Tuesday 27 June 2023

ஜூலை 2, ஞாயிறு, மணிப்பூருக்கான இறைவேண்டல் தினம்

 

ஜூலை 2, ஞாயிறு, மணிப்பூருக்கான இறைவேண்டல் தினம்



மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு உதவும் வகையில், டார்ச் லைட் ஊர்வலங்கள் அல்லது அமைதி பேரணிகளை ஏற்பாடு செய்யவும் இந்தியக் கத்தோலிக்க ஆயர்பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஜூலை 2, ஞாயிற்றுக்கிழமையை இறைவேண்டல் நாளாகக் கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது இந்தியக் கத்தோலிக்க ஆயர்பேரவை.

இதுகுறித்து அறிவிப்பு செய்துள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் Trichur, பேராயருமான Andrews Thazhath அவர்கள், இந்த இறைவேண்டல் முயற்சியானது கடவுளிடமிருந்து அமைதிக்கான கொடையைப் பெறவும், வடகிழக்கு மாநிலத்தில் மெய்டேய் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையேயான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டு முயற்சி குறித்து இறைமக்களுக்கு ஜூன் 25, இஞ்ஞாயிறன்று அறியவிப்பு செய்யுமாறு அனைத்து ஆயர்களையும் அருள்பணியாளர்களையும் கேட்டுக்கொண்ட பேராயர் Thazhath அவர்கள், ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்வை நாடு முழுவதும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

விசுவாசிகள் மன்றாட்டுகளின்போது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு நோக்கங்களைச் சேர்ப்பது, மற்றும், மணிப்பூர் மக்களுக்காகச் சிறப்பாக செபிப்பதற்காக அனைத்துப்  பங்குத்தளங்களிலும் ஒரு மணிநேரம் சிறப்பு வழிபாடு நடத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் Thazhath

இதற்கிடையில் இரு சமூகங்களுக்கிடையில் மீண்டும் உரையாடலைத் தொடங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், ஆனால் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்று கூறியுள்ள இம்பால் பேராயர் Dominic Lumon அவர்கள், இச்சூழலில் இறைவேண்டல் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்

பன்னாட்டு நகைச்சுவை நாள்

 

பன்னாட்டு நகைச்சுவை நாள்


'' failed to upload. Invalid response: RpcError

1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளரான wayne reinagel என்பவரால் இந்த பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது. இவரது நகைச்சுவை புத்தங்களின் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட இந்நாள் காலப்போக்கில் நாடுகளளவில் கொண்டாடப்படும் நாளாக உருவானது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! 'சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு சிரிப்பு என்று நகைச்சுவை பற்றிய பல கவிஞர்களின் வரிகளைப் பாடல்களாக நாம் கேட்டு மகிழ்ந்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடப்படுகின்றது. நாம் மனம்விட்டு சிரிக்கும் போது நம்மை வெறுக்கும் பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுகின்றார்கள். மனதில் ஒருவித மகிழ்ச்சியும் கலகலப்பான உணர்வும் சிரிக்கும் போது ஏற்படுகிறது. நமது உடலில் ஏற்படும் நோய்களான மூக்கடைப்பு, சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் இம்மியூனோ குளோபுலின் ஏ என்னும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபட்டால் ஏற்படுகின்றன. நாம் வாய்விட்டு மனம் திறந்து சிரிக்கும் போது இந்த இம்மியூனோ குளோபுலின் ஏ என்னும் நோய் எதிர்ப்பாற்றல் நமது உமிழ்நீரில் அதிகளவு சுரக்கப்படுகின்றது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாகி, நமது உடல்நோய்கள் குணமாக்கப்படுகின்றன. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பல இலட்சம் மலர்கள், பூக்கள் இவ்வுலகில் மலர்ந்து மணம் வீசினாலும் சிரிப்பு தான் சிறந்தது என்பது சிரித்து சிந்தித்து செயல்பட்டவர்களின் கருத்து. அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என சிரிப்பில் பலவகை உண்டு. மலர்களில் பல வகை இருந்தாலும், ரோஜாவுக்கு என்று தனிச்சிறப்பு இருப்பதுபோல், எத்தனை வகை சிரிப்புகள் இருந்தாலும், புன்னகை புன்சிரிப்புக்கு என்று தனி மரியாதை உள்ளது. புன்னகையும் புன்சிரிப்பும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதாக இருப்பதைக் கண்டு, சிரிப்பை வைத்து வியாபாரம் செய்ய முடியுமென்று சின்சினாடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேரன் மேக்லேட் கண்டறிந்தார். வர்த்தக நிர்வாகக் கல்லூரியைச் சேர்ந்தவராக இருந்த அவர் முதலில் விளம்பரப் படங்களில் நகைச்சுவையைத் திணித்தார். நகைச்சுவை நிரம்பிய விளம்பரங்களில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும், விளம்பரப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத் தன்மையும் வாடிக்கையாளர்களிடம் வெகுவாக அதிகரித்தன. இன்றளவும் விளம்பரத்தில் வரும் நபர் நகைச்சுவையாக நடித்தால் அந்த விளம்பரம் மக்களிடத்தில் உடனடியாக வரவேற்பைப் பெறத்தான் செய்கிறது. அதுவே நகைச்சுவையின் பலமாக இருக்கிறது.

உலகம் முழுக்க ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் புன்னகைப்பவர்களாக இருக்கிறார்கள். எட்டு வாரக் குழந்தையாக இருக்கும்போதே ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளே முதலில் சிரிக்கிறார்கள். புன்னகை பெண்களுக்கு இயல்பாக, அவர்களின் உடல்கூறுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. அதோடு இயல்பிலேயே பெண்கள் சமாதானப்படுத்துபவர்களாக இருப்பதால் அவர்களால் அதிகம் புன்னகைக்க முடிகிறது என்பதும் உளவியல் காரணமாக இருக்கிறது. தன் வாழ்நாளில் எவன் ஒருவன் அதிகமாக சிரிக்கின்றானோ அவனது ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகின்றது. உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் வாய்விட்டுச் சிரிப்பதும் புன்னகை செய்வதும் உதவுகிறது. புன்னகை என்பது நகைச்சுவையோ சிரிப்போ மட்டுமல்ல அது உறவுகளின் துணையோடு வருவது. இதனால் தான் சிலரைப் பார்த்தவுடன் புன்னகைக்கிறோம். ஒரு நகைச்சுவையான திரைப்படம் அல்லது காட்சி எவ்வளவு நகைச்சுவையாக இருந்தாலும் அதைத் தனியே பார்த்து சிரிப்பதைவிட, நண்பர் குழுவுடன் இணைந்து பார்க்கும்போது இன்னும் அதிகமாக இரசித்து சிரிக்கிறோம்.

நாகரீகம் பெற்ற மனிதர்களாக வாழ்த்தொடங்கிய காலத்திலிருந்தே நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் பண்டைய கிரேக்கர்கள் தான் முதன்முதலில் நகைச்சுவைகளைச் சொன்னார்கள் என்று  சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் அதனை சுமேரியர்களிடம் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிய நகைச்சுவைகளை புகழ்பெற்ற கவிஞர்களும் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகைச்சுவைகள் அதன் தற்போதைய பொழுதுபோக்கு வடிவத்தைப் பெறவில்லை அதனைத்தொடர்ந்த காலங்களில் தான் நகைச்சுவை துணுக்குகள், கதைகள் அடங்கிய புத்தகங்கள் வெளிவரத் துவங்கி அது பொழுதுபோக்கு வடிவமாக மாறத்துவங்கியது. சமூக பிரச்சனைகள், அரசியல் மற்றும் சமூக தலைவர்களின் குறைகளையும் அலட்சியப் போக்கையும் இலைமறை காயாக மக்களுக்கு வெளிப்படுத்தவும் காலப்போக்கில் நகைச்சுவைகள் உருவாகின. 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளரான wayne reinagel என்பவரால் இந்த பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது. இவரது நகைச்சுவை புத்தங்களின் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட இந்நாள் காலப்போக்கில் நாடுகளளவில் கொண்டாடப்படும் நாளாக உருவானது.

