Monday, 21 September 2020

மேலும் ஒரு பாகிஸ்தான் கிறிஸ்தவருக்கு மரண தண்டனை

 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்


பாகிஸ்தானில், சிறுபான்மை சமூகத்தினர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி

தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவர், அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

இறைவாக்கினர் முகமது அவர்கள் குறித்து தவறான செய்திகளை கைபேசி வழியாக அனுப்பினார் என 2013ம் ஆண்டில், குற்றம் சுமத்தப்பட்ட 37 வயது தொழிலாளி Asif Pervaiz என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

துணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கிறிஸ்தவர் Pervaiz மீது தெய்வ நிந்தனை குற்றத்தை, அவரின் இஸ்லாமிய தொழிற்சாலை கண்காணிப்பாளர் சுமத்தியதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட இவருக்கு, இம்மாதம் 8ம் தேதி, மரணதண்டனை தீர்ப்பு, லாகூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

Pervaiz அவர்கள் தன் கைபேசியை தவறாகப் பயன்படுத்தியதற்காக, மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர், அவர் தூக்கிலிட்டு கொல்லப்படுவார் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தான் குற்றமிழைக்கவில்லை என தொடர்ந்து வலியுறுத்திவரும் Pervaiz அவர்கள், இத்தண்டனை தீர்ப்புக்கு எதிராக மனு ஒன்றை இத்திங்களன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், இவரின் மனு வழக்காடு மன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு, இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என உரைத்துள்ளார் அவரின் வழக்குரைஞர் Saif ul Malook.

பாகிஸ்தான் நாட்டில், சிறுபான்மை சமூகத்தினர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது அதிகரித்து வருவதாக, ஐ.நா. மனித உரிமைகள் அவையும்,  Amnesty International எனும் மனித உரிமைகள் அமைப்பும் ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளன. (UCAN) 

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...