, தம்மைப் பின்செல்லுமாறு அழைத்தார், அதேபோல், நாமும், எல்லாவிதமான ஊடகங்களையும் பயன்படுத்துகையில், மக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலும், அவர்கள் வாழ்கின்ற இடங்களிலும் சென்று சந்திக்க அழைப்புப் பெறுகிறோம் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

புனித மிக்கேலே, எமது வாழ்வு போராட்டத்தில் உதவியருளும்

 மூன்று முதன்மை வானதூதர்கள்


திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு, முதன்மைத் தூதரான புனித கபிரியேலை, ஊடகங்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித கபிரியேல், வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய முதன்மை வானதூதர்களின் விழாவாகிய செப்டம்பர் 29, இச்செவ்வயான்று, அந்த தூதர்களின் முக்கிய பண்புகளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

“புனித மிக்கேலே, மீட்புக்காக நாங்கள் தொடுக்கும் போரில் எமக்கு உதவியருளும். புனித கபிரியேலே, இயேசு எம்மை மீட்ட நற்செய்தியை எமக்குக் கொண்டுவாரும் மற்றும், எமக்கு நம்பிக்கையை அருளும். புனித இரபேலே, முழுமையான குணப்படுத்தல் பாதையில் எம் கரங்களைத் தாங்கியருளும் மற்றும், எமக்கு உதவியருளும்” என்ற சொற்கள், #ArchangelSaints என்ற 'ஹாஷ்டாக்'குடன், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

புனித மிக்கேல்

“கடவுளுக்கு நிகர் யார்” என்னும் பெயருடைய புனித மிக்கேல் பற்றி விவிலியத்தில் நான்கு முறை (தானி.10,13; தானி.12,1;யூதா1,9;தி.வெ.12,7-8) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கையும் வைத்து, புனித மிக்கேலின் பணி குறிப்பிடப்படுகின்றது. முதன்மை வானதூதரான புனித மிக்கேல், சாத்தானுக்கு எதிராகப் போரிடுகிறார். விசுவாசிகளின் ஆன்மாக்களை, குறிப்பாக, இறக்கும் நேரத்தில், அவற்றை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறார். திருஅவையைப் பாதுகாக்கிறார். இறந்தவர்களின் ஆன்மாக்களை இறுதித் தீர்வுக்கு உட்படுத்துகிறார். எனவே இவர் நீதியின் வானதூதராகக் கருதப்படுகிறார் மற்றும், இவர், வத்திக்கானின் பாதுகாவலர்.

புனித கபிரியேல்

“கடவுளின் ஆற்றல்” என்னும் பெயருடைய புனித கபிரியேல், இரக்கத்தின் வானதூதர் என்று கருதப்படுகிறார். இவர், நாசரேத்து கன்னி மரியிடம் இயேசு பிறப்பு பற்றிய மங்களச் செய்தியை அறிவித்தவர். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1951ம் ஆண்டு, ஊடகங்களின் பாதுகாவலராக இவரை அறிவித்தார். முதன்மைத் தூதரான புனித கபிரியேல்,  வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர்.

புனித இரபேல்

“கடவுள் குணமாக்குகிறார்” என்னும் பெயருடைய புனித இரபேல் பற்றி, விவிலியத்தில் தோபித்து நூலில் (5,13;7,8;12,15) குறிப்பிடப்பட்டுள்ளது. தோபித்தின் மகன் தோபியா, மேதியா நாடு சென்று, உறவினரான சாரா என்ற பெண்ணை மணந்து, பாதுகாப்பாக வீடுவந்து சேரும்வரை, அவருக்கு வழித்துணையாக இவர் சென்றார். அவர்களிடமிருந்து விடைபெறுவதற்குமுன், நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்” என்று கூறி, தன்னை யார் என்று வெளிப்படுத்தினார்.

பூர்வீக இன மக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது

 குவாத்தமாலா பூர்வீக இன ஆடை


பூர்வீக இன மக்கள், உலகின் மக்கள் தொகையில் ஆறு விழுக்காடாக மட்டுமே இருப்பதையும் பொருட்படுத்தாது, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிகளில் இவர்கள், பாரபட்சத்துடன் நடத்துப்படுகிறார்கள் - பேராயர் யூர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவை, பூர்வீக இன மக்கள் குறித்து   நடத்தும் 45வது இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், அரசியல் மட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றும் நடவடிக்கைகளில், இந்த மக்கள் இணைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு அமைப்புகளில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், 45வது இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையில், தற்போதைய கொள்ளைநோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் நெருக்கடிநிலைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பூர்வீக இன மக்கள், உலகின் மக்கள் தொகையில் ஆறு விழுக்காடாக மட்டுமே இருப்பதையும் பொருட்படுத்தாது, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிகளில் இவர்கள், பாரபட்சத்துடன் நடத்துப்படுகிறார்கள் மற்றும், மிகவும் துன்புறுகிறார்கள் என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் கூறினார். 

திருப்பீடம், பலநேரங்களில் புறக்கணிக்கப்படும் இம்மக்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது மற்றும், இவர்களோடு தோழமையுணர்வு கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், உலகின் பல பகுதிகளில், பூர்வீக இன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன என்பதையும், செப்டம்பர், 24, இவ்வியாழனன்று ஆற்றிய உரையில் கவலை தெரிவித்தார். 

அரசியல் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில், குறிப்பாக, இம்மக்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்த தீர்மானக் கலந்துரையாடல்களில், இம்மக்களும் பங்குபெறுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், பேராயர் யூர்க்கோவிச்.

"செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" – கருத்தரங்கு

 செயற்கை நுண்ணறிவு குறித்த அடையாளம்

FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடம் மேற்கொண்டுவரும் உரையாடல் வழியே, மனிதர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வழிகளைக் கண்டறிய விழைகிறது - பேராயர் பாலியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வை வலியுறுத்தும் நோக்கத்துடன், திருப்பீடத்தில் இயங்கிவரும் பாப்பிறை வாழ்வு கலைக்கழகம், செப்டம்பர் 24, இவ்வியாழனன்று, செயற்கை அறிவுத்திறனை மையப்படுத்தி, இணையவழி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

"செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கை, பாப்பிறை வாழ்வு கலைக்கழகத்துடன், FAO எனப்படும் உணவு வேளாண்மை, IBM எனப்படும் பன்னாட்டு வர்த்தகக் கருவிகள், மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

இந்தக் கருத்தரங்கைக் குறித்து, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த பாப்பிறை வாழ்வு கலைக்கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், டிஜிட்டல் உலகை நிரப்பி வரும் தொழில்நுட்பங்கள், இறைவன் மனிதருக்கு வழங்கியுள்ள கொடைகள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடத்தின் சார்பில், பாப்பிறை வாழ்வு கலைக்கழகம், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றிய ஓர் ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்த பேராயர் பாலியா அவர்கள், மனித குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பத்திலும், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிலும் பெருமளவு ஈடுபட்டுள்ள FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடம் மேற்கொண்டுவரும் உரையாடல் வழியே, மனிதர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வழிகளைக் கண்டறிய விழைகிறது என்று பேராயர் பாலியா அவர்கள் கூறினார்.

உலகை அச்சுறுத்திவரும் உணவு பற்றாக்குறை, மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகிய இரு முக்கிய கருத்துக்கள், செப்டம்பர் 24, இவ்வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

கருணைக்கொலை மனித வாழ்வுக்கு எதிரான குற்றம்

 கருணைக்கொலை


பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை பற்றிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள இவ்வேளையில், “நல்ல சமாரியர்” மடல் மிகவும் தேவையானது - கர்தினால் லூயிஸ் லதாரியா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குணமாக்க இயலாத நோயுடன், வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிப்போரைப் பராமரிப்பது குறித்து, விசுவாசக்கோட்பாட்டு பேராயம், “Samaritanus bonus” அதாவது “நல்ல சமாரியர்” என்ற தலைப்பில், நீண்ட மடல் ஒன்றை, செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று, செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது.

அயலவருக்குப் பராமரிப்பு, துன்புறும் கிறிஸ்துவின் உயிருள்ள அனுபவம் மற்றும், நம்பிக்கையை அறிவித்தல், மனித வாழ்வு புனிதமானது மற்றும், மீறமுடியாத கொடை என நோக்கும் சமாரியரின் இதயம், மனித வாழ்வின் புனித மதிப்பை ஒளியற்றதாய் ஆக்கும் கலாச்சாரத் தடைகள், திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனைகள் ஆகிய ஐந்து தலைப்புக்களில் இந்த மடல் வெளியிடப்பட்டுள்ளது.

கருணைக்கொலை மற்றும், பிறரின் உதவியால் ஆற்றப்படும் தற்கொலை, கொடூரமான மருத்துவ சகிச்சைகளை விலக்குவதற்குள்ள அறநெறி கடமை, குணமாக்க முடியாத நோயுடன், இறக்கும் நிலையிலுள்ளோருக்குப் பராமரிப்பு, குடும்பங்கள் மற்றும், அத்தகைய நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லங்கள், நலவாழ்வுப் பணியாளர்களுக்குப் பயிற்சி.. போன்றவற்றில் திருஅவையின் போதனைகள் குறித்தும், இந்த மடலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்கள் தலைமையில், அப்பேராயத்தின் செயலர் பேராயர் Giacomo Morandi அவர்களும், பொதுநிலையினர், கடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் நேரடிப் பொதுச்செயலர் பேராசிரியர் Gabriella Gambino அவர்களும், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் உறுப்பினரான பேராசிரியர் Adriano Pessina அவர்களும், இந்த மடலை வெளியிட்டு, இம்மடல் குறித்த தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கர்தினால் லூயிஸ் லதாரியா

மேலும், "நல்ல சமாரியர்" என்ற இந்த மடலின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்கள், இந்த மடல் வெளியிடப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கம் பற்றி விளக்கியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் கருணைக்கொலை பற்றிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள இவ்வேளையில், இந்த மடல் மிகவும் தேவையானது என்றுரைத்த கர்தினால் லதாரியா அவர்கள், கொடிய நோயால் தாக்கப்பட்டு, இறக்கும் நிலையிலுள்ள நோயாளிகளைப் பராமரிப்பது, அவர்களுக்கு, உடல் மற்றும், ஆன்மீக அளவில் உதவுவது குறித்து, இந்த மடல் எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளார். 

துன்புறும் நோயாளிகளுக்கு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அவசியம் என்றும், இதற்கு திருஅவையின் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள் அவசியம் என்றும், 2018ம் ஆண்டில், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயரம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதே, இத்தகைய மடல் ஒன்றை வெளியிடுவதற்கு காரணம் என்று கர்தினால் லதாரியா அவர்கள் கூறினார்.

