Wednesday 30 September 2020

உலகம், அணுப் பேரழிவின் நிழலிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது

 அணு குண்டு வெடிப்பு


அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், அந்த ஆயுதங்களைக் களையும் பொதுவான பாதைக்குத் திரும்புவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, எல்லா நாடுகளையும் பாதிக்கும் - ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், செப்டம்பர் 26, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளுக்கென்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், அணு ஆயுதங்கள் ஒழிப்புக்கென்று, தன்னை அர்ப்பணிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஏறத்தாழ, 75 ஆண்டுகள் ஆகியபின்னரும், நமது உலகம், அணுப் பேரழிவின் நிழலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிரிவினை, நம்பிக்கையின்மை மற்றும், உரையாடலின்மை ஆகியவை, அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளில் காணப்படுகின்றன என்றும், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு குறித்த போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, அணு ஆயுதங்கள் முன்நிறுத்தும் ஆபத்தும் மிகவும் கடுமையாய் உள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், அந்த ஆயுதங்களைக் களையும் பொதுவான பாதைக்குத் திரும்புவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அந்த நாடுகளை மட்டுமல்லாமல், எல்லா நாடுகளையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையதள உலகில் ஒழுங்குமுறையின்மை, காலநிலை மாற்றம், சமத்துவமற்றநிலை, கோவிட்-19 கொள்ளைநோய் போன்ற அனைத்தும், உலகின் பலவீனமான தன்மையை பரவலாக வெளிப்படுத்தியுள்ளன என்றுரைத்துள்ள ஐ.நா. பொதுச்செயலர், உலகளாவிய சட்டத்தின் அடிப்படையில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கையை உருவாக்கவேண்டும், அந்நிலை, இவ்வுலகை அணு ஆயுதங்களற்ற இடமாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கு உதவும் என்று கூறியுள்ளார்.

அணு ஆயுதமற்ற உலகம் என்ற ஒப்பந்தத்தில் 61 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன என்றாலும், இவற்றில், 14 நாடுகளே தங்கள் நாட்டின் அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...