மனஅழுத்தத்தைக் குறைத்து  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நகைச்சுவை உணர்வு பல ஆரோக்கியமான நன்மைகளை உடலுக்கு அளிக்கின்றது. வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகள் இல்லா மனிதனே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதிலேயே நமது கவனத்தை வைத்தோமானால் நம்மால் எந்தவிதமான செயல்களையும் சிறப்புடன் செய்ய முடியாது. நகைச்சுவை உணர்வு நம்மில் உள்ள பயம் தயக்கம் என்னும் பனிச்சுவர்களை உடைத்து, ஒற்றுமையுடன் மனித உடன்பிறந்த உறவுடன் வாழ வழிவகுக்கின்றது.,

பன்னாட்டு நகைச்சுவை நாளை கொண்டாடும் நாம் நகைச்சுவை உணர்வை நம்மில் வளர்த்துக் கொள்ள முயல்வோம். கடினம் என்று நாம் கருதும் வார்த்தைகளை மனப்பாடம் செய்வதை விட ஒரு நல்ல நகைச்சுவையை நயம்படக் கூறுவது கடினம். நகைச்சுவை உணர்வு ஒரு கலை. விருப்பம் உள்ளவர்களால் மட்டுமே அதனை கற்க முடியும் கற்பிக்கவும் முடியும்.  நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும் போது அதிலிருக்கும் நகைச்சுவை துணுக்குகளையும் வாசிக்கத் தொடங்குவோம். அதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வோம். எவ்வளவு தான் கடினமான ஆளாக இருந்தாலும் நகைச்சுவை உணர்வு ஒரு மனிதனை இயல்பான மனிதனாக மாற்றிவிடும். மனஅழுத்தங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவை சரியாக்கி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கத்தை அளிக்கின்றது நகைச்சுவை. இதனால் இரத்த ஓட்டத்தின் அளவு சீராகி இதயம்  ஆரோக்கியமாகின்றது. நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

பன்னாட்டு நகைச்சுவை நாளினை சிறப்பிக்கும் நாம்,  மனதார சிரித்து, மற்றவர்களையும் நம்மையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். இயந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைக்கின்றனர். விளைவு இலவச இணைப்புக்களாக ஏராளமான நோய்கள் வந்து தாக்குகின்றன. தான் வாழும் சூழலில் உடன் வாழும் மனிதர்களிடத்தில் நமது அன்றாட நிகழ்வுகளை வர்ணித்து மகிழ்வடைவதை மறந்து சிரிப்பை சிகிச்சையாக பெற மையங்களைத் தேடி அலையும் சூழல் உருவாகி விட்டது. உடற்பயிற்சிக் கூடங்கள் போல  சிரிப்பு சிகிச்சை எனப்படும்  நகைச்சுவை தெரபி மையங்கள் பல உருவாகி எப்படி சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்.

நகைச்சுவை உணர்வு பற்றி மருத்துவ ஆய்வுகள் பல நிகழ்த்தி அதன் முடிவுகளை பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய இருண்ட சூழலில் இருந்து நம் மனதை திசைதிருப்ப சிரிப்பு உதவுகின்றது. நாம் நலமாக இருப்பதற்கான ஒரு வழியாகவும் அது திகழ்கின்றது என்று கூறியுள்ளார் மேரிலந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சார்ந்த இதய மருத்துவர் மைக்கல் மில்லர் (Michael Miller). மேலும் அதிக மனஅழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் நிலை அதிகரிப்பதால் மனஅழுத்தம் ஏற்படும்போது நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது பதற்றத்தையும் குறைக்க உதவும் என்ற அவர், நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் காலம் கூடுவதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

"சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார் மகாத்மா காந்தி. மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் திறமையுடனும் சரியாகவும் ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் சிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார்.  மனிதர்கள் பொதுவாக தனிமையில் இருக்கும்போது சிரிப்பதை விட, குழுவாக நாலுபேருடன் இணைந்திருக்கும் போதுதான் அதிகம் சிரிக்கக்கூடியவர்கள் என்று ராபர்ட் புரோவின் கண்டறிந்தார். இவர் சிரிப்பதற்கு நகைச்சுவை உணர்வு 15 விழுக்காடும் உறவுகள் 85 விழுக்காடும் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். நகைச்சுவைக் காணொளிகளைப் பார்ப்பதால் ஞாபக சக்தி, கற்கும் ஆற்றல் அதிகரிப்பதாக லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக் கழக ஆய்வு கண்டுபிடித்துள்ளது. நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது மீள்திறனுக்கும் மிக முக்கியம் என்றார் கொலம்பியா (Columbia) பல்கலைக் கழகத்தின் மனோவியல் பேராசிரியர் ஜார்ஜ் பொனான்னோ (George Bonanno) சந்தோஷமான சூழலில் சந்தோஷமான மனதோடு செய்யும் எந்த வேலையும் ஒவ்வொருவருக்கும் உடல்நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தித் தரவே செய்யும். அதனால்தானோ என்னவோ வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்றார்கள் நம் முன்னோர்கள்.

உடல்மொழியின் மிக முக்கிய அங்கமான சிரிப்பாராய்ச்சியை உலகம் கவனிக்கத் தொடங்கியதும் அதை மருத்துவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். சிரிப்பாராய்ச்சியின் முடிவுகளை வைத்து அமெரிக்க மருத்துவர்கள் ‘சிரிப்பு அறை’ ஒன்றை அமைத்தார்கள். அதில் நகைச்சுவையான புத்தகங்கள், படங்கள், ஒலி நாடாக்களை நிரப்பி, அந்த அறைக்குள் நுழைபவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாதவாறு அமைத்தார்கள். ஒவ்வொரு நோயாளியும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அந்த அறையில் இருக்க வைக்கப்பட்டார்கள். இதற்கு நல்ல பயன் கிடைத்தது. நோயாளிகளின் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. மருத்துவமனையில் இருக்கும் நாள்கள் குறைந்தன. மிக முக்கியமாக நோயாளிகளைக் கையாள்வது மருத்துவர்களுக்கு மிக எளிமையானதாக இருந்தது.

வயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் பிராணவாயுவை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் உண்டாகும் அதிர்வு இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளை நன்கு இயங்கத் தூண்டுகிறது. உணவு நன்கு செரித்து மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. இதேநிலை தொடரும் போது நமது உடலில் தேங்கும் கரியமில வாயு உடனுக்குடன் நீக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும். நமக்கு வரக்கூடிய நோயின் தன்மை குறையலாம். நாளடைவில் நோய் தீரவும் வழி பிறக்கும். அமெரிக்க நாட்டு பிரபல பத்திரிகைகளில் ஒன்று சண்டே ரெவ்யூ'. இதில் பத்திரிகையாளராகப் பணி புரிந்தவர் நோர்மன் கொவ்சின். இவருக்கு முதுகுத்தண்டு வலி நோய் வந்தது. விரைவில் அந்நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தார். ஓர் பழைய திரைப்படக் கருவியை விலைக்கு வாங்கினார். சிரிப்பை வரவழைக்கக் கூடிய நல்ல நகைச்சுவைப் படங்களை ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தார். கூடவே மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார். சிரிப்புப் படத்தை ஒருமுறை பார்த்த பிறகு இவரால் இரண்டு மணிநேரம் வலி இல்லாமல் இருக்க முடிந்தது. சிரிப்பினால் நாளடைவில் இவருக்கு வலி தந்த வியாதி இவரை விட்டு முற்றிலுமாக விலகி ஓடியது. நாம் ஒருநாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும் என கணக்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒரு நாளைக்கு 17 முறை குறைந்தபட்சம் கட்டாயமாகச் சிரிக்க வேண்டும் என மருத்துவ உலகம் கூறுகிறது. அதிகமாகச் சிரிப்பதால் சாதாரணமாக நாம் உட்கொள்ளும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கும். இதனால் நம் உடலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் ஆறி விடவும் வாய்ப்பு உண்டாகிறது.