நோயாளி ஒருவருக்கு, மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலையிலும், மனித வாழ்வின் அர்த்தம் என்ன என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும், அவர் இறக்கும்வரை சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்றும், மனிதரை, முழுமையாக நோக்கவேண்டும் என்றும், கர்தினால் லதாரியா அவர்கள் கூறினார்.

திருஅவை, மனித வாழ்வின் அர்த்தத்தை, நேர்மறைச் சிந்தனையோடு நோக்குவதை ஒருபோதும் நிறுத்திக்கொள்ளாது என்றும், மனித வாழ்வின் புனிதம், மற்றும், மீறமுடியாத அதன் மாண்பு, துன்புறும் நோயாளிகளில் தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்றும், குணமாக்க இயலாத நோய் என்பது, குணமாக்க இயலாதது என்பதற்கு ஒருபோதும் இணையாக இருக்கஇயலாது என்றும், குணமாக்க இயலாதது என்பது,  மருத்துவப் பராமரிப்பை முடித்துக்கொள்வது என்பதல்ல என்றும், விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கூறினார்.

சமுதாய நிலைநெருக்கடி சூழலில் ஒன்றிப்பு அவசியம்

 கர்தினால் ஜான் டாங் ஹான்


நீதி, மக்களாட்சி, மற்றும், தரமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை, குடிமக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமானதே. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை – ஹாங்காங் கர்தினால் டாங்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் கிளர்ச்சிகளும், கொந்தளிப்புகளும் இடம்பெறும் காலங்களில், கத்தோலிக்கர், திருஅவையின் போதனையால் வழிநடத்தப்பட்டு, ஒன்றிப்பைக் கடைப்பிடிக்குமாறு, ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் ஹான் (John Tong Hon) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில், ஹாங்காங்கை முடக்கிப்போட்ட சமுதாயக் கிளர்ச்சிகள், குழப்பநிலைகள் மற்றும், பிரிவினைச் சூழல்கள் பற்றி, அண்மையில் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் டாங் அவர்கள், இச்சூழல்களில், திருஅவையின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளார்.

நீதி, மக்களாட்சி, மற்றும், தரமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை, குடிமக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமானதே. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறியுள்ள கர்தினால் டாங் அவர்கள், இதில், கத்தோலிக்க சமுதாயத்தில் பிரிவினைகள் நிலவின என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய மற்றும், அரசியல் தலைவர்களிடம், விசுவாசிகள், தங்களின் மாறுபட்ட கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்கலாம், ஆயினும், இத்தகைய மாறுபட்ட கண்ணோட்டங்கள், திருஅவைக்குள் பிரிவினைக்கு வழியமைக்கக்கூடாது என்று, கர்தினால் டாங் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.    

ஹாங்காங்கில், சமுதாய, அரசியல் சீர்திருத்தங்கள் இடம்பெறவேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக, சில குழுக்களுக்கிடையே காழ்ப்புணர்வு உருவாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டாங் அவர்கள், திருஅவை, மக்களாட்சி அரசுக்கு, எப்போதும் ஆதரவளிக்கின்றது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்டில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

 கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அமைதி வழியில் எதிர்ப்பு

பசுவைக் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் தலை மொட்டையடிக்கப்பட்டு, இந்து கடவுளரின் புகழ்பாடும்படி கட்டாயப்படுத்தபட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள் 

பசுவைக் கொன்றார்கள் என்ற பொய்க் குற்றசாட்டுடன், ஜார்கண்ட் மாநிலத்தின் Bherikudar என்ற ஊரில், பூர்வீக இன கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், Simdega ஆயர் Vincent Barwa.

இத்தாக்குதல், மனித மாண்பை, குறைத்து மதிப்பிடும் காட்டுமிராண்டித்தனமான செயல் என, கண்டனம் தெரிவித்துள்ள ஆயர் பார்வா அவர்கள், நாகரீகமுள்ள ஒரு ஜனநாயக நாட்டில், இத்தகைய வன்முறைகளை எவரும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறினார்.

அண்மையில் Bherikudar என்ற கிராமத்திற்குள் கம்புகள், மற்றும், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த அறுபதுக்கும் மேற்பட்ட இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் தலையை மொட்டையடித்து, இந்து கடவுளரின் புகழ் பாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பூர்விக இன குடிமக்கள் மற்றும் தலித் மக்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில், இத்தாக்குதல் தொடர்பாக, ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக உரைத்த காவல்துறை, கிறிஸ்தவர்கள் பசுவைக் கொன்றார்கள் என்பதற்கு, எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோல், அண்மையில், இராஞ்சி மாவட்டத்தில், கிறிஸ்தவ குடும்பம் ஒன்று, பசுவைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட, அவர்கள், பசுவைக் கொன்றார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால், பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநில ஆட்சியை இழந்துள்ள பி.ஜே.பி. கட்சி, ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில், இந்து, கிறிஸ்தவ பிரிவினையை வளர்க்க எடுக்கும் முயற்சிகளே இவை என, பல சமுதாயத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் 3 கோடியே 30 இலட்சம் மக்கள் தொகையில், 15 இலட்சம் பேர், அதாவது, 4.5 விழுக்காட்டினர், கிறிஸ்தவர்கள். (UCAN)

பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு

 கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே


பிலிப்பீன்ஸ் நாட்டில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்களுக்குத் தயாரிப்பாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, ஒன்பது ஆண்டுகள் நவநாள் நிகழ்வுகளை 2013ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

1521ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் Limasawa தீவில், முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இடம்பெறும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள் அறிவித்துள்ளார்.

அதேநேரம், 1521ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள், Cebu உயர்மறைமாவட்டத்தில், முதன்முதலில் திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றியதன் 500ம் ஆண்டு நிகழ்வுகள், 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் என்றும், ஆயர் David அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த 500ம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்களுக்குத் தயாரிப்பாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, ஒன்பது ஆண்டுகள் நவநாள் நிகழ்வுகளை 2013ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது. 

கர்தினால் தாக்லே

மேலும், கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டிருந்த பிலிப்பீன்ஸ் நாட்டு கர்தினாலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், அந்நோயிலிருந்து முழுவதும் குணம்பெற்றுள்ளார் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் மகிழ்வோடு அறிவித்துள்ளனர். 

எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல

 எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல


இத்தாலிய இயேசு சபை சபையினர், கடந்த நாற்பது ஆண்டுகளாக, உரோம் நகரில் நடத்திவருகின்ற Astalli புலம்பெயர்ந்தோர் மையம், வறியநிலையிலுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு, ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருவதோடு, மற்ற உதவிகளையும் ஆற்றிவருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 27, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 106வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளை முன்னிட்டு, உரோம் நகரில், இயேசு சபையினரின் Astalli புலம்பெயர்ந்தோர் மையமும், வத்திக்கான் வானொலியும் இணைந்து, “எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல” என்ற தலைப்பில், நிகழ்ச்சி ஒன்றை, செப்டம்பர் 26, இச்சனிக்கிழமை மாலையில் ஒலிபரப்புகின்றது.

இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.05 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்தோர், இந்நிலைக்கு தங்களை உள்ளாக்கிய, அரசியல் மற்றும் சமுதாயச்சூழல் உள்ளிட்ட, சொந்தக் கதைகளை விவரிக்கின்றார்கள் என்றும், இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகிர்வின் இறுதியில், "நான் என்னை புலம்பெயர்ந்தவர் என்று அழைப்பதில்லை"  எனக் கூறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பகிர்வைக் கேட்கின்றபோது, அவர்கள் பற்றிய உண்மையான நிலையையும்,  இவர்கள், வெறும் எண்ணிக்கை அல்ல, மாறாக, தங்களின் சொந்த அனுபவங்களையும், பாச உணர்வுகளையும், அச்சங்களையும், வாழ்வுகுறித்த திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதர் என்று இத்தாலியிலும், மற்ற பகுதிகளும் வாழும் ஏனையோர் அறிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இத்தாலிய இயேசு சபையினர், கடந்த நாற்பது ஆண்டுகளாக, உரோம் நகரில் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தை நடத்தி வருகின்றனர். இந்த மையம், வறியநிலையிலுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கு, ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருவதோடு, ஏனைய உதவிகளையும் ஆற்றிவருகின்றது.

நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ ஆசிய ஆயர்கள் அழைப்பு

 தாய்லாந்து ஆலயத்தில் செபிக்கும் கத்தோலிக்கர்கள்


ஆசிய நாடுகளில் வாழ்ந்துவரும் கத்தோலிக்கர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ, ஆசிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆசியாவின் பல நாடுகளிலும் வாழ்ந்து வரும் கத்தோலிக்கர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ, ஆசிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மியான்மார் நாட்டு கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு மடலில், நோயின் தாக்கம், வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல்வேறு நெருக்கடிகளையும், மக்கள் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும்பாலான ஆசிய நாடுகளில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன, பள்ளிகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன, பொருள்களின் தட்டுப்பாடு வளர்ந்து வருகிறது என்ற பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், இவ்வேளையில், அரசுகள் இன்னும் கூடுதலான அடக்குமுறைகளை மக்கள்மீது சுமத்துவதிலேயே குறியாய் இருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் ஆசியாவின் பல நாடுகள், புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் என்ற பல்வேறு இயற்கை பேரிடர்களைச் சந்தித்துள்ளது போதாதென்று, நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் மோதல்களையும் சந்தித்துவருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், ஒவ்வொரு பிரச்சனையையும் ஆசிய மக்கள் மன உறுதியோடு சந்தித்து வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மதம், இனம், நாடுகள் என்ற பல நிலைகளில் வேற்றுமை பாராட்டும் நம்மிடையே, இந்தக் கொள்ளைநோய், எவ்வித வேறுபாடும் இன்றி நுழைந்து, அனைவரையும் தாக்கியுள்ளது என்பதை உணரும்போது, இதனை வெல்வதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்ற உண்மையை இது உணர்த்தியுள்ளது என்று கர்தினால் போ அவர்கள் தன் மடலில் நினைவுறுத்தியுள்ளார். (Fides)

புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில், ஒருமைப்பாடு தேவை

 லெஸ்போஸ் தீவு புலம்பெயர்ந்தோர் முகாமில் ஒரு சிறுவன்


ஐரோப்பிய காரித்தாஸ் : புலம்பெயர்ந்தோர் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ள புதிய தீர்மானங்கள், நம்பிக்கையைத் தருபவைகளாக இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புகலிடம் தேடுவோர், மற்றும், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், இவ்வாரத்தில் நிறைவேற்றியுள்ள ஒப்பந்தம் குறித்து தன் ஏமாற்றத்தையும், ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.

Brussels நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் குறித்து கவலையை வெளியிட்ட கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, புலம்பெயர்ந்தோர் குறித்த புதிய கொள்கைகள், மனிதாபிமானத்தையும், நீதியான தீர்வுகளையும் விட்டு விலகிச் செல்வதுபோல் இருக்கின்றன என கூறியுள்ளது.

