Tuesday 20 June 2023

திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற

 

திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற



இறைவனின் உண்மையான இருப்பை திருநற்கருணை குறித்து நிற்கின்றது என்பதை திருஅவை அதிகாரிகள் விசுவாசிகளுக்கு வலியுறுத்திக் கூறவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமாக இருக்கும் திருநற்கருணை மீதான அன்பை மீண்டும் உயிர்துடிப்புடையதாக மாற்ற உதவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய நற்கருணை மாநாட்டைத் தயாரிப்பதில் ஈடுபாடுள்ளோருக்கு தன் நன்றியையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய நற்கருணை மாநாட்டிற்கு தயாரித்துவரும் குழுவுக்கு வழங்கிய உரையில், இக்காலத்தில் திருநற்கருணை முன் அமர்ந்து செபிப்பதும், மௌனத்தில் இறைவனோடு உரையாடுவதும் குறைந்து வருவதாகக் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருநற்கருணை என்பது இறைவனின் உண்மையான இருப்பைக் குறித்து நிற்கின்றது என்பதை திருஅவை அதிகாரிகள் விசுவாசிகளுக்கு வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.  

நமக்காக அனைத்தையும், தன்னுயிரையும் தந்த இறைவனின் அன்பை நாம் திருநற்கருணையில் சந்திக்கிறோம் என்ற திருத்தந்தை, அன்பு பிறருடன் பகிரப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் கூறினார்.

இயேசுவின் அன்பை அடுத்திருப்பவருடன், குறிப்பாக முதியோர் மற்றும் நோயுற்றோருடன் பகிரவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய ஐக்கிய நாட்டில் இடம்பெறவிருக்கும் தேசிய திருநற்கருணை மாநாடு, அருளின் நிகழ்வாக இருந்து மக்களை நல்கனிகளைத் தருபவர்களாக மாற்ற உதவுவதோடு, நம்மில் நம்பிக்கையைத் தட்டியெழுப்பி, வாழ்வைப் புதுப்பிக்கட்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...