Friday, 2 June 2023

எருசலேமில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூத ஆர்வலர்கள் வன்முறை!

 

எருசலேமில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூத ஆர்வலர்கள் வன்முறை!



எருசலேம் என்பது யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் பகிரப்பட்ட புனித நகரமாகும் : Jerry Pillay

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 28, ஞாயிறன்று, எருசலேமில் நிகழ்ந்த நற்செய்தி அறிவிப்பு குறித்த கிறிஸ்தவ நிகழ்வுக்கு எதிராக தீவிர வலதுசாரி யூத ஆர்வலர்கள் நடத்திய வன்முறை எதிர்ப்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளது WCC எனப்படும் உலகத் திருச்சபைகள் அமைப்பு.

மே 30, இச்செவ்வாயன்று, இந்த வன்முறை எதிர்ப்புக் குறித்து கருத்துதெரிவித்துள்ள உலகத் திருச்சபைகளின்  (WCC) பொதுச் செயலாளர் Jerry Pillay அவர்கள், எருசலேம் மூன்று மதங்களின் பகிரப்பட்ட புனித நகரம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் சகிப்புத்தன்மை மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று கவலை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது 12-க்கும் மேற்பட்ட தீவிர வலதுசாரி யூத ஆர்வலர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர் என்றும், அவர்கள்மீது மீது எச்சில் துப்பவும், சன்னல்களை அடித்து உடைத்து, அவர்களை வெளியேறும்படி கத்தவும் செய்னர் என்றும் விவரித்துள்ளார் Jerry Pillay.

மேலும் இந்த வன்முறை நிகழ்வின்போது, கிறிஸ்தவர்கள் வேண்டுமானால், தங்கள் ஆலயங்களில் இறைவேண்டல் செய்யட்டும், ஆனால், யூதர்களின் புனித இடமான எருசலேம் கோவிலின் தெற்கு நுழைவாயிலில் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனனர் யூத ஆர்வலர்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவ்வன்முறை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ள வேளை, பிற யூத அமைப்புகள் உட்பட பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...