இம்மாதம் 9ம் தேதி, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவிலுள்ள Moria புலம்பெயர்ந்தோர் முகாம் தீக்கிரையாகி, 12,000க்கும் மேற்பட்டோர் அவதியுறும் நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள, புலம்பெயர்ந்தோர் குறித்த தீர்மானங்கள், நம்பிக்கையைத் தருபவைகளாக இல்லை என்கிறது, காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை.

புதிய ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள தீர்மானங்கள், புலம்பெயர்ந்தோர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுகுவதை தடுப்பதையும், அவர்களின் சொந்த நாடுகளின் ஒத்துழைப்போடு அவர்களை திருப்பி அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன எனவும் குற்றம் சாட்டுகிறது, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.

இதற்கிடையே, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, அனைத்து மனித குலமும் ஒரே குடும்பமாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்ந்தோரை நிர்வகிப்பதிலும், அகதிகளை வரவேற்பதிலும், ஒருமைப்பாடு என்பதே வழிகாட்டும் நியதியாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள்.

அமெரிக்க அதிபர் மரணதண்டனைகளை நிறுத்த அழைப்பு

 மரணதண்டனை நிறைவேற்றபப்டும் படுக்கை


இவ்வாரம் அமெரிக்க ஐக்கிய நாட்டில், நிறைவேற்றப்படும் இரு மரணதண்டனைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரான Barr அவர்கள், 'Christifideles Laici' விருதைப் பெறுவதற்கு தீர்மானித்திருப்பது, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானது – கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் இரு மரணதண்டனைகளை இரத்து செய்யுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களையும், சட்டத்துறைத் தலைவர் William Barr அவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு கொள்கை பணிக்குழுவின் தலைவரான பேராயர் Paul Coakley அவர்களும், வாழ்வை ஆதரிக்கும் பணிக்குழுவின் தலைவரான பேராயர் Joseph Naumann அவர்களும் இணைந்து, செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

விவிலியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் கொலைக்குப்பின், இந்தக் கொலையைச் செய்த காயினின் உயிரைப் பறித்துவிடாமல், அவரது வாழ்வை, கடவுள் காப்பாற்றியது, மற்றவர்கள், காயினைக் கொலை செய்யக் கூடாது (தொ.நூல். 4:15). என்பதற்கு விடுத்த எச்சரிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், வன்முறையைச் செய்தவர்களுக்கு, மறுவாழ்வு அளித்து, அவர்கள் தங்கள் வாழ்வைச் சீரமைக்க உதவவேண்டும் என்று கூறியுள்ளனர்.

கொலைக்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டியது சட்டப்படி சரியானதே, ஆயினும், அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைப்பது, சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் என்றுரைத்துள்ள ஆயர்கள், மரணதண்டனைகள் முற்றிலும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது மற்றும் அவசியமற்றது என்று, இப்போதைய மற்றும், முன்னாள் திருத்தந்தையர் கூறியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

200 கத்தோலிக்க தலைவர்கள் சட்டத்துறை தலைவருக்கு

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டு சட்டத்துறைத் தலைவர் William Barr அவர்கள், அந்நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவருக்கு வழங்கப்படவிருக்கும், 'Christifideles Laici' என்ற விருதை, அவர் ஏற்கக்கூடாது என்று, அந்நாட்டின் 200க்கும் அதிகமான கத்தோலிக்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 200க்கும் அதிகமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறையியலாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கையெழுத்திட்டு, Barr அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலில், செப்டம்பர் 23, இப்புதனன்று, அந்நாட்டில் நடைபெறவிருக்கும் 16வது தேசிய செப நிகழ்வில் வழங்கப்படவிருக்கும் 'Christifideles Laici' விருதை அவர் ஏற்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இவ்வாரத்தில் இடம்பெறும் இரு மரணதண்டனைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரான Barr அவர்கள், இந்த விருதைப் பெறுவதற்கு தீர்மானித்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது, மற்றும், நம் நம்பிக்கைக்கு முரணானது என்று, அந்த மடலில் கூறப்பட்டுள்ளது. (CNA/ICN) 

ROBERT JOHN KENNEDY: வியட்நாமில் புதிய உயர் குருத்துவக்கல்லூரிக்கு அனுமதி

ROBERT JOHN KENNEDY: வியட்நாமில் புதிய உயர் குருத்துவக்கல்லூரிக்கு அனுமதி:   வியட்நாமின் 27 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,824 மாணவர்கள், அந்நாட்டின் 11 உயர் குருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிபெற்று வருகின்றனர் ...

ROBERT JOHN KENNEDY: அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்

ROBERT JOHN KENNEDY: அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்:   விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெர...

ROBERT JOHN KENNEDY: சிறிய முயற்சிகள், பெரிய பலன்கள்

ROBERT JOHN KENNEDY: சிறிய முயற்சிகள், பெரிய பலன்கள்:   உலகில் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பசியால் துன்புறுவோரின் எண்ணிக்கையும், வீணாகும் உணவுப்பொருள்களின் அளவும் அதிகரித்துக...

ROBERT JOHN KENNEDY: தாழ்ச்சியால் உயர்ந்தவர்

ROBERT JOHN KENNEDY: தாழ்ச்சியால் உயர்ந்தவர்:   நவீன இயற்பியலின் இருபெரும் தூண்களில் ஒருவராக அறியப்படுகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) அவர்கள், தன்னை ‘கடற்கரையோரம் ஒதுங்கு...

ROBERT JOHN KENNEDY: இந்தியாவில் கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தோர் 50 இலட...

ROBERT JOHN KENNEDY: இந்தியாவில் கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தோர் 50 இலட...:   உலகில், கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் ப...

ROBERT JOHN KENNEDY: அனுபவத்தால் உணர வேண்டியது

ROBERT JOHN KENNEDY: அனுபவத்தால் உணர வேண்டியது:   வெளிச்சத்தை தொட்டுப்பார்க்க வேண்டும். சுவைத்துப்பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ உணர வேண்டும். ...

ROBERT JOHN KENNEDY: பெண்கள், சிறுமிகளுக்கு உரிமை மீறல்கள் அதிகம்

ROBERT JOHN KENNEDY: பெண்கள், சிறுமிகளுக்கு உரிமை மீறல்கள் அதிகம்:   தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியில், 192 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - உலகளாவிய...

ROBERT JOHN KENNEDY: உலகம், அணுப் பேரழிவின் நிழலிலே வாழ்ந்துகொண்டிருக்க...

ROBERT JOHN KENNEDY: உலகம், அணுப் பேரழிவின் நிழலிலே வாழ்ந்துகொண்டிருக்க...:   அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், அந்த ஆயுதங்களைக் களையும் பொதுவான பாதைக்குத் திரும்புவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கி...

ROBERT JOHN KENNEDY: இழந்ததைத் திருப்பிக் கொடு இறைவா!

ROBERT JOHN KENNEDY: இழந்ததைத் திருப்பிக் கொடு இறைவா!:   இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதை...

ROBERT JOHN KENNEDY: மங்கிப்போகும் விமர்சனங்கள்

ROBERT JOHN KENNEDY: மங்கிப்போகும் விமர்சனங்கள்:   வாழ்க்கைப் பயணத்தில் நாம் தயாரிக்கவேண்டியவை, நம்மோடு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியவை மூன்று. ஒன்று. வெறுக்காத இதயம். இரண்டாவது ...

ROBERT JOHN KENNEDY: கொள்ளை நோய் குறித்த தவறான தகவல்கள்

ROBERT JOHN KENNEDY: கொள்ளை நோய் குறித்த தவறான தகவல்கள்:   கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்துவங்கிய உடனேயே, தவறான தகவல்கள் பரவத்துவங்கியது மட்டுமின்றி, ஆபத்தான நல ஆலோசனைகள், பகைமையைத் தூண்டும்...

ROBERT JOHN KENNEDY: கடவுளே காப்பாற்று

ROBERT JOHN KENNEDY: கடவுளே காப்பாற்று:   மனதில் ஒன்றை நினைத்து, வாயில் வேறொன்றை பேசும் மனிதர்களை, இறைவன் எளிதில் கண்டுகொள்வார் கிறிஸ்டோபர்...

ROBERT JOHN KENNEDY: கோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு

ROBERT JOHN KENNEDY: கோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு:   கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஏற்கனவே விடுத்த இதே அழைப்ப...

ROBERT JOHN KENNEDY: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த...

ROBERT JOHN KENNEDY: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த...:   புத்தர் தன் சீடரிடம், "நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த மரணம் என்ற உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். ...

ROBERT JOHN KENNEDY: அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க...

ROBERT JOHN KENNEDY: அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க...:   பன்மைத்தன்மை கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பன்மைத்தன்மையை மதிக்கச் செய்வது அமைதி. இது, மனித மாண்பிற்கு உறுதியளிக்கிறது. போர்களின...

ROBERT JOHN KENNEDY: பொறுமைக்கு கிடைத்த வெகுமதி

ROBERT JOHN KENNEDY: பொறுமைக்கு கிடைத்த வெகுமதி:   வாய்ப்புக்கள் தவறிப்போனால், அதுகூட கடவுள் திட்டம் என்று கூறலாம். ஏனெனில் இதைவிட சிறந்த, நல்ல வாய்ப்பை வழங்க, கடவுளேகூட அதை தவி...

ROBERT JOHN KENNEDY: 2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தும் ...

ROBERT JOHN KENNEDY: 2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தும் ...:   மலாலா யூசுப்சாய் : 12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என வகுக்கப்பட்ட இலக்க...

வியட்நாமில் புதிய உயர் குருத்துவக்கல்லூரிக்கு அனுமதி

 வியட்நாம் கோவில் ஒன்றில் சிறார்


வியட்நாமின் 27 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,824 மாணவர்கள், அந்நாட்டின் 11 உயர் குருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிபெற்று வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வட வியட்நாமில், அரசின் அனுமதியைப் பெற்று, புதிய உயர் குருத்துவக் கல்லூரி ஒன்று அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியுள்ளது. 

Thai Binh மறைமாவட்டத்தில் புதிய வசதிகளுடன் திறக்கப்பட உள்ள இந்த திரு இருதய குருத்துவக்கல்லூரி, புதிய மாணவர்களைத் திரட்டவும், குருத்துவப்பயிற்சி வழங்கவும், ஜூலை மாத இறுதியில் வியட்நாம் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து, முழுவீச்சுடன் பணிகள் இடம்பெற்று வருவதாக, Thai Binh மறைமாவட்ட ஆயர் இல்லம் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

Thai Binh நகரில் துவக்கப்பட்டுள்ள இந்த உயர் குருத்துவக்கல்லூரி, மறைமாவட்ட குருத்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, ஏனைய மறைமாவட்டங்கள், துறவு சபைகள் என பலருக்கு உதவுவதாக இருக்கும் என மறைமாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 40 பேர் குருத்துவப்பணிக்கு தங்களை அர்ப்பணிக்க முன்வரும் Thai Binh மறைமாவட்டத்திலிருந்து, 6 மாணவர்களே, Hanoi  உயர் குருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்படுவதும், வேறு சிலர், ஏனைய குருத்துவக்கல்லூரிகளில் பயில்வதும், பலர் பயில இடமின்றி, குருத்துவக் கல்லூரியில் மறுக்கப்படுவதும் தொடரும் நிலையில், இம்மறைவமாவட்டத்தின் தொடர் முயற்சியால் தற்போது, புதிய உயர் குருமடம் பகுதியளவு செயல்படத் துவங்கியுள்ளது.