சிரிப்பைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முதல் வகை உடனே சிரிப்பவர்கள், 2. புரியாமல் சிரிப்பவர்கள், 3. புரியாமல் இருந்து விட்டுப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர் சிரிப்பவர்கள், 4. கேட்டவுடன் சிரிக்காமல் இருந்துவிட்டு தனியாக இருக்கும்போது திடீரெனச் சிரிப்பவர்கள்.

சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மரியாதை உடனடியாகக் கிடைத்துவிடுகின்றது. புன்னகைக்கும் முகம், நகைச்சுவை ததும்பும் பேச்சு உடையவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். கவலையை மறக்க மனிதனுக்கு இறைவன் அளித்த வரமே சிரிப்பு. மனிதனைத் தவிர வேறெந்த விலங்கிற்கும் சிரிக்கும் தன்மை கிடையாது. மனிதனுக்கு இருக்கும் கவலைகள் ஏராளம். மனிதன் கவலையைக் குறைக்க பழகுவதைக் காட்டிலும் அதை மறைக்கவே அதிகமாகக் கற்றுக் கொண்டுள்ளான். கவலையை மறைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

பொருளாதார நெருக்கடிகள், தொற்றுநோய், பொது முடக்கம்,  இணையவழிக்கல்வி, அதிக வேலை, வேலையின்மை என்பன போன்ற பல்வேறு மாற்றங்களால் ஏராளமான மனநல நெருக்கடிகள் உண்டாகின்றன. அவை உடல்நலமின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றை உருவாக்கி இறுதியில் தற்கொலை எண்ணங்களையும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழலையும் உருவாக்குகின்றன. உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், மனிதனின் மனநெருக்கடிகளைக் காக்கும் தடுப்புகளில் ஒன்று நகைச்சுவை உணர்வு என்று கூறுகின்றார். நமது மனநலத்தைப் பாதுகாப்பதில் நகைச்சுவை உணர்வு மிக மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கும் பொருள்கள் தன்னுள் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்றுவது போல நமது மனதின் அழுத்தங்களை நகைச்சுவை வழியாக வெளியேற்றுவோம். நகைச்சுவை உணர்வை வளர்த்து நமது மனநலனையும், உடல்  நலனையும் காத்துக்கொள்வோம். அனைவருக்கும் இனிய பன்னாட்டு நகைச்சுவை நாள் நல்வாழ்த்துக்கள்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால்

 

திருத்தந்தை முதலாம் ஜான் பால்



1971ஆம் ஆண்டு உரோம் நகர் ஆயர் மாமன்றத்தில் கலந்துகொண்ட ஆயர் லுச்சியானோ அவர்கள், வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டியக் கடமையை வலியுறுத்தினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் அண்மைக்கால வரலாற்றில் மிகக்குறுகிய காலமே பதவி வகித்தவர் திருத்தந்தை முதலாம் ஜான் பால். 33 நாட்களே பதவியில் இருந்தாலும் எண்ணற்ற உள்ளங்களை கவர்ந்து சென்றவர் இவர். ‘புன்னகைத் திருத்தந்தை’ என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார். ஏனெனில், எப்போதும் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டவர் இவர். இதுதவிர இவருக்கென்று தனிச்சிறப்புகள் பல உண்டு. இவருக்குப்பின் இத்தாலியில் பிறந்த எவரும் திருத்தந்தையானதில்லை. அதாவது, இதுவரையுள்ள வரலாற்றின்படி, இவரே கடைசி இத்தாலியத் திருத்தந்தை. திருத்தந்தையர் வரலாற்றிலேயே  இரண்டு பெயர்களை இணைத்து வைத்துக்கொண்ட முதல் பாப்பிறை இவர்தான். தனக்கு முன்னர் பதவி வகித்த திருத்தந்தையர்கள் 6ஆம் பால் மற்றும் 23ஆம் ஜானை கௌரவிக்கும் விதமாக, தான் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி திருத்தந்தையாக தேர்வுச் செய்யப்பட்டபோது,  ஜான்பால் என்ற பெயரை தனக்கென தேர்வு செய்தார். திருத்தந்தை 23ஆம் ஜான் இவரை ஆயராக திருநிலைப்படுத்தியிருந்தார், திருத்தந்தை 6ஆம் பால் இவரை கர்தினாலாக உயர்த்தியிருந்தார்.

Albino Luciani என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை, மூன்று கோணங்கள்  கொண்ட மணிமகுடம், பதவியேற்பு விழாவின்போது தனக்கு சூட்டப்படுவதை மறுத்தார். எளிமையான இத்திருத்தந்தை, ஓர் ஏழைக்குடும்பத்தில் இத்தாலியின் Belluno மாவட்டத்தில் Canale d'Argordo எனுமிடத்தில் 1912ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இவர், தன் 10ஆம் வயதிலேயே கப்புச்சின் துறவு சபையின் அருளாளர் ஒருவரின் மறைபோதகத்தால் கவரப்பட்டு, 11ஆம் வயதிலேயே இளங்குருமடத்தில் இணைந்தார். குருத்துவப் பயிற்சி இல்லத்தில் இருந்தபோது, இவர் இயேசு சபையில் சேர விரும்பி தன் எண்ணத்தை வெளிப்படுத்திட, குருமட அதிபரோ அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. 1935ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தன் 23ஆம் வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1937ல் Belluno மறைமாவட்ட குருமட துணைஅதிபராக நியமிக்கப்பட்டார். அதே குருமடத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1947ல் உரோம்நகர் கிரகோரியன் பல்கலைக்கழகத்திலிருந்து இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

  1958ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி திருத்தந்தை 23ஆம் ஜான், அருள்பணி லுச்சியானியை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வைத்து ஆயராக திருநிலைப்படுத்தினார். Vittorio Veneto என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 11 ஆண்டுகள் அம்மறைமாவட்ட வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். 1962ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் பங்கேற்கத் துவங்கினார். 1969ஆம் ஆண்டு டிசம்பர் 15ல் வெனிஸ் பெருமறைமாவட்ட முதுபெரும் தலைவராக நியமிக்கப்பட்டார் ஆயர் லுச்சியானி. 1971ஆம் ஆண்டு உரோம் நகரில் இடம்பெற்ற ஆயர்கள் மாநாட்டில் திருத்தந்தையின் தனிப்பட்ட அழைப்பின்பேரில் கலந்துகொண்ட ஆயர் லுச்சியானி அவர்கள், வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டியக் கடமையை வலியுறுத்தினார்.  இவரை 1973, மார்ச் 5ஆம் தேதி கர்தினாலாக அறிவித்தார் திருத்தந்தை 6ஆம் பால். கர்தினாலாக இருந்தபோது, போர்த்துக்கல் சென்று, அன்னை மரியாவை பாத்திமாவில் காட்சியில் கண்ட மூவருள் ஒருவரான அருள்சகோதரி Lucia dos Santos அவர்களை நேரில் கண்டு உரையாடினார். திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களால் பயன்படுத்தப்பட்டு, திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களால் ஆயர் லுச்சியானிக்குக் கொடுக்கப்பட்ட ஆயருக்குரிய தங்க சங்கிலியையும் தங்க சிலுவையையும் 1976ஆம் ஆண்டு விற்று மொத்த பணத்தையும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென வழங்கினார் வெனிஸ் நகர் கர்தினால் லுச்சியானி.

