Tuesday, 20 June 2023

நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்க வேண்டும்

 

நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்க வேண்டும்



ஜூபிலிக் கொண்டாட்டங்கள், இறைவனுடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுடனும், நம்முடனும் ஒப்புரவைக் கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலிய தினஇதழ் Il Messaggero தன் 145ஆம் ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டி அப்பத்திரிகைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலியான செய்திகள் பரப்பப்பட்டுவரும் இன்றைய காலச்சூழலில் சமூகத்தில் நன்னெறி மதிப்பீடுகளின் அடிப்படையில் செய்திகளை வழங்கிவருவதற்காக இப்பத்திரிகைக்கு நன்றியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, 2025ஆம் ஜூபிலிக் கொண்டாட்டங்களுக்கானத் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் கிறிஸ்தவச் செய்திகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

விவிலிய பாரம்பரியத்தில் வரும் இந்த ஜூபிலிக்கொண்டாட்டங்கள், இறைவனுடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுடனும், நம்முடனும் ஒப்புரவைக் கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றன என்பதையும் தன் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதாபிமானமும், ஒப்புரவும், ஒருமைப்பாடும் நிறைந்த ஓர் உலகைக் கட்டியெழுப்ப 2025 ஜூபிலி ஆண்டு நமக்கு உதவட்டும் என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறைவனின் இரக்கமும் கருணையும் நம்மைப் புதுப்பிக்கவும், ஒப்புரவாக்கவும் வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூபிலிக் கொண்டாட்டம் என்பது, வெறும் மதம் சார்புடையது அல்ல, மாறாக, நன்னெறி, ஒழுக்க ரீதி, சமூக, கலாச்சார, பொருளாதர, மற்றும் நீதித் தொடர்புடையவைகளையும் உள்ளடக்கி, மக்களின், குறிப்பாக, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் மேம்பாட்டிற்கு உதவுவது என தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...