Monday, 28 February 2022

C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

 

C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெற்ற C-9 கர்தினால்கள் அவை குறித்த திருப்பீடத்தின் செய்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்குத் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C-9 கர்தினால்கள் அவைக் கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெற்றது. 

அந்த அவையின் கர்தினால்கள் தங்கள் சொந்த பகுதிகளில் உள்ள சமூக-அரசியல் மற்றும் திருஅவை நிலைமை குறித்து பேசிய உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் பொதுநிலையினருக்கும் தங்களுக்கும் தேவையான மாற்றத்தை உருவாக்கத் தேவைப்படும், இக்கூட்டத்தின் கருப்பொருளைக் குறித்து கலந்துரையாடியதாக, திருப்பீட தகவல் தொடர்பகம், பிப்ரவரி 24, இவ்வியாழனன்று வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.  

அதைத் தொடர்ந்து, விவாதிக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில், திருத்தந்தையின், தற்போதைய திருப்பீடப் பணிகள் மற்றும் திருஅவைக் கட்டமைப்பில் தூதரகங்களின் பங்கு மற்றும், செயல்பாடு தொடர்பான சில அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், திருப்பீட தகவல் தொடர்பகம் எடுத்துரைக்கின்றது.

இந்தக் கூட்டத்தில், FMA. துறவு சபையைச் சார்ந்த ​​இறையியலாளர் அருள்சகோதரி லிண்டா போச்சர் அவர்களின் "பெண்களின் பங்கு மற்றும் திருஅவையில் "மரியாவின் கொள்கை" என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்தும், C-9 அவை உறுப்பினர்கள் அனைவரும் கேட்டறிந்ததுடன், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர் என்றும், அத்தொடர்பகம் கூறுகின்றது.

திருத்தந்தையுடன், கர்தினால்கள், Pietro Parolin, Giuseppe Bertello, Óscar A. Rodríguez Maradiaga, S.D.B., Reinhard Marx, Sean Patrick O'Malley, O.F.M. Cap., Oswald Gracias, Fridolin Ambongo Besungu, O.F.M. Cap மற்றும் இவ்வமைப்பின் செயலர் H.E. Mons. Marco Mellino அவர்களும் பங்குபெற்றனர்.

1 comment:

  1. MGM Grand Casino & Hotel - MapYRO
    The casino 수원 출장마사지 features a 55,000-square-foot entertainment venue featuring 남원 출장샵 a wide 의왕 출장샵 range of table games including blackjack, roulette and video 전주 출장마사지 poker. 김제 출장마사지

    ReplyDelete

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...