திருத்தந்தை 6ஆம் பால் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து அதே மாதம் 26ஆம் தேதி கூடிய கர்தினால்கள், நான்காவது வாக்கெடுப்பிலேயே அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுத்ததுதான் ஆச்சரியம். கர்தினால்களின் மூன்றில் இருபங்கு வாக்குகளுக்கு மேல் பெற்று தேர்வு செய்யப்பட்டார் இத்தாலியின் வெனிஸ் நகர கர்தினால் அல்பினோ லுச்சியானி.  இவர் முதலாம் ஜான் பால் என்ற பெயரை தேர்வுசெய்து கொண்டார். இவர் கர்தினால்களுக்கு ஆற்றிய முதல் உரையில், ‘திருச்சபை இவ்வுலகில் தனக்காக இருக்கவில்லை, மாறாக இவ்வுலகில் சேவையாற்றவே இருக்கிறது’ என்பதை வலியுறுத்திக் கூறினார். தான் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லப்படுவதை மறுத்தார். ஆனால் திருத்தந்தையைப் பார்க்க விரும்பிய மக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால் பல்லக்கில் தூக்கி, பெருங்கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படுவதை அரைமனதாக ஏற்றுக்கொண்டார். செப்டம்பர் 3ஆம் தேதி திருஅவையின்  இவ்வுலகத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட இவர், அதே மாதம் 23ஆம் தேதி திருத்தயர்களின், அதாவது, உரோம் ஆயர் என்ற முறையில் உரோம் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித இலாத்தரன் பெருங்கோவில் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்.

   செப்டம்பர் 28ஆம் தேதி இரவு, அதாவது தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 நாட்களுக்குப்பின் தன் படுக்கையில் வாசித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் காலமானார் திருத்தந்தை முதலாம் ஜான்பால். வழிகாட்டும் விண்மீன்போல் திருஅவையில் திடீரென்று தோன்றி மறைந்தார் திருத்தந்தை முதலாம் ஜான்பால். இஸ்பெயின், Zaire, லெபனான் ஆகிய நாடுகள் மூன்று நாள் துக்கத்தை அறிவித்தன. 1978ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற அடக்கத் திருப்பலிக்குப்பின் அவரின் உடல் அதே பெருங்கோவில் அடிநிலக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இளவயதிலேயே மிகவும் ஏழ்மை நிலையை அனுபவித்தார் இத்திருத்தந்தை. கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு சாதாரண தொழிலாளியின் மகனாகப் பிறந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால், ஏழைகளின் தந்தையாகவும் நண்பனாகவும் செயல்படுவார் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். அவரும் அந்த வழியில்தான் தன் வாழ்வைத் துவக்கினார். ஆனால் இறைவனின் திட்டங்கள் வித்தியாசமானவைகளாக இருந்தன.

1990ஆம் ஆண்டே 4 கர்தினால்கள் உட்பட 226 பிரேசில் நாட்டு ஆயர்கள், திருத்தந்தை முதலாம் ஜான் பாலை புனிதராக அறிவிப்பதற்கான பணிகள் துவக்கப்படவேண்டும் என திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்கு நேரடியாக விண்ணப்பம் ஒன்றை விடுத்தனர். 2003ஆம் ஆண்டு  நவம்பர் 23ஆம் தேதி முதலாம் ஜான் பாலை இறையடியார் என அறிவித்தார் திருத்தந்தை 2ஆம் ஜான் பால். அதுவே புனிதர் பட்ட நிலைகளுக்கான முதல் படி. 2017ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இறையடியார் முதலாம் பாலின் வீரத்துவ பண்புகளுக்காக அவரை வணக்கத்துக்குரியவர் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வணக்கத்துக்குரிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றினை 2021ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அங்கீகரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலியில் அவரை அருளாளராக அறிவித்தார்.

    1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு திருத்தந்தை முதலாம் ஜான் பால் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து கர்தினால்களால் அடுத்த திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டவர், போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொய்த்தேவா. இந்த திருத்தந்தை உலகின் அனைத்து மக்களுக்கும், ஏன் நம் வத்திக்கான் வானொலி நேயர்களுக்கும் மிகவும் பழக்கமானவர். இருமுறை இந்தியா வந்துள்ளார். இத்திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.


Tuesday 20 June 2023

Pope Francis meets with the Canons Regular of the Lateran

 

Pope Francis meets with the Canons Regular of the Lateran



Pope Francis meets with the Canons Regular of the Lateran celebrating the bicentenary of their foundation. He recommends they follow "four stars" in their apostolate: prayer, community, sharing everything in common, and service to the Church.

By Salvatore Cernuzio

Pope Francis offered four recommendations to the Canons Regular of the Lateran in his audience with them on Monday 19 June at the Vatican, noting they are also helpful for every religious congregation. First, he underscored the importance of "prayer" as "oxygen" for the soul and a help not to fall into selfishness and self-referentiality. Then he mentioned "community," being "brothers" and avoiding at all times the "scourge" of gossip. Third, he explained how "common use of goods", sharing all in community is a "wise" practice, while watching out against the devil who "always enters one's pockets". Finally, he encouraged the "spirit of service to the Church", rather than just living for oneself. 

Prayer, community, the sharing of goods, and service represent four continuing aspects of the history of the Canons Regular as they celebrate 200 years since their foundation, the Pope underscored, "four stars that never wane and ones that make your apostolate luminous and relevant."

Historic roots

With a centuries-old legacy dating back to the 15th century with the merger of two communities - the Canons Regular of the Most Holy Saviour and that of the Canons Regular of the Lateran - the Congregation has its roots in the early times of the Church and promoting the common life of priests. Calling this a "very great grace" the Pope praised their origins going back to the early Christian communities centred on prayer, communion of life and the communal sharing of goods.

The Pope described how their charism encourages them to be contemplative and active at the same time, both dedicated to prayer and study as well as to ministry, ready to respond to the needs of the changing times.

Importance of prayer

Apart from the challenges of the past when the Congregation made "courageous choices," there are those of the present, the Pope went on to say. "Now you are asking yourselves how to continue with the renewal of your religious life," the Pope noted, recommending they let "four stars" guide them. First among them is "prayer" because if you do not pray, he warned you become "your own god" and "all selfishness arises from a lack of prayer." How many hours a day do you pray, he asked them. 

Scourge of gossip

The Pope then spoke about "community", and to be brothers he said we must "never gossip about each other, never" as it is scourge and destroys communities. The Pope then offered them a book on the subject by Archbishop Fortunatus Nwuachukwu, the new secretary of the Dicastery for Evangelisation. 

He also warned about how money can destroy communion, as "the devil enters through pockets." The sharing of goods in community is wise on the other hand, the third "star." 

Always of service

In conclusion, the fourth "star" the Pope highlighted is "the spirit of service to the Church" recalling how the very title of the Canons Regular recalls the importance of service. He noted how their link with the Lateran Basilica reflects their "invitation to fidelity to the Church to be witnessed especially through service."

