Friday, 2 June 2023

உணவை வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்

 

உணவை வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்



உலகத் தலைவர்கள் உலகளாவிய பட்டினியை அதிகரிக்கச் செய்யும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உணவை வீணாக்குதல், பசியை ஒழித்தல் போன்றவற்றில் நிலையான தீர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று உலக பசி மற்றும் பட்டினி நாளுக்காக அழைப்பு விடுத்துள்ளது பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

மே 28 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட உள்ள உலக பசி மற்றும் பட்டினி நாளை முன்னிட்டு பசி, பட்டினியை முடிவுக்குக் கொண்டு வரவும், நிலையான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கவும் வலியுறுத்தியுள்ளது பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

உணவை வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், உள்ளூர் உணவு முறைகள் ஆதரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பு, இந்நடவடிக்கைகள் பசியை எதிர்த்துப் போராட உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக பூமியைப் பாதுகாக்கும் வழிமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

போர் மற்றும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்களால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் ஆரோக்கியமான உணவைப் போதுமான அளவு பெற முடியாமல் துன்புறுகின்றனர் என்று  எடுத்துரைத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, நிலையான விவசாய நடைமுறைகள், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திறனை உருவாக்குதல், உலகத் தலைவர்கள் உலகளாவிய பட்டினியை அதிகரிக்கச் செய்யும் கொள்கைகள் போன்றவற்றை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...