கடவுளுக்கு பிடித்தமான வழிபாடு அயலாரைப் பாதுகாப்பது
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு என்பது நம்முடன் வாழும் அயலாரை கவனித்துக் கொள்வதாகும் என்றும், காயம்பட்ட மனித குலத்தை இயேசு சந்திக்கின்றார் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 17, சனிக்கிழமை மரியாவின் மாசற்ற திருஇதய விழாவை திருஅவை சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு தன் கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஆன்மாவைச் சிறைபிடிக்கும் சங்கிலியிலிருந்து நம்மை விடுவித்தவர் இயேசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு காயப்பட்ட மனிதகுலத்தை சந்தித்து, துன்பப்பட்ட முகங்களை அன்புடன் வருடி, உடைந்த இதயங்களைக் குணப்படுத்தி, ஆன்மாவை சிறைப்படுத்தும் விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலையளித்தார். இவ்வாறாக, நம் அயலாரைக் கவனித்துக் கொள்வதேக் கடவுளுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு, என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார் என்பதே திருத்தந்தையின் அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.
No comments:
Post a Comment