Openness of heart

Addressing in particular the younger priests from various parts of the world who are having an experience in the congregation over recent months, he encouraged them to "live this opportunity as a gift, one of listening to each other and seeing each person as a richness for each other." Be sincere with an openness of heart, "this I wish you with all my heart, going forward."

Pope Francis celebrates 'brilliant' mathematician and philosopher Blaise Pascal

 

Pope Francis celebrates 'brilliant' mathematician and philosopher Blaise Pascal



In a new Apostolic Letter released on the day he would have turned 400, Pope Francis praises the “brilliant and inquisitive mind” of the French thinker Blaise Pascal.

By Joseph Tulloch

"A tireless seeker of the truth".

That’s how Pope Francis defines Blaise Pascal, the French mathematician, physicist and philosopher born 400 years ago today.

The Pope has dedicated an Apostolic Letter to him, stressing his scientific brilliance, concern for the poor, and relentless search for God.

The letter

A key theme of Pope Francis’ letter is the “brilliant and inquisitive mind” of Pascal. A child prodigy, he made important breakthroughs in mathematics and, at age 19, invented an arithmetic calculator, a forerunner of the modern computer.

The Pope stresses that Pascal used his intellectual gifts to wrestle with “the questions that troubled his age”, inventing, for example, the “five-penny coaches” system, the world’s first public transport network.

The Holy Father goes on to praise Pascal – who, aged 31, underwent a conversion experience he referred to as the “Night of Fire” – for his nuanced understanding of the role of reason in religious belief.

On the one hand, the Pope says, Pascal argued for the "reasonableness of faith in God”; on the other, precisely because of his own intellectual prowess, he also recognised reason’s limits, and stressed the importance of responding with faith to God’s call.

A final theme to emerge from the letter is Pascal’s attention to those less well-off than himself.

The Pope quotes Pascal’s words on his deathbed: “If the physicians tell the truth, and God grants that I recover from this sickness, I am resolved to have no other work or occupation for the rest of my life except to serve the poor.”

“It is moving,” Pope Francis writes, “to realize that in the last days of his life, so great a genius as Blaise Pascal saw nothing more pressing than the need to devote his energies to works of mercy.”

Cardinal Tolentino: Pope “profound admirer” of Pascal’s

At a press conference convened to present the Apostolic Letter, Cardinal Tolentino de Mendonça  – the Prefect of the Vatican’s Dicastery for Culture and Education – stressed that Pope Francis is a “profound admirer” of Pascal.

The Cardinal noted that the Pope has released (or is planning to release) a number of such Apostolic Letters, on figures, such as Dante Alighieri and Saint Therese of Lisieux, whom he judges “beacons” for the contemporary world.

Pascal, the Portuguese Cardinal said, is one such beacon, because he “brings everything together”: science and faith, philosophy and mathematics, spirituality and a practical mindset.

He also stressed that Pope Francis’ letter, as well as discussing the well-known aspects of the French writer’s life, makes an original contribution in that it delves into lesser-known territory, such as his concern for the poor.

In response to a question about Pascal’s association with Jansenism, a controversial theological movement in the early modern Church, the Cardinal said that the French writer was “perfectly Catholic.”


நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்க வேண்டும்

 

நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்க வேண்டும்



ஜூபிலிக் கொண்டாட்டங்கள், இறைவனுடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுடனும், நம்முடனும் ஒப்புரவைக் கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலிய தினஇதழ் Il Messaggero தன் 145ஆம் ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டி அப்பத்திரிகைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலியான செய்திகள் பரப்பப்பட்டுவரும் இன்றைய காலச்சூழலில் சமூகத்தில் நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்கிவருவதற்காக இப்பத்திரிகைக்கு நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, 2025ஆம் ஜூபிலிக் கொண்டாட்டங்களுக்கானத் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் கிறிஸ்தவச் செய்திகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

விவிலிய பாரம்பரியத்தில் வரும் இந்த ஜூபிலிக்கொண்டாட்டங்கள், இறைவனுடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுடனும், நம்முடனும் ஒப்புரவைக் கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றன என்பதையும் தன் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதாபிமானமும், ஒப்புரவும், ஒருமைப்பாடும் நிறைந்த ஓர் உலகைக் கட்டியெழுப்ப 2025 ஜூபிலி ஆண்டு நமக்கு உதவட்டும் என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறைவனின் இரக்கமும் கருணையும் நம்மைப் புதுப்பிக்கவும், ஒப்புரவாக்கவும் வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூபிலிக் கொண்டாட்டம் என்பது, வெறும் மதம் சார்புடையது அல்ல, மாறாக, நன்னெறி, ஒழுக்க ரீதி, சமூக, கலாச்சார, பொருளாதர, மற்றும் நீதித் தொடர்புடையவைகளையும் உள்ளடக்கி, மக்களின், குறிப்பாக, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் மேம்பாட்டிற்கு உதவுவது என தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற

 

திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற



இறைவனின் உண்மையான இருப்பை திருநற்கருணை குறித்து நிற்கின்றது என்பதை திருஅவை அதிகாரிகள் விசுவாசிகளுக்கு வலியுறுத்திக் கூறவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமாக இருக்கும் திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற உதவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய நற்கருணை மாநாட்டைத் தயாரிப்பதில் ஈடுபாடுள்ளோருக்கு தன் நன்றியையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய நற்கருணை மாநாட்டிற்கு தயாரித்துவரும் குழுவுக்கு வழங்கிய உரையில், இக்காலத்தில் திருநற்கருணை முன் அமர்ந்து செபிப்பதும், மௌனத்தில் இறைவனோடு உரையாடுவதும் குறைந்து வருவதாகக் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருநற்கருணை என்பது இறைவனின் உண்மையான இருப்பைக் குறித்து நிற்கின்றது என்பதை திருஅவை அதிகாரிகள் விசுவாசிகளுக்கு வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.  

நமக்காக அனைத்தையும், தன்னுயிரையும் தந்த இறைவனின் அன்பை நாம் திருநற்கருணையில் சந்திக்கிறோம் என்ற திருத்தந்தை, அன்பு பிறருடன் பகிரப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் கூறினார்.

இயேசுவின் அன்பை அடுத்திருப்பவருடன், குறிப்பாக முதியோர் மற்றும் நோயுற்றோருடன் பகிரவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய ஐக்கிய நாட்டில் இடம்பெறவிருக்கும் தேசிய திருநற்கருணை மாநாடு, அருளின் நிகழ்வாக இருந்து மக்களை நல்கனிகளைத் தருபவர்களாக மாற்ற உதவுவதோடு, நம்மில் நம்பிக்கையைத் தட்டியெழுப்பி, வாழ்வைப் புதுப்பிக்கட்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Monday 19 June 2023

கடவுளுக்கு பிடித்தமான வழிபாடு அயலாரைப் பாதுகாப்பது

 

கடவுளுக்கு பிடித்தமான வழிபாடு அயலாரைப் பாதுகாப்பது



இயேசு உடைந்த இதயங்களைக் குணப்படுத்தி, ஆன்மாவை சிறையிலடைக்கும் விலங்குகளை உடைத்தெறிந்து நமக்கு விடுதலையளித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு என்பது நம்முடன் வாழும் அயலாரை கவனித்துக் கொள்வதாகும் என்றும், காயம்பட்ட மனித குலத்தை இயேசு சந்திக்கின்றார் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 17, சனிக்கிழமை மரியாவின் மாசற்ற திருஇதய விழாவை திருஅவை சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு தன் கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆன்மாவைச் சிறைபிடிக்கும் சங்கிலியிலிருந்து நம்மை விடுவித்தவர் இயேசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு காயப்பட்ட மனிதகுலத்தை  சந்தித்து, துன்பப்பட்ட முகங்களை அன்புடன் வருடி, உடைந்த இதயங்களைக் குணப்படுத்தி, ஆன்மாவை சிறைப்படுத்தும் விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலையளித்தார். இவ்வாறாக, நம் அயலாரைக் கவனித்துக் கொள்வதேக் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு, என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார் என்பதே திருத்தந்தையின் அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.


பாகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு திருப்பீடத்தூதர் நியமனம்

 

பாகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு திருப்பீடத்தூதர் நியமனம்



கஜகஸ்தானின் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு George Panamthundil அவர்கள் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஐவரி கோஸ்ட், பாகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு திருப்பீடத்தூதர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 16 வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறிய நிகழ்வின் போது இதனை அறிவித்தார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

கஜகஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதராக George Panamthundil அவர்களையும், பாகிஸ்தானின் திருப்பீடத்தூதராக பேரருள்திரு Germano Penemote அவர்களையும், ஐவரி கோஸ்ட் திருப்பீடத்தூதராக பேரருள்திரு Rueda Beltz அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கஜகஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதர்

கஜகஸ்தானின்  திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு George Panamthundil அவர்கள் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். 1998ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவுபெற்ற இவர், கீழைரீதிக்கான திருஅவைச் சட்டங்களில் பட்டம் பெற்றவர். 2005ஆம் ஆண்டு முதல் திருப்பீடத்தில் பணியாற்றி வரும் இவர் Costa Rica, Guinea, Iraq, Austria, Israele, மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள  திருப்பீடத்தூதரகக் குழுவில் பணியாற்றியுள்ளார். மேலும், சிப்ரோவின் திருப்பீட பிரதிநிதியாகவும் உள்ள பேரருள்திரு George Panamthundil அவர்கள், பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், ஸ்பானியம், ஜெர்மன் மொழிகளும் அறிந்தவர்.

பாகிஸ்தான் திருப்பீடத்தூதர்

பாகிஸ்தான் நாட்டின் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள 53 வயதான ஆப்ரிக்க  அருள்பணியாளர் Germano Penemote அவர்கள், திருப்பீடத்தூதரகத்தின் ஆலோசகராக பணியாற்றியவர். இவர் தென்  ஆப்ரிக்காவின் Angola வில் உள்ள Ondobe இல் பிறந்தவர். 1998ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவர். 2003ஆம் ஆண்டு திருப்பீடப்பணிகளில் ஈடுபடத்துவங்கிய இவர், பெனின், உருகுவே, ஸ்லோவாக்கியா, தாய்லாந்து, ஹங்கேரி, பெரு, ருமேனியா ஆகிய இடங்களில் திருப்பீடத்தூதரகத்தில் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானியம் மொழிகள் அறிந்தவர்.

ஐவரிகோஸ்ட் திருப்பீடத்தூதர்

4 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது  2016 முதல் 2020 வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வெளிநாட்டு பயணங்களின் அமைப்பாளராக இருந்து உலகம் முழுவதும் பயணம் செய்த பேரருள்திரு Mauricio Rueda Beltz அவர்கள் ஐவரிகோஸ்ட் திருப்பீடத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் திருத்தூதுப் பணியாளர்களுக்கான பிரிவின் துணைச் செயலாளராகப் பணியாற்றிய பேரருள்திரு Mauricio Rueda Beltz அவர்கள்,  கொலோம்பியாவின் பொகோட்டாவைச் சேர்ந்தவராவார். 1996 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்ற இவர் திருஅவை சட்டங்களில் பட்டம் பெற்றவர். கினியா, சிலி,  அமெரிக்கா மற்றும் ஜோர்தான் திருப்பீடத்தூதரகத்திலும் பணியாற்றியவர்.  பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியன், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளை அறிந்தவர்.


Friday 16 June 2023

ROBERT JOHN KENNEDY: திருத்தந்தை 6ஆம் பால்- வரலாறு

ROBERT JOHN KENNEDY: திருத்தந்தை 6ஆம் பால்- வரலாறு:  திருத்தந்தை 6ஆம் பால்-  வரலாறு  திருத்தந்தை 23ஆம் ஜானின் சீர்திருத்தங்களை ஏற்க மறுத்த ஒரு கூட்டம், அவரின் சீர்திருத்தங்கள் தொடரவேண்டும் என ...

Pope Francis returns to Vatican after discharge from hospital

 Pope Francis returns to Vatican after discharge from hospital


Pope Francis returns to the Vatican on Friday morning after he is discharged from the Gemelli Policlinic hospital, making his usual detour to pray before the Icon of the Blessed Mother at Santa Maria Maggiore, and paying a private visit to greet some nuns.

By Vatican News staff reporter

Pope Francis was released from Gemelli Hospital on Friday morning following his abdominal surgery on 7 June, and has returned to the Vatican.

As he left the hospital, Pope Francis stopped his car briefly to greet those present, pausing for a moment for some salutations.

In a brief statement Thursday, the Director of the Holy See Press Office, Matteo Bruni, informed the press that Pope Francis would be released from the hospital this morning.

The Pope's surgeon, Dr. Sergio Alfieri, said the Pope is well, even better than before.

The Pope, responding to some journalists' questions about how he is, said "I am still alive," and expressed his sorrow for the tragic deaths of migrants in Greece.

Following the Pope's departure from the hospital, he maintained his tradition of making a detour to Rome's Marian Basilica of Santa Maria Maggiore to pause in prayer before the icon of the Blessed Mother, Salus Populi Romani.

The Holy Father had likewise stopped in the Basilica when returning to the Vatican, following his hospitalization for bronchitis on 1 April 2023, and after his colon surgery on 14 July 2021.

Prior to returning to the Vatican through the Perugino Gate, the Holy Father made a private visit to the religious sisters of the Maria Santissima Bambina Institute, near the Vatican, who are in Rome for their General Chapter.

Outside the Perugino Gate, the Pope greeted the law enforcement officers and thanked them for their service.

Returning to normalcy

Bruni has sent regular statements confirming the Pope's progress, consistently stating the the medical team reports that the clinical picture is progressively improving and "the post-operative course and recovery is regular."

There were no complications with the Pope's surgery.

Pope Francis should eventually be able to resume travel and his normal activities, but should not lift heavy objects, according to his doctors.

Upcoming appointments

Due to the surgery and subsequent recovery, the Pope's audiences were suspended until Sunday, 18 June.

The Vatican has confirmed the Pope's Sunday Angelus, and other audiences.

However, the June 21 General Audience "has been cancelled to safeguard the Holy Father's post-operative recovery."

Pope Francis has Apostolic Journeys to Portugal, from 2 to 6 August, for the occasion of World Youth Day, and Mongolia, from 31 August to 4 September, on his agenda.

Tenderness at Gemelli

Thursday morning, Pope Francis made a return visit to the hospital's children's cancer ward, which he had visited during his last stay in the hospital before Holy Week for bronchitis.

During his stay, the Holy Father thanked all the medical personnel for their professionalism and their efforts "to alleviate the suffering of others, not only with medication, but also with tenderness and humanity."

The Agostino Gemelli University Policlinic, the largest hospital in Rome, is the teaching hospital for the Catholic University’s medical school.

The hospital is named for Franciscan Friar Agostino Gemelli, a physician and psychologist, who also was the founder and first rector of the University.