200 முதல் 300 குருத்துவ மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியுடன் கட்டப்பட்டுவரும் திரு இருதய உயர் குருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும்வரை, குருத்துவ மாணவர்கள், ஆயர் இல்லத்தில் தங்கியிருப்பர், என்கிறார் Thai Binh மறைமாவட்ட ஆயர் Peter Nguyen Van De.

1970 மற்றும் 71ம் ஆண்டில் போரின்போது மூடப்பட்ட இளங்குருத்துவ இல்லம் இருந்த இடத்தில் தற்போதைய புதிய உயர் குருத்துவக்கல்லுரி கட்டப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, வியட்நாமின் 27 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,824 மாணவர்கள், அந்நாட்டின் 11 உயர் குருத்துவக்கல்லூரிகளில் பயிற்சிபெற்று வருகின்றனர்.(UCAN)

அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்

 அவரவர் பார்வையில் விவிலியத்தில் காணப்படும் வேறுபட்ட விளக்கங்கள்


விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கார் ஓட்டுவதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த இளையமகன், முதல்முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று, வீட்டுக்கு வந்தார். அவருடைய அப்பா, இறைபக்தியுள்ள விவிலியப்போதகர். மகன், அப்பாவிடம் சென்று, வீட்டிலுள்ள காரை தான் ஓட்ட விழைவதாகக் கூறியபோது, அப்பா அவரிடம், "சரி மகனே, நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நீ உன் பாடங்களில் இன்னும் அதிக மதிப்பெண்கள் வாங்கு; தினமும் விவிலியத்தை வாசி; உன் தலைமுடியை வெட்டிவிடு. அதன்பின், கார் ஓட்ட உன்னை அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.

ஒரு மாதம் சென்று, மகன் திரும்பிவந்தபோது, அப்பா அவரிடம், "மகனே, நீ அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய்; தினமும் விவிலியம் வாசிக்கிறாய்; மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன் தலைமுடியை நீ இன்னும் வெட்டவில்லையே" என்று கூறினார்.

உடனே, மகன் அப்பாவிடம், "அப்பா, நான் விவிலியத்தை வாசித்தபோது, ஒன்றை கண்டுபிடித்தேன். விவிலியத்தில், சிம்சோன் நீளமான முடி வைத்திருந்தார். நோவா, மோசே, ஏன்... இயேசுவும் நீளமான முடி வைத்திருந்தனரே!" என்று பெருமையாகக் கூறினார். அப்பா மகனிடம், "நீ சொல்வது சரிதான், மகனே. ஆனால், நீ சொன்ன இவர்கள் அனைவரும், போகும் இடத்திற்கெல்லாம் நடந்தே சென்றனர்!" என்று பதிலளித்தார்.

விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

சிறிய முயற்சிகள், பெரிய பலன்கள்

 வீணாகும் உணவுப் பொருள்கள்


உலகில் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பசியால் துன்புறுவோரின் எண்ணிக்கையும், வீணாகும் உணவுப்பொருள்களின் அளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உணவை வீணாக்குவதில் முதல் வரிசையில் நிற்பது அமெரிக்க ஐக்கிய நாடு.

மேரி தெரேசா: வத்திக்கான்

 அன்று மட்டுமல்ல, இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்வது, அமெரிக்காவில் வேலை பார்ப்பது, அமெரிக்காவில் வரன் அமைவது இப்படி எல்லாமே கனவாக இருந்து வருகிறது. அயர்லாந்து நாட்டில் இத்தகையதொரு கனவில் வாழ்ந்த, பிராங்க் மெகொர்ட் (Frank McCourt, ஆக.19,1930 – ஜூலை,19, 2009))  என்ற, அயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளரின் தந்தை, அமெரிக்கா சென்றார். ஆனால், அமெரிக்காவில் அவர் எதிர்கொண்ட வறுமையும், நெருக்கடியும் அவரை அயர்லாந்திற்கே திரும்பக் கொண்டுவந்துவிட்டது. அவர் திரும்பி வந்ததைப் பார்த்த அவரின் கிராமத்து மக்கள் அவரிடம், புதையல் தேடிப்போவது போல எல்லாரும் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள், நீங்கள் மட்டும் ஏன் அயர்லாந்துக்கே திரும்பி வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், இது என்னுடைய கிராமம், எனது வீட்டிற்குத் திரும்பி இருக்கிறேன் என்று பதில் சொன்னார். அப்போது எழுத்தாளர் பிராங் அவர்களுக்கு வயது ஐந்து. அவரது அப்பா மிதமிஞ்சிய குடிகாரர். பொறுப்பாக வேலைசெய்யத் தெரியாதவர். அவர் எல்லாரிடமும் சினம்கொள்வார். எரிந்து விழுவார். வறுமையும் இறப்பும் அவர்களது வீட்டில் நிரந்தர விருந்தினராக இருந்தன. அவர்கள் வீட்டின் அச்சாணியாக இருந்த, அவரின் அம்மா, தன் கணவரின் அத்தனை கொடுமைகளுக்கு மத்தியிலும் குடும்பத்தை முன்னேற்ற வேண்டுமென்பதில் முனைப்பாய் இருந்தார். தாங்க முடியாத வறுமையின் காரணமாக, அந்தக் குடும்பம் வாடகை இல்லாத ஒற்றை அறையில் தங்கியது. அந்தப் பகுதியில் இருந்த ஒரேயொரு கழிப்பறையைத்தான், அங்கிருந்த 16 குடும்பங்களும் பயன்படுத்தின. போதுமான உணவு இல்லை. குளிர் ஆடைகள் இல்லை. நோயில் குழந்தைகள் இறந்துபோயினர். குழந்தைகளைப் புதைப்பதற்குக்கூட அவர்களிடம் காசு கிடையாது. அந்தச் சூழலிலும், பிராங்கின் அப்பா, தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கத்தினார். அந்த ஒற்றை அறைதான் அவர்களுக்கு புகலிடம்.

பிராங் அவர்கள், வறுமை தாங்க இயலாமல், தெருவில் கிடந்த பழங்களை எடுத்துச் சாப்பிட்டார். அச்சமயத்தில் ஒருநாள், பிராங்கைப் பார்த்த சிறுவன் ஒருவன் பொறாமையுடன், உனக்காவது அப்பா அம்மா இருக்கிறார்கள், எனக்கு அவ்வாறு யாருமே இல்லை. பசி மட்டுமே என்னோடு இருக்கிறது, இங்கு உள்ள வீடுகள், சுவர்கள் போன்ற எல்லாவற்றையும் கடித்துத் தின்றுவிடலாம்போல் இருக்கிறது என்று சொன்னான். இந்த பின்புலத்தில் வளர்ந்த பிராங் அவர்கள், பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று, ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் அவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் உயர்ந்தார். பிராங் அவர்கள், பல ஆண்டுகளுக்குப்பின், ஒருசமயம் அயர்லாந்து சென்று தான் வாழ்ந்த வீட்டுக்குள் நுழைந்தார். பழைய துன்ப நினைவுகள் அவர் மனதில் கிளம்ப, உணர்ச்சிமேலிட்டு அழுதார். அச்சமயத்தில் அந்த வீட்டின் இதயம் துடித்துக்கொண்டிருப்பதை அவரால் கேட்க முடிந்ததாம். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆலன் பார்க்கர் (Sir Alan William Parker ) என்பவர், எழுத்தாளர் பிராங் அவர்கள், தன் வாழ்வு பற்றி எழுதி, 1996ம் ஆண்டில் வெளியிட்ட "Angela's Ashes" என்ற நாவலைப் பயன்படுத்தி, அதே பெயரில், ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். சிறிது வெளிச்சம் என்ற நூலில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள், இந்த தகவலை பதிவுசெய்துள்ளார். இந்த நாவல் இரு ஆண்டுகளுக்குமேல் விற்பனையில் இருந்து நாற்பது இலட்சம் பிரதிகளை விற்றது. இந்தப் படமும், நாவலும் அடைந்த சிறந்த வெற்றி, பிராங்க் மெகொர்ட் அவர்களை, மிகச் சிறந்த எழுத்தாளராக ஆக்கியது. அவர், 1997ம் ஆண்டில், அந்த நாவலுக்காக புலிட்சர் (Pulitzer) விருதும் பெற்றார் என்பது கூடுதல் செய்தி. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்

எழுத்தாளர் பிராங் அவர்களது குடும்பம் போன்று, இன்று எத்தனையோ குடும்பங்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த குடும்பங்கள் கடும் வறுமையில் உழல்கின்றன. குறிப்பாக இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இந்த நிலை, மேலும் பலரை வறுமைக்கு உள்ளாக்கியுள்ளது. செப்டம்பர் 27, இஞ்ஞாயிறன்று திருஅவை புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை நினைவுகூர்ந்தது. பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாமல், தங்கள் சொந்த இடங்களைவிட்டு புலம்பெயரும் இந்த மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார். வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் ஒரு பகுதியில், “கவனிக்கப்படாத வானதூதர்கள்” என்ற பெயரில், புலம்பெயர்ந்தோரின் உண்மையான நிலையை தத்ரூபமாகச சித்திரத்துள்ள உருவங்களைச் சுட்டிக்காட்டி, இயேசுவும், அவரது குடும்பமும் கட்டாயமாகப் புலம்பெயர்ந்ததுபோல் இவர்களும் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறி, அவர்களுக்காக இறைவனை மன்றாடினார். 

உணவுப்பொருள் வீணாவதைக் குறைக்கும் உலக நாள்

செப்டம்பர் 29, இச்செவ்வாயன்று, உணவுப்பொருள் வீணாவதைக் குறைக்கும் உலக நாள், முதன்முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கி, அவை பொறுப்புணர்வுடன் நுகரப்படுவதற்கு, உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2019ம் ஆண்டில், 74வது ஐ.நா.பொது அவையில், இந்த உலக நாள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உலக நாள் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் இடம்பெறுவதால், இந்த காலக்கட்டத்தில் உணவுப்பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்முறை, அவை நுகரப்படும்முறை மற்றும், வீணாக்கப்படும்முறை ஆகியவற்றை குறித்து சிந்திக்க, நாம் அழைக்கப்படுகிறோம். இந்த கொள்ளைநோய் பல நாடுகளில் உணவுப் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. உலகில் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பசியால் துன்புறுவோரின் எண்ணிக்கையும், வீணாகும் உணவுப்பொருள்களின் அளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உணவை வீணாக்குவதில் முதல் வரிசையில் நிற்பது அமெரிக்க ஐக்கிய நாடு. கடந்த 2019ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 1,010 கோடி டாலர் மதிப்புகொண்ட உணவு, வீணாக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும் 8 கோடியே 80 இலட்சம் டன் உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுகின்றன.