உலக ஏழைகள் தினத்தையொட்டி திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

 

உலக ஏழைகள் தினத்தையொட்டி திருத்தந்தையின் சிறப்புச் செய்தி




மகிழ்ச்சியில்லாதவைகளையும், துயர் தருபவைகளையும் இளையோர் ஒதுக்கி வைக்க விரும்புவதால், ஏழைகளும் பலவேளைகளில் மறுக்கப்படும் ஆபத்து உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏழைகளின் பாதுகாவலரான புனித பதுவை அந்தோணியாரின் திருவிழாவன்று உலக ஏழைகள் தினத்திற்கான சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழை எவரிடம் இருந்தும் உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே (தொபி 4:7) என்ற தோபித்து நூல் கூறும் வார்த்தைகளை, இவ்வாண்டு நவம்பர் 19 ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளுக்கான தன் செய்தியின் துவக்கத்திலேயே சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இரக்கத்தின் பலன்தரும் அடையாளமாக ஏழைகள் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தன் மகன் தோபியாவிற்கு தோபித்து எடுத்துரைத்த அறிவுரைகளை இச்செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை, பிறரன்பு நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்த தோபித்தின் உடைமைகள் அனைத்தையும் மன்னர் பறித்துக்கொண்டதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறரன்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுத் திரும்பியபின் களைப்பாக தூங்கிய தோபித்தின் கண்களில் பறவை ஒன்று எச்சமிட, அவர் பார்வையையும் இழந்தது குறித்து ஆழமாக சிந்திக்க நம் விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது, ஏனெனில் நம்மைத் தன் விசுவாசத்தில் பலப்படுத்தவே இறைவன் நமக்குத் துன்பங்களை வழங்குகிறார் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்ப துயர்களைச் சந்தித்த தோபித்து தன் ஏழ்மை நிலையை ஏற்றுக்கொண்டதுடன் அதன் வழியாக மற்றவர்களின் ஏழ்மை நிலையை உணர்ந்தவராக உதவினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கட்டளைகளை மட்டும் கடைப்பிடித்தால் போதாது ஏழைகளின் துயர் துடைக்க உதவவேண்டும் என்பதை தோபித்து உணர்ந்து செயலாற்றினார் என மேலும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றைய உலகில் இணையதளங்கள் வழியாகப் பெறும் மாய உலகிற்கும் உண்மை நிலைகளுக்கும் இடையேயான முரண்பாடுகளால் குழம்பிப் போயிருக்கும் இளையோர், மகிழ்ச்சியில்லாதவைகளையும், துயர் தருபவைகளையும் ஒதுக்கி வைக்க விரும்புவதால், ஏழைகளும் பலவேளைகளில் மறுக்கப்படும் ஆபத்து உள்ளது என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் நல்ல சமாரியர் உவமை என்பது, கடந்த காலத்திற்கு மட்டும் உரியதல்ல, மாறாக இன்றைய நம் நிலைகளைக் குறித்தும் கேள்வி எழுப்பவல்லது என உரைத்த திருத்தந்தை, ஏழைகளின் துயர்துடைக்க நாம் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளோம் என நினைவுபடுத்தியுள்ளார்.

திருத்தந்தை புனித 23ஆம் ஜான் அவர்களின் Pacem in Terris சுற்றுமடலின் 60ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையும், குழந்தை இயேசுவின் புனித திரேசா பிறந்ததன் 150ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சுற்றுமடலிலும், புனித குழந்தை திரேசாவின் எழுத்துக்களிலும் ஏழைகள் மீதான அக்கறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளவைகளையும் எடுத்தியம்பியுள்ளார்.


மக்களில் நம்பிக்கையை ஊட்ட ஒரு டிஜிட்டல் குறிப்பேடு

 

மக்களில் நம்பிக்கையை ஊட்ட ஒரு டிஜிட்டல் குறிப்பேடு



கோவிட் தொற்றுநோய்க் காலத்தில் திருத்தந்தை இவ்வுலகிற்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள் டிஜிட்டல் குறிப்பேட்டில் சேமிக்கப்பட்டு வான்வெளி சுற்றுப் பாதையில் வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள Vandenberg தளத்திலிருந்து, திருத்தந்தையின் நம்பிக்கைச் செய்தியைத் தாங்கிய SPEI  என்ற சிறு விண்கலம் தன் பயணத்தைத் துவக்கியுள்ளது.

“ஏன் அஞ்சுகிறாய், இன்னும் உனக்கு விசுவாசமில்லையா“ என்ற தலைப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த சிறிய டிஜிட்டல் குறிப்பேட்டில் திருத்தந்தை அவர்கள், கோவிட் தொற்றுநோய்க் காலத்தில் இவ்வுலகிற்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள் சேமிக்கப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் இந்த டிஜிட்டல் குறிப்பேட்டை உலகின் வான்வெளி சுற்றுப்பாதையில் 525 கிலோமீட்டர் தூரத்தில் வைக்க உள்ளது இந்த சிறு விண்கலம்.

திருப்பீட்டத் தகவல்தொடர்புத் துறையுடன் இணைந்து தூரின் நகர் பல்கலைக்கழகத்தின் வழியாக இத்தாலிய விண்வெளி அமைப்பும் இந்த முயற்சியை மேற்கொண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலிருந்து அனுப்பியுள்ளன.

மக்களில் நம்பிக்கையையும் உடன்பிறந்த உணர்வு நிலையையும் தூண்ட உள்ள செய்திகளைத் தாங்கும் இந்த டிஜிட்டல் குறிப்பேடு, ஓர் அலைபரப்பியையும் ஒரு சேமிக்கும் நுண்சில்லையும் கொண்டுள்ளதுடன், பண்பலை வழியாக வானொலிகளுக்கு திருத்தந்தையின் சேமிக்கப்பட்ட கோவிட் தொற்று நோய் கால நம்பிக்கைச் செய்திகளையும் வழங்க உள்ளது.

ஏற்கனவே இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதி புதன் பொதுமறைக்கல்வியுரையின்போது இந்த முயற்சியை திருத்தந்தை ஆசீர்வதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


திருத்தந்தை 6ஆம் பால்- வரலாறு

 திருத்தந்தை 6ஆம் பால்-  வரலாறு 



திருத்தந்தை 23ஆம் ஜானின் சீர்திருத்தங்களை ஏற்க மறுத்த ஒரு கூட்டம், அவரின் சீர்திருத்தங்கள் தொடரவேண்டும் என விரும்பிய இன்னொரு கூட்டம் என இரு பிரிவுகள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 23ஆம் ஜான் துவக்கி வைத்த 2ஆம் வத்திக்கான் சங்கக்கூட்டத்தை வழிநடத்தி நிறைவு செய்த, மற்றும் உலகின் பல நாடுகளுக்கும் விமானம் மூலம் மேய்ப்புப்பணி சார்ந்த திருப்பயணங்களை துவக்கிவைத்த ஒரு திருத்தந்தையைக் குறித்து இன்று நாம் காண உள்ளோம்.