"உணவு வீணாதல், மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை" என்று, அமெரிக்க சமையல் கலை வல்லுனர், Max La Manna அவர்கள் சொல்லியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி, விளைவிக்கப்படும் நிலத்திலேயே இழக்கப்படுகிறது அல்லது, வீணாகிறது. இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாகும். உணவு வீணாதல் என்பது, உணவு பொருட்கள் வீணாவதை மட்டுமே குறிப்பதில்லை. அதோடு, அந்த உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும், போக்குவரத்து அனைத்தும் வீணாவதையும் குறிக்கிறது. தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்காதிருத்தல், உணவு பொருட்களைச் சரியாகச் சேமித்து வைத்தல், குளிர்சாதன பெட்டியை முறையாகப் பயன்படுத்தல், வீட்டில் இருக்கும் பொருட்களில் உணவைத் தயார் செய்தல், முடிந்தால் வீடுகளிலே உரம் தயாரித்தல். இவ்வாறு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில், உணவு வீணாவதைத் தவிர்க்கலாம். எனவே, சிறிய முயற்சிகள், பெரிய பலன்களை நல்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உணவகம் ஒன்றில் அழுக்கான உடை அணிந்து தோற்றத்திலும் அழுக்காக காணப்பட்ட ஒருவர் உணவருந்தச் சென்றார். அவர் அமர்நித்ருந்த மேஜையில், விலையுயர்ந்த கோட், சூட் அணிந்த ஒருவரும் அமரவேண்டிய சூழ்நிலை உருவாகியது. முதலில் அந்த வறியவருக்கு 5 துண்டுகளாக, பிட்சா பரிமாறப்பட்டது. எதிரே அமர்ந்திருந்த அந்த மனிதர், தனது மடிக்கனனியைப் பார்த்தவாறே, அந்த ஏழைக்குப் பரிமாறப்பட்ட பிட்சாத் துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த ஏழையும் அவற்றை எடுத்துச் சாப்பிட்டார். கடைசியில் இருந்த துண்டு பிட்சாவை இருவரும் எடுத்தனர். அப்போது அந்த மனிதருக்குக் கோபம். உடனே அந்த வறியவர், அந்த பிட்சா துண்டை இரண்டாகப் பிரித்துக்கொடுத்தார். அதற்கு அந்த ஆள், இங்க பாரு நீ வெளியே போய், உனது உணவுக்காக உழைச்சு சாப்பிடணும் என்று கோபமாகத் திட்டினார். அதேநேரம், அவருக்குரிய பிட்சா கொண்டுவந்து வைக்கப்பட்டது. வெட்கத்தால் குறுகிப்போன அவர், அந்த ஏழையிடம், உனக்குரிய கடைசித் துண்டு பிட்சாவையும் பகிர உனக்கு எப்படி மனது வந்தது என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை, ஐயா, என்னிடம் அதிகம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், பகிர்வது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறினார். பின்னர் அந்த ஏழையின் செயல், அந்த ஆளையும் பகிர்ந்து உண்ண வைத்தது.

உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்திய நடுவண் அரசின் வேளாண் கொள்கையை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் 2020ம் நிதியாண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.39 விழுக்காடு குறைந்துள்ளது என, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இது வரலாறு காணாத சரிவு என்றும், ஏழைகள் தங்களின் சாப்பாட்டுச் செலவை குறைத்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு  உணவளிக்கும் வகையில், AMAFHHA போன்ற பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள், சமுதாய குளிர்சாதனப் பெட்டி முறை ஒன்றை அமைத்து உதவி வருகின்றன. பல இளைஞர்கள், விழாக்களில் மீதப்படும் உணவுகளைச் சேகரித்து வறியோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். உணவை வீணாக்கும்போது, பசியால் மடியும் மனிதர்களை, ஒட்டிய வயிற்றைக் காட்டி கையேந்தும் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். சிறிய முயற்சிகள், பெரிய பலன்களைத் தரும் என்பதை உணர்வோம்.

தாழ்ச்சியால் உயர்ந்தவர்

 நிலா


நவீன இயற்பியலின் இருபெரும் தூண்களில் ஒருவராக அறியப்படுகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) அவர்கள், தன்னை ‘கடற்கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களைப் பொறுக்கும் சாதாரண ஒரு சிறுவன்’ என்றே சொல்லி மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்  

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள், தான் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு பற்றி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வகுப்புகள் நடத்தி வந்தார். ஒருநாள் அவருடைய வாகன ஓட்டுநர், அவரிடம், “ஐயா! நீங்கள் போகிற இடங்களில் எல்லாம் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி வகுப்புகள் நடத்தி வருவதால், உங்களோடு வருகின்ற எனக்கு அது மனப்பாடம் ஆகிவிட்டது. இப்பொழுது என்னால் அந்தச் சார்பியல் கோட்பாட்டை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார். உடனே ஐன்ஸ்டீன் அவர்கள், “அப்படியா! மிகவும் மகிழ்ச்சி! இன்று நான் இந்தச் சார்பியல் கோட்பாடு பற்றி பல்கலைக்கழகம் ஒன்றில் பாடம் நடத்தவேண்டியிருக்கின்றது. அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் என்னை இதுவரை பார்த்தது கிடையாது. அதனால் நீ என்னுடைய ஆடையை அணிந்துகொண்டு சார்பியல் கோட்பாட்டைப் பற்றிப் பாடம் எடு. நான் உன்னுடைய ஆடையை அணிந்துகொண்டு, பின்னால் அமர்ந்து நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார். அதன்படி, அந்த பல்கலைக்கழத்தில், ஐன்ஸ்டீன் அவர்களின் வாகன ஓட்டுநர், சார்பியல் கோட்பாடு குறித்து வகுப்பெடுக்கத் தொடங்கினார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களோ, அனைவரோடும் அமர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருடைய வாகன ஓட்டுநர் சிறிதுகூட பிசுறு இல்லாமல், தான் பாடம் எடுப்பதுபோல் அப்படியே பாடம் எடுத்தார். ஓட்டுனர் பாடம் எடுத்து முடித்ததும், கேள்வி நேரம் வந்தது. அப்பொழுது அவையிலிருந்து ஒருவர் எழுந்து, அவரிடம் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி மிகவும் கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டார். தன்னிடம் இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டதும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் உடையில் இருந்த வாகன ஓட்டுநர் சிறிதும் பதற்றமடையாமல், தன்னிடம் கேள்விகேட்டவரிடம், “இது ஒரு சாதாரணக் கேள்வி. இக்கேள்விக்கான பதிலை என்னுடைய வாகன ஓட்டுநரே சொல்வார்” என்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களைச் சுட்டிக்காட்டினார். அறிவியலாளரும், தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல், மிகவும் தாழ்ச்சியோடு கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (The Storyteller’s Minute- Frank Mihalich, SVD)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) அவர்கள், நவீன இயற்பியலின் இருபெரும் தூண்களில் ஒருவராக அறியப்படுகின்றவர். ஜெர்மனியைச் சார்ந்த இவரை எல்லாரும் மிகப்பெரிய மேதை என்று போற்றினாலும், இவர் தன்னை ‘கடற்கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களைப் பொறுக்கும் சாதாரண ஒரு சிறுவன்’ என்றே சொல்லி மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். (நன்றி அ.பணி. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்)

இந்தியாவில் கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தோர் 50 இலட்சம்

 இந்தியாவில் கோவிட் சோதனைக்காக காத்திருப்போரின் வரிசை


உலகில், கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60 இலட்சத்து 74 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 50 இலட்சத்து 16 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2 விழுக்காட்டினரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 7 கோடியே 19 இலட்சத்து 67 ஆயிரத்து 230 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இத்திங்கள் இந்திய நேரம் நண்பகல் ஒருமணி வரையுள்ள நிலவரப்படி, உலகில் கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர், 2 கோடியே 46 இலட்சத்து 42 ஆயிரத்து 17 பேர் இந்நோயிலிருந்து மீண்டுள்ளனர். (Dinamalar)

அனுபவத்தால் உணர வேண்டியது

 வெளிச்சத்தை உணர கண்கள் வேண்டும்


வெளிச்சத்தை தொட்டுப்பார்க்க வேண்டும். சுவைத்துப்பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ உணர வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

பார்வையற்ற இளைஞர் ஒருவரை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள், “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்பமறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞர், “வெளிச்சத்தை நான் தொட்டுப்பார்க்க வேண்டும். சுவைத்துப்பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்றார்.

அவருடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்குப் புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை, அவனை நம்பவைக்கும் செயலை நான் செய்யமாட்டேன். இப்போது அவனுக்குத் தேவை, பார்வை. வெளிச்சம்பற்றிய விளக்கமல்ல. அவனுக்குப் பார்வை வந்துவிட்டால், விளக்கம் தேவைப்படாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்று பார்வை கிடைக்கச்செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை வழியாக அவருக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞர் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது”, என்று கூறினார். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறியபோது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞர், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றார்.

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை, ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

பெண்கள், சிறுமிகளுக்கு உரிமை மீறல்கள் அதிகம்

 இந்தியச் சிறார்

தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியில், 192 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - உலகளாவிய அமைப்பு ஒன்றின் புதிய அறிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் பெண்கள் மற்றும், சிறாரின் உயிரிழப்புக்கள் குறைந்துவந்த நிலையில்,  இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோய், போர்கள், காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகள் ஆகியவை, இந்நிலைக்கு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன என்று, செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று வெளியான புதிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

யுனிசெப், மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண்கள், எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு, உலக வங்கி, உலக நலவாழ்வு ஆகிய, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள, “ஒவ்வொரு பெண், ஒவ்வொரு குழந்தை” என்ற உலகளாவிய இயக்கம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கள், குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவந்தது, கடந்த பத்து ஆண்டுகளில், நூறு கோடிக்கு அதிகமான சிறாருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மற்றும், ஏறத்தாழ 2 கோடியே 50 இலட்சம் குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டன என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.

தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியில், 192 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறுமிகளும், பெண்களும் குடும்ப வன்முறை மற்றும், தவறான பயன்பாடுகளுக்கு அதிகம் உள்ளாகியுள்ளனர் என்றும், வறுமையும் பசியும் அதிகரித்துள்ளன என்றும், அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க உலகினர் அனைவரும் உடனடியாக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் மற்றும், நலவாழ்வு பராமரிப்பு அமைப்புமுறைகளை உறுதிப்படுத்தவேண்டும், இதன் வழியாக, மக்களின் வாழ்வைப் பாதுகாத்து, காப்பாற்ற முடியும் என்று, அந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

உலகம், அணுப் பேரழிவின் நிழலிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது

 அணு குண்டு வெடிப்பு


அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், அந்த ஆயுதங்களைக் களையும் பொதுவான பாதைக்குத் திரும்புவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, எல்லா நாடுகளையும் பாதிக்கும் - ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், செப்டம்பர் 26, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளுக்கென்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கென்று, தன்னை அர்ப்பணிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஏறத்தாழ, 75 ஆண்டுகள் ஆகியபின்னரும், நமது உலகம், அணுப் பேரழிவின் நிழலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிரிவினை, நம்பிக்கையின்மை மற்றும், உரையாடலின்மை ஆகியவை, அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளில் காணப்படுகின்றன என்றும், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு குறித்த போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, அணு ஆயுதங்கள் முன்நிறுத்தும் ஆபத்தும் மிகவும் கடுமையாய் உள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், அந்த ஆயுதங்களைக் களையும் பொதுவான பாதைக்குத் திரும்புவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அந்த நாடுகளை மட்டுமல்லாமல், எல்லா நாடுகளையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையதள உலகில் ஒழுங்குமுறையின்மை, காலநிலை மாற்றம், சமத்துவமற்றநிலை, கோவிட்-19 கொள்ளைநோய் போன்ற அனைத்தும், உலகின் பலவீனமான தன்மையை பரவலாக வெளிப்படுத்தியுள்ளன என்றுரைத்துள்ள ஐ.நா. பொதுச்செயலர், உலகளாவிய சட்டத்தின் அடிப்படையில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கையை உருவாக்கவேண்டும், அந்நிலை, இவ்வுலகை அணு ஆயுதங்களற்ற இடமாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கு உதவும் என்று கூறியுள்ளார்.

அணு ஆயுதமற்ற உலகம் என்ற ஒப்பந்தத்தில் 61 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன என்றாலும், இவற்றில், 14 நாடுகளே தங்கள் நாட்டின் அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இழந்ததைத் திருப்பிக் கொடு இறைவா!

 தன் முன்னோர்களுக்காக செபிக்கும் இந்து நண்பர்


இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்த மனிதன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

நன்றாக வாழ்ந்த ஒருவர், வயதான காலத்தில், தனது வறுமையைப் போக்க, தான் இழந்த பொருட்களையெல்லாம் திரும்பத் தரவேண்டுமென இறைவனிடம் முறையிட்டார்.

“இறைவா, என் வேண்டுதலை ஏற்று, நான் இழந்ததையெல்லாம் எனக்குத் திரும்பக்கொடு” என்று சொல்லி வேண்டினார். அவரது வேண்டுதலைக் கேட்டு இரங்கிய இறைவன், அவரிடம், “பக்தனே, நீ இழந்தவை எவை?” என்று கேட்டார்.

“நான் பலவும் இழந்திருக்கிறேன். கால மாற்றத்தில் என் இளமையை இழந்தேன், என் அழகை இழந்தேன், வயதாக ஆக, உடல் நலத்தை இழந்தேன். இப்படியே நான் இழந்தது ஏராளமாக இருக்கின்றன” என்று சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் அவர், “நான் எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் மீண்டும் தா” என்று இறைவனிடம் கேட்டார்.

அதைக் கேட்டுச் சிரித்த இறைவன், “பக்தனே, நீ கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பயனால் வறுமையை இழந்தாய். உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதைப்போன்று இன்னும் பல இருக்கின்றன. நீ இழந்த இவற்றையெல்லாம் திரும்பத் தரட்டுமா?” என்று கேட்டார்.

அப்போதுதான் அவர், இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தார்.

மங்கிப்போகும் விமர்சனங்கள்

 இந்தியச் சிறுமிகள்


வாழ்க்கைப் பயணத்தில் நாம் தயாரிக்கவேண்டியவை, நம்மோடு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியவை மூன்று. ஒன்று. வெறுக்காத இதயம். இரண்டாவது வாடாத புன்னகை. மூன்றாவது அடுத்தவரை புண்படுத்தாத சொற்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு வீட்டில் சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு வருகிறவர்களிடம், மாமா, நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுக் கேட்டு, அவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு வந்தார். வளர்ந்த பிறகு, அந்தச் சிறுமிக்கு தன்னைப் பற்றி புரிய ஆரம்பித்தது. அப்போது, தான் சிறுவயதில் மற்றவரிடம் கேட்டு எழுதி வைத்திருந்த நோட்டை எடுத்துப் பார்த்தார் அவர். ஆனால், அந்த எழுத்துக்கள் எல்லாம் மங்கி இருந்தன. அப்போது அச்சிறுமியின் அருகிலிருந்த அப்பா சொன்னாராம் – மகளே, மற்றவர்களின் உன்னைப் பற்றிய கணிப்பு காலப்போக்கில் மங்கிவிடும். ஆனால், உனக்கு இருக்கும் உன்னைப் பற்றிய கணிப்புதான் நிலைத்திருக்கும் என்று.

அன்பு இதயங்களே, என்னைப் பற்றி மற்றவர் விமர்சித்து, மனதை அதிகம் புண்படுத்துகிறார்களே என்று, நம்மில் பலர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. ஓர் ஊருக்குச் செல்லவேண்டும் என்றால், அந்த ஊருக்குத் தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக்கொள்வோம். நாம் செல்லும் இடத்திற்கு இடம், நம் தயாரிப்பும் மாறுகின்றது. அதுபோல, வாழ்க்கைப் பயணத்தில் நாம் தயாரிக்கவேண்டியவை, நாம் நம்மோடு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியவை மூன்று. ஒன்று. வெறுக்காத இதயம். இரண்டாவது வாடாத புன்னகை. மூன்றாவது அடுத்தவரை புண்படுத்தாத சொற்கள். இந்த மூன்றும் இருந்தால் வாழ்க்கையை நாம் மகிழ்வோடு கடந்துவந்து விடலாம். எவரது விமர்சனம் பற்றியும் கவலைப்பட அவசியமிருக்காது (நன்றி திருவாளர் அருள்பிரகாசம்)

கொள்ளை நோய் குறித்த தவறான தகவல்கள்

 கோவிட் 19 பற்றிய தகவல்களை வெளியிட பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்


கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்துவங்கிய உடனேயே, தவறான தகவல்கள் பரவத்துவங்கியது மட்டுமின்றி, ஆபத்தான நல ஆலோசனைகள், பகைமையைத் தூண்டும் பேச்சுக்கள், போன்றவையும் பரவத்துவங்கின

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த உறுதியற்ற பல தகவல்கள் மிக வேகமாக பரவி வருவதைத் தடுக்க, நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, ஐ.நா. நிறுவனம்.

வரலாற்றில் முதன்முறையாக, தொழில்நுட்பங்களும், தகவல் துறையும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு, இன்றைய கொள்ளைநோய் குறித்த தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டுவரும் வேளையில், தவறான தகவல்களால், பல இழப்புகளும், காலதாமதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன என்று, ஐ.நா.வும், அதனோடு பணிபுரியும்  நிறுவனங்களும் கூறுகின்றன.

கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதுடன், மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மதிக்கவும் வேண்டும், அதேவேளை, தகவல் தொடர்பு ஊடகங்களால் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் வேண்டும் என விண்ணப்பிக்கின்றன, இவ்வமைப்புக்கள்.

தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதில் மக்களுடன் சேர்ந்து அரசுகள் பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ள இவ்வமைப்புகள், நோய் தீர்வுக்கான வழிகளைக் கண்டறிவதிலும் பொதுமக்களின் உதவி நாடப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளன.

கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்துவங்கிய உடனேயே, தவறான தகவல்கள் பரவத்துவங்கியது மட்டுமின்றி, ஆபத்தான நல ஆலோசனைகள், பகைமையைத் தூண்டும் பேச்சுக்கள், போன்றவையும் பரவத்துவங்கின என்று ஐ.நா. நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் அமைப்புகள் கூறியுள்ளன.

இதற்கிடையே, இந்த கோவிட்-19 கொள்ளைநோயால் உலகின் 8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துக்கள் வழங்கப்படமுடியாத நிலை உருவாகியுள்ளது என்று கூறிய WHO என்ற உலக நலவாழ்வு அமைப்பு, நல்ல, பயனுள்ள, பாதுகாப்பான, விலைகுறைந்த கோவிட்-19 நோய் தடுப்பு மருந்துக்களை, அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கும் திட்டங்களை தீட்டிவருவதாக அறிவித்துள்ளது.

கடவுளே காப்பாற்று

 இறைவனிடம் இறைஞ்சுதல்


மனதில் ஒன்றை நினைத்து, வாயில் வேறொன்றை பேசும் மனிதர்களை, இறைவன் எளிதில் கண்டுகொள்வார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு மனிதர் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டார். அந்தப்பிடி தளர்ந்தால், பாதாளத்தில் விழும் அபாயம் இருந்தது. அவர் இது வரை கடவுளை நம்பியதில்லை. இப்போதோ, அவர் கடவுளை நினைத்து, “கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீதான் காப்பாற்ற வேண்டும்” என வேண்டினார்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மனிதனே, நீ என்னை நம்பமாட்டாய்” என்றது. உடனே அம்மனிதர், “கடவுளே, என்னைக் கைவிட்டு விடாதே... நான் உன்னை நிச்சயம் நம்புகிறேன்” என்றார்.

அந்தக் குரலோ தொடர்ந்து, “எனக்கு நம்பிக்கை இல்லை” என்றது. “கடவுளே, நீ தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று அந்த மனிதர் அழுகையோடு கூறினார்.

உடனே அந்தக் குரல், “அப்படியானால் சரி, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் அந்த வேரை விட்டுவிடு...” என்றது. அதற்கு மனிதர், “வேரை விட்டுவிட்டால், நான் கீழே விழுந்து இறந்து விடுவேனே?” என்றார்.

அதற்குப் பின், வானத்திலிருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை.

கோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு

 ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்


கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஏற்கனவே விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள், மற்றும், பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன - ஐ.நா. தலைமை பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருங்காலத்தில் உலகினர் அனைவரும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களுக்கு ஒத்திகையாக, கோவிட்-19 கொள்ளைநோய் உள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா. பொது அவையின் 75வது அமர்வில் உரையாற்றினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும், உயர்மட்ட அளவிலான ஐ.நா. பொது அவையின் இணையவழி அமர்வில், செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோயின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு, உலக அளவில் ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகின்றது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். .

ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள இன்றைய உலகில், ஒருமைப்பாட்டை, ஒவ்வொருவரும், தங்களின் சுயவிருப்பமாகத் தெரிவு செய்யவேண்டும் என்ற எளிமையான உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இதனை நாம் உள்வாங்க தவறினால், எல்லாருக்குமே இழப்பே நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஐ.நா.வின் ஆண்டு நடவடிக்கைகள் பற்றி விளக்கிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோய்க்கு மத்தியில், தாழ்ச்சியிலும், ஒற்றுமையிலும் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த 75வது பொது அமர்வில், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள இயலாமல், காணொளிகள் வழியாக, தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்தனர்.

தற்போதைய கொள்ளைநோய், நம் வலுவின்மைகள் மற்றும் சமத்துவமின்மைகளை வெளிப்படுத்தியுள்ளது, இது உலக அளவில், நலவாழ்வு, பொருளாதாரம், மற்றும், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிலும், பிரச்சனைகளை  உருவாக்கியுள்ளது, மற்ற சவால்களுக்கு மத்தியில், மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இச்செவ்வாய் நிலவரப்படி, 3 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், இந்த தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 9,62,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கவலை தெரிவித்தார்.

உலகளாவிய போர்நிறுத்தம்

இந்த கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகக் கூறிய ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், கடந்த மார்ச் மாத்தில் விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன, பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்களும் பதில் அளித்துள்ளன, சில குழுக்கள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார். (UN)

அலைபாயும் மனதை அமைதிப்படுத்த...

 மனதைக் கட்டுப்படுத்தி, ஆழ்நிலை தியானத்தில் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள புத்தரின் சிலை


புத்தர் தன் சீடரிடம், "நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த மரணம் என்ற உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு" என்றார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

புத்தரின் சீடர்களில் ஒருவர், அவரை அணுகி, "ஐயா, நான் என்னதான் முயன்றாலும், என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், நீங்களோ மிக எளிதாக மனதைக் கட்டுப்படுத்துவதைக் காணமுடிகிறது. என்னால், பிறரைப்பற்றி குறைகூறாமல் இருக்கமுடியவில்லை, ஆனால், நீங்கள் யாரையும் குறைகூறி நான் பார்த்ததில்லை. உங்களுக்கும், எனக்கும், ஏன் இந்த வேறுபாடு?" என்று கேட்டார்.

புத்தர் அவரை ஆழ்ந்து நோக்கி, "நீ கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன், ஒன்றை உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் நீ இறந்துவிடுவாய்" என்று கூறினார்.

சற்றும் எதிர்பாராத வேளையில், புத்தர் இவ்வாறு சொன்னதைக்கேட்டு, வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த சீடர், தன் வீட்டிற்குச் செல்ல, புத்தரிடம் உத்தரவு கேட்டார். புத்தர் அவரிடம், "இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளனவே. ஏன் இந்த அவசரம்? நாம் தொடர்ந்து பேசுவோம்" என்று கூறினார். "இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது? நான் வீட்டுக்குச் சென்று இறப்பதே மேல்" என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் புறப்பட்டார் சீடர்.

வீட்டிலிருந்த அனைவரிடமும் தான் 24 மணி நேரங்களில் இறக்கப்போவதாகச் சொன்னதும், அனைவரும் அழுது புலம்பினர். சீடர், ஓர் அறைக்குள் சென்று, படுக்கையில் படுத்துக்கொண்டு தொடர்ந்து அழுதார்.

அந்த நாள் முடிய ஒருமணி நேரம் இருந்தபோது, புத்தர், சீடரது வீட்டுக்குள் சென்றார். அங்கு படுத்திருந்த சீடரிடம், "இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது. நாம் பேசுவோமே" என்று கூற, சீடர் அவரிடம், "அமைதியாக என்னை சாகவிடுங்கள். இந்த நேரத்தில் என்ன பேசவேண்டியுள்ளது?" என்று சலிப்புடன் கூறினார்.

புத்தர் அவரிடம், "சரி, நீ ஒன்றும் பேசவேண்டாம். நான் கேட்கும் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்" என்று கூறியபின், "இந்த 24 மணி நேரமும் உன் மனம் கட்டுப்பாடின்றி அலைபாய்ந்ததா?" என்று கேட்டார். "அது எப்படி முடியும்? சாவைத்தவிர என் மனம் வேறு எதையும் சிந்திக்கவில்லை" என்று சொன்னார், சீடர்.

"இந்த நாள் முழுவதும் நீ யாரையாவது குறை கூறினாயா? இன்று முழுவதும், பொய் சொன்னாயா? திருடினாயா?" என்று புத்தர் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டதும், "இல்லவே இல்லை. சாவு மட்டுமே என் சிந்தனையில் இருந்தது" என்று சீடர் கூறினார்.

புத்தர் தன் சீடரிடம், "இன்று காலை நீ கேட்ட கேள்விக்குரிய விடையை இப்போது கண்டுபிடித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்" என்று சொன்னதும், சீடர் அவரை கேள்விக்குறியுடன் நோக்கினார்.

புத்தர் தொடர்ந்து பேசினார்: "இன்று இறப்போமா, நாளை இறப்போமா என்று எனக்கும்  தெரியாது, உனக்கும் தெரியாது. ஆனால், வாழ்வின் இறுதியில் அனைவரும் இறப்போம் என்பது, உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த உண்மையை நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்ததால், வேறு எந்த தவறையும் உன்னால் செய்யமுடியவில்லை. நீ இந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த இந்த உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு" என்றார்.

அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க...

 அமைதிப் புறா


பன்மைத்தன்மை கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பன்மைத்தன்மையை மதிக்கச் செய்வது அமைதி. இது, மனித மாண்பிற்கு உறுதியளிக்கிறது. போர்களின்றி இருப்பது அமைதி அல்ல, மாறாக, நீதி மேலோங்கி இருப்பதே அமைதியாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்குப் பகுதியில், ஒரு சிறிய பண்ணை வீட்டில் வாழ்ந்துவந்த பண்ணை விவசாயி ஒருவர், பல ஆண்டுகளாக, கைக்கடிகாரம் ஒன்றை தன் கையில் கட்டியிருந்தார். அவரைப் பொருத்தவரை, அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. நல்ல பல வாய்ப்புக்கள், நல்ல பல தருணங்கள், விடயங்கள், வெற்றிகள் போன்றவை, அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை, அவருக்கு இருந்தது. ஒரு நாள், அவர், தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காணவில்லை என்று, பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். உடனே பரபரப்பாகி, அவர் தன் வேளாண் கிடங்குக்குள் போய், அதைத் தேடினார். எவ்வளவு நேரம் தேடியும் அது கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்த அவர், தனது கிடங்குக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சில சிறாரைக் கவனித்தார். அவர்களை அவர் அழைத்து, செல்லங்களா, இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்” என்று சொன்னார். சிறாரும் துள்ளிக்குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனை பேரும் உள்ளே இருந்த வைக்கோல்போர், புல், பூண்டு போன்ற எல்லாவற்றிலும் தேடினார்கள், அது கிடைக்கவில்லை. அவர்கள், சோர்ந்துபோய்  வெளியே வந்து, பண்ணையாளரிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றார்கள். அந்த நேரத்தில், அச்சிறாரில் ஒருவன், தயங்கித் தயங்கி அவரருகே வந்து, “ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்புத் தருவீர்களா, நான் அந்த கைக்கடிகாரம் கிடைக்கிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்று கேட்டான். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். கிடங்குக்குள் நுழைந்த அந்தச் சிறுவன் கதவைச் சாத்திக்கொண்டான். ஏறத்தாழ பதினைந்து நிமிடங்களில், அவன் கதவைத் திறந்துகொண்டு, கையில் கைக்கடிகாரத்துடன் வெளியே வந்தான். பண்ணையாருக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. “நீ மட்டும் எப்படி கண்ணா சரியா அதைக் கண்டுபிடித்தாய்?’’ என்று அவர் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “ஐயா... நான் உள்ளே போய் எதுவுமே செய்யவில்லை. கிடங்குக்கு நடுவில், கண்ணை மூடி, ஐந்து நிமிடம் உட்கார்ந்து காத்திருந்தேன். அந்த அமைதியில், கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசைக்குப் போனேன். கண்டுபிடித்தேன். எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’’ என்று, மிகச் சாதாரணமாகச் சொன்னான்.

இக்காலக்கட்டத்தில், மண்ணாசை, பொருளாசை, நாற்காலி ஆசை... இவ்வாறு பல்வேறு பேராசைகளின் காரணமாக, தனி மனிதரும், நாடாளும் அரசியல் தலைவர்களும், தங்களையே துன்புறுத்திக்கொண்டு, மற்றவரையும் துன்புறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், மனதில் அமைதி இல்லாமை. தனி மனிதரின் உள்ளாழத்தில் அமைதி கிட்டினால், அந்த அமைதி அலைகள், பிரபஞ்சத்திலும் பரவி, உலகில் அமைதி நிலவ உதவும். “மோனத்திலே அன்னதானத்திலே சிறந்தநாடு” என்று, பாரதத்தைப் பாடினார் பாரதி. அக்காலத்தில், தருமபுரத்தில் புலியும், பசுவும் ஒன்றாக நின்று நீர் அருந்துமாம். சிராப்பள்ளியில் பசுவும், புலியும் ஒன்றாக விளையாடுமாம். காரணம், அந்த ஊர்களில் மன அமைதியுடன் தவம் செய்வோர் நிறைந்திருந்தனர் என்று சொல்லப்படுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்று, கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ் புலவர், இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலக அமைதிக்கு வித்து ஊன்றினார். தாயுமானவர், எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே என்று, உயிர்களை அன்புகூர்வதால் மலரும் உன்னத உலகுக்கு வழி காட்டினார். மகாத்மா காந்தி அவர்கள், “ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒன்றில் சமுதாய நீதி இல்லாமல் இருக்கும்வரை, அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்று சொன்னார். வன்முறையற்ற வழியை உலகிற்கு எடுத்துரைத்த பாரதமே இன்று வன்முறையின்றி வாழ்கின்றது என்று, நம்மால் துணிந்து சொல்ல முடியாது.