   திருத்தந்தை 6ஆம் பால் 1897ஆம் ஆண்டு வடஇத்தாலியின் Lombardy பகுதியிலுள்ள Brescia மாவட்டத்தின் Concesio என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் Giovanni Battista Enrico Antonio Maria Montini. இவரின் தந்தை ஒரு பிரபல வழக்குரைஞராகவும்; அரசியல்வாதியாகவும் இருந்தார். 1920ஆம் ஆண்டு தன் 23ஆம் வயதில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இரண்டே ஆண்டுகளில் திருப்பீடச் செயலகத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். பின்னாள் திருத்தந்தை 12ம் பயஸ், திருப்பீடச்செயலராக பணியாற்றியபோது 1937ல் திருப்பீடத் துணைச் செயலராக நியமிக்கப்பட்டார் இவர். 1944ல் திருஅவையின் உள்விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவம் நியமிக்கப்பட்டார் Montini. 1950ஆம் ஆண்டின் புனித ஆண்டு கொண்டாட்டங்கள், 1954ல் மரியன்னை ஆண்டு கொண்டாட்டங்கள் போன்றவைகளை சிறப்புடன் ஏற்பாடு செய்ததில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. 32 ஆண்டுகள் திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றிய இவரை 1954ல் இத்தாலியின் மிலான் நகர் பேராயராக நியமித்தார் திருத்தந்தை 12ஆம் பயஸ். இருப்பினும் இவரை கர்தினாலாக திருத்தந்தை 12ஆம் பயஸ் உயர்த்தவில்லை. 1958ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திருத்தந்தை 23ஆம் ஜானின் முதல் நடவடிக்கைகளுள் ஒன்று, பேராயர் Montiniயை கர்தினாலாக உயர்த்துவதாக இருந்தது. ஆம், 1958ஆம் ஆண்டு டிசம்பர் 15ந்தேதி இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

  திருத்தந்தை 23ஆம் ஜான் 1963ஆம் ஆண்டு ஜூன்மாதம் 3ஆம் தேதி உயிரிழந்தபோது, அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான கர்தினால்களின் கூட்டத்தில் இருவித பிரிவுகள் இருந்தன. திருத்தந்தை 23ஆம் ஜானின் சீர்திருத்தங்களை ஏற்க மறுத்த ஒரு கூட்டம், அவரின் சீர்திருத்தங்கள் தொடரவேண்டும் என விரும்பிய இன்னொரு கூட்டம். தொடர வேண்டும் என விரும்பிய குழுவே வெற்றியும் பெற்றது. ஆம், சீர்திருத்தங்களை ஆதரித்த கர்தினால் Montini  ஜூன்மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி திருத்தந்தையாக முடிசூட்டப்பட்ட புதிய திருத்தந்தை 6ஆம் பால், ஒன்பது மொழிகளில் தன் அருளுரையை வழங்கினார். திருத்தந்தை ஒருவர் மணிமகுடம் சூட்டப்பட்டது அதுவே கடைசி முறையாகும். அவர் தனக்கு சூட்டப்பட்ட மணிமகுடத்தை அமெரிக்க தலத்திருஅவைக்கு வழங்கி, அதிலிருந்து பெற்ற பணத்தை உலகின் ஏழைகளுக்கென அளித்தார். அந்த மணிமகுடம் இன்றும் வாஷிங்டன் அமலஉற்பவ அன்னை தேசிய திருத்தலத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளது.  திருஅவையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு, குறிப்பாக தலமொழியில் திருப்பலி, வழிபாடு, கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைப்புக்கான முயற்சிகள் ஆகியவைகளுக்கு வழிவகுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி  1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நிறைவுக்கு கொணர்ந்தார் திருத்தந்தை 6ஆம் பால். 

  இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்துகொண்டிருந்தபோதே, 1964ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் புனித பூமிக்கும் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை 6ஆம் பால். கி.பி. 62ல் முதல் திருத்தந்தை புனித பேதுரு யெருசலேமிலிருந்து வெளியேறியபின், திருத்தந்தை ஒருவர் அம்மண்ணில் காலடி பதித்தது 1964ல்தான். கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து 1054ல் பிரிந்த கீழை ரீதி கிறிஸ்தவ ஒன்றிப்பு

சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Athenagoras அவர்களை இப்பயணத்தின்போது சந்தித்து ஆரத் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தினார் திருத்தந்தை. அக்கிறிஸ்தவ சபை கத்தோலிக்க திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததையும் அகற்றினார். அனைத்துலக நற்கருணை மாநாட்டையொட்டி 1964 டிசம்பரில் மும்பை வந்தார். 1965 அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க்குக்கும் சென்றார். இங்கு ஐக்கிய நாட்டு சபை கட்டிடத்தில் இவர் பிரெஞ்ச் மொழியில் ஆற்றிய உரையின்போது, ‘போர் என்பதே இனிமேல் வேண்டாம்’ என்று உறுதியாக கூறியது பிரபலமானது. தன் பதவிக்காலத்தின் போது பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை வத்திக்கானிலும், தன் திருப்பயணங்களின்போது அந்தந்த நாடுகளிலும் சந்தித்தார் பாப்பிறை. 1969ஆம் ஆண்டு ஜெனிவா சென்று உலக கிறிஸ்தவ சபைகளின் அவைக் கூட்டத்தில் உரையாற்றினார். திருஅவையை வழி நடத்தியக் காலக்கட்டத்தில் ஜோர்தான், இஸ்ரயேல், லெபனன், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, போர்த்துக்கல்லின் பாத்திமா, துருக்கி, கொலம்பியா, Bermuda, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, உகாண்டா, ஈரான், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், Samoa தீவு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, Hong Kong, இலங்கை ஆகிய இடங்களுக்கு  திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை 6ஆம் பால். இவர் திருஅவையை வழிநடத்திய 15 ஆண்டுகளில்  38 பேரை அருளாளர்களாகவும், 84 பேரை புனிதர்களாகவும் அறிவித்துள்ளார். இவர் 1970ஆம் ஆண்டில் புனிதர்கள் அவிலா திரேசாவையும், சியென்னாவின் கத்தரீனாவையும் திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவித்தார். 1967ல் வெளியிடப்பட்ட Populorum progressio சுற்றுமடல் உட்பட, இவரின் 7 மடல்களுள் மிகவும் பிரபலமானது, மனித வாழ்வு குறித்த Humanae vitae (1968 ஜூலை 25) என்ற சுற்றுமடலாகும்.

  திருத்தந்தை 6ஆம் பாலின் வாழ்வின் கடைசி காலக்கட்டத்தில் அவருக்கு மிகுந்த மனக்கவலையை வழங்கிய ஒரு நிகழ்வு இடம் பெற்றது. இத்தாலியின் முன்னாள் பிரதமரும், திருத்தந்தையின் பள்ளிக்கால நண்பருமான Aldo Moro சிலரால் கடத்தப்பட்டு 1978ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி கொலைச் செய்யப்பட்டார். திருத்தந்தை 6ஆம் பால் கலந்துகொண்ட  கடைசி பொது நிகழ்ச்சி, புனித ஜான் இலாத்ரன் பெருங்கோவிலில் அந்த முன்னாள் பிரதமரின் சவ அடக்கத் திருப்பலியில் பங்கேற்றதாகும். 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் மட்டுமே திருத்தந்தைக்கான தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற புதிய நியதியை புகுத்தியவர் திருத்தந்தை 6ஆம் பாலே. அனைத்து ஆயர்களும் தாங்களே முன்வந்து தங்களின் 75ஆம் வயதில் தங்கள் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகும் கடிதத்தை திருஅவை தலைமைப்பீடத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தவரும் இவரே. இவர் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, திருத்தந்தையர்களின் Castle Gandolfo கோடை விடுமுறை இல்லத்தில் காலமானார். இவரின் விருப்பப்படியே இவர் உடல் தூய பேதுரு பசிலிக்கா அடிமட்டக் கல்லறையில் நிலமட்டத்தில் புதைக்கப்பட்டது. இவரை 2014ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி புனிதராகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 நேயர்களே! திருத்தந்தை 6ஆம் பாலுக்குப்பின் பொறுப்பெற்றவர் திருத்தந்தை முதலாம் ஜான் பால்.  மிகக் குறுகியக் காலமே திருஅவையை வழிநடத்திய இந்த புன்னகை திருத்தந்தையைக் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.