உலக அமைதி நாள்

இன்று உலகில் குறைந்தது ஏதாவது ஓரிடத்தில் போர் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது. மனிதர் ஒருவரை ஒருவர் கொலைசெய்வதற்கு மிகத் திறமையான வழிகளை வளர்த்துவருவது, போர்களை அதிகரித்து, மேலும் மேலும் அழிவுகளைக் கொணர்கின்றது. இரண்டாம் உலகப் போரில், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் மீது,  இரு அணுகுண்டுகளைப் போட்டது. இது நடந்து 75 ஆண்டுகள் ஆகியும், இன்றும் நாடுகளில், அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன. அதற்குப்பின் உலகில் அணுகுண்டுகள் போர்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தபோதிலும், 1945ம் ஆண்டிலிருந்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் போர்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் உயிரிழந்துள்ளனர். மனித இனம், போரிடும் இனமாக ஏன் செயல்படுகின்றது? உலகில் பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாய் இடம்பெற்றுவரும் போர்களுக்குக் காரணம் என்ன? இத்தகைய ஒரு சூழலில் அமைதியைக் கொணர இயலுமா என்பதே, இன்று பலரின் ஆதங்கம். சமய சகிப்பற்றதன்மை, இனவெறி, நிறவெறி, கலாச்சாரப் புறக்கணிப்பு, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற கருத்தியல் வேறுபாடு, தேசியவாதம், பொருளாதார நிலைகள், உறுதியான இராணுவ அமைப்பைக் கொண்ட அரசமைப்பு ஏற்கும் பொதுவான போக்கு. இவை போன்றவற்றால் இக்காலக்கட்டத்தில் போர்கள் இடம்பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றிற்கு மத்தியிலும், அமைதி இயலக்கூடியதே என்று, பலர் நம்பிக்கை விதைகளை விதைத்து வருகின்றனர்.  

நாடுகள் மற்றும், மக்கள் மத்தியில், அமைதி பற்றிய கருத்தியல்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1981ம் ஆண்டு உலக அமைதி நாளை உருவாக்கியது. இந்த நாள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் என்றும், அந்த அவை கூறியது. பின்னர் 2001ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்ட செப்டம்பர் 21ம் தேதிக்கு,  அந்த அவை, உலக அமைதி நாளை, மாற்றி அமைத்தது. வன்முறையற்றநிலை, மற்றும், போர் நிறுத்தம் ஆகியவற்றை 24 மணி நேரமும் கடைப்பிடிப்பதன் வழியாகவும் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 21, இத்திங்களன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், “அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க” என்ற தலைப்பில், உலக அமைதி நாளை சிறப்பித்தது. இதே நாளில், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவும் சிறப்பிக்கப்பட்டது. ஐ.நா. தலைமை பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. தலைமையகத்திலுள்ள அமைதி மணியை ஒலிக்கச்செய்து இந்த அமைதி நாள் நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.

மேலும், கோவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியிலும், “வருங்காலத்தை ஒன்றிணைந்து வடிவமைப்போம், உலகத்திற்கு ஒருமைப்பாட்டுணர்வு அவசியம், நமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனம்” என்ற தலைப்பில், செப்டம்பர் 21, இத்திங்களன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், உயர்மட்ட கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இப்போதைய கொள்ளைநோய் நெருக்கடி சூழலில், உலகைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து செயலாற்றவேண்டும் என்பதே, 75ம் ஆண்டு நிறைவு நாளில் அதிகம் வலியுறுத்தப்பட்டது. பன்மைத்தன்மை கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பன்மைத்தன்மையை மதிக்கச் செய்வது அமைதி. இது, மனித மாண்பிற்கு உறுதியளிக்கிறது. போர்களின்றி இருப்பது அமைதி அல்ல, மாறாக, நீதி மேலோங்கி இருப்பதே அமைதியாகும் என்றும் கூறப்பட்டது. உலகில் அமைதியை நிலவச் செய்வது பற்றிக் கூறிய ஜோ வாசர்மேன் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்தால், இந்த உலகில் அமைதி இயலக்கூடியதே கூறியுள்ளார். உலக சமுதாயத்திற்கு, குறிப்பாக, கொரோனா கொள்ளைநோய் நெருக்கடிகள் உருவாக்கியுள்ள சமுதாய, பொருளாதார, மற்றும், அரசியல் பிரச்சனைகளைக் களைவதற்கு, இக்கால உலகிற்குத் தேவையானது, நாடுகளிடையே, ஒருமைப்பாடு, மற்றும், ஒன்றிணைந்து செயல்படுவதாகும்.

ஒற்றுமை காக்கையும், வௌவாலும்

ஒரு சமயம் காக்கையும், வௌவாலும், யார் அதிக உயரம் பறப்பது என்று தங்களுக்கு இடையே கடுமையாய்ச் சண்டையிட்டுக் கொண்டன. அதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற வீராப்பில், அவையிரண்டும் கழுகரசனிடம் சென்று, எங்களில் அதிக உயரம் பறப்பது யார் என்று தீர்ப்புச் சொல்லுங்கள் என்று கேட்டன. அவையிரண்டும் போட்ட சண்டையில் கடுப்பாகிப்போன கழுகரசன், உங்களில் யார் வடிகட்டின அறிவிலியோ, அவனேதான் என்று சொன்னவுடன், அங்கே மயான அமைதி நிலவியது. ஆம். நீயா, நானா என்ற சகதிச் சிந்தனையைவிட, நீயும் நானும் என்ற, சார்பு சிந்தனையே சாலச் சிறந்தது (பேராசிரியர் அருள்பணி சேவியர் அந்தோனி சே.ச.).

கோவிட்-19 கொள்ளைநோய் சூழலில், உலகினருக்குத் தேவைப்படுவது, நீயா, நானா என்ற தலைக்கன மனப்பான்மை அல்ல, மாறாக, நீயும் நானும் என்ற ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வே. ஐக்கிய நாடுகள் நிறுவனமும், இந்த ஒற்றுமையே, ஒருமைப்பாடே இக்காலத்திற்கு இன்றியமையாதது என்ற அறைகூவலுடன், செப்டம்பர் 21 இத்திங்களன்று தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்தது. ஒற்றுமை யென்றொரு கயிறு, அதனை ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு, கற்றவர் கல்லாதோர், ஏழை செல்வந்தர் எல்லாரும் முயன்று இணைந்தால் உயர்வு. பசுக்களின் சாந்தத் தன்மைகூட, மந்தையில் கலந்தால் புலியையே விரட்டும். ஆனால் தனிப்பட்டுப் போன பசுவை, குட்டிப் புலியும் துணிந்து தாக்கும். இலகுவாய் உடைபடும் குச்சிகூட இறுக்கிய கட்டுக்குள் கடினம் கூடும். அதனை உடைக்க முயலும் கைகளும் தோற்றுப்போகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நமக்குள் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.

பொறுமைக்கு கிடைத்த வெகுமதி

 கடவுள் நம்பிக்கை


வாய்ப்புக்கள் தவறிப்போனால், அதுகூட கடவுள் திட்டம் என்று கூறலாம். ஏனெனில் இதைவிட சிறந்த, நல்ல வாய்ப்பை வழங்க, கடவுளேகூட அதை தவிர்த்திருக்கலாம்”

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருமுறை கடவுள் கிராமம் ஒன்றிற்குச் சென்று, இன்று உங்கள் எல்லாருக்கும் சிறப்பான பழம் ஒன்று கொடுக்கப்போகிறேன் என்று சொன்னார். உடனே கிராம மக்கள் எல்லாரும் ஓடிவந்து வரிசையில் நின்றனர். அந்த வரிசையில் சிறுமி ஒருவரும் நின்று கொண்டிருந்தார். கடவுள் ஒவ்வொருவருக்காக பழத்தைக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த சிறுமியின் நேரம் வந்தது. கடவுள் சிறுமியின் கையில் பழத்தை வைத்தபோது அது உருண்டுபோய் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது. இன்னொரு பழம் வாங்கவேண்டும் என்றால், மீண்டும் வரிசையில் போய்தான் நிற்கவேண்டும். அதுதான் அங்கு சொல்லப்பட்டது. சிறுமியும் எதுவும் பேசாமல் கவலையோடு பின்னால் போய் வரிசையில் காத்து நின்றார். சிறுமியின் நேரம் வந்தபோது, கடவுள் இரண்டு பழங்களை சிறுமியின் கையில் வைத்தார். அப்போது சிறுமியின் காதில் ஏதோ ஒரு சப்தம் கேட்டது. முதலில் உனது கையில் பழத்தை வைத்தபோது அதை தட்டிவிட்டது நான்தான், ஏனெனில் அது நல்ல பழம் இல்லை, அதைவிட சிறந்த பழத்தைப் பெறுவதற்கு நீ பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறாயா என்று கவனித்தேன். நீ அவ்வாறு காத்துக்கொண்டிருந்தாய், இந்தா சிறந்த பழங்கள் என்று கடவுள் சொன்னாராம். வாழ்க்கையில் அன்பையும் பொறுமையையும் கடைப்பிடித்தால், இயலாதது என்று எதுவுமே இல்லை. இந்தக் கதையைச் சொன்ன பட்டிமன்ற பேச்சாளர் அருள்பிரகாசம் அவர்கள், “கடவுள் என்னை அன்புகூர்கிறார் என்று சொல்கிறீர்கள், ஆனால் பலநேரங்களில் எனக்கு நிறைய வாய்ப்புக்கள் கைவிட்டுப் போகிறதே என்று நீங்கள் புலம்பலாம். ஆனால் வாய்ப்புக்கள் தவறிப்போனால், அதுகூட கடவுள் திட்டம் என்று நாம் கூறலாம். ஏனெனில் இதைவிட சிறந்த, நல்ல வாய்ப்பை வழங்க, கடவுளேகூட அதை தவிர்த்திருக்கலாம்” என்று சொல்கிறார். எனவே பொறுமை காத்து, நல்வாய்ப்புக்களை அள்ளிக்கொள்வோம்.

பொறுமை என்பது, வெறுமனே காத்திருப்பது அல்ல, மாறாக, காத்திருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான். (அமெரிக்க எழுத்தாளர் Joyce Meyer)

2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தும் அபாயம்

 நொபெல் அமைதி விருது வென்றுள்ள மலாலா யூசுப்சாய்


மலாலா யூசுப்சாய் : 12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என வகுக்கப்பட்ட இலக்குகள், பேச்சளவிலேயே உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பு முழுமையாக மறைந்தாலும் உலகெங்கும் இரண்டு கோடி பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாத நிலையே இருக்கும் என கவலையை வெளியிட்டுள்ளார், நொபெல் அமைதி விருது வென்றுள்ள மலாலா யூசுப்சாய்.

ஐ.நா. பொதுஅவைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க உள்ளதையொட்டி இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் அவர்கள், பெண் குழந்தைகள் கல்விக்காக, உலக நாடுகளால், பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், பெண்கள் கல்விக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை என்றார்.

அமைதியை உருவாக்கவும், புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்கவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலும், ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை எனவும் குறைகூறினார் மலாலா.

12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும்,  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என வகுக்கப்பட்ட இலக்குகள் பேச்சளவிலேயே உள்ளன என உரைத்த, நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா அவர்கள், பெண் கல்விக்காக செலவிட வேண்டியத் தொகை, மற்றும், இதுவரை செலவிட்டத் தொகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி, பல ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தாலும், உலகெங்கும் குறைந்தபட்சம் இரண்டு கோடி பெண் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்ற அச்சம் இருக்கும் நிலையில், இதைத் தடுப்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மலாலா. (Times of India)