Monday, 28 February 2022

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் அம்சங்கள்

 

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் அம்சங்கள்



பாகிஸ்தானின் மக்கள் தொகையில், 3.5 விழுக்காட்டினர், கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

தெய்வநிந்தனை குற்றச்சாட்டு, கட்டாய மதமாற்றம், தொழிலில் நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள், கல்வி அமைப்பு போன்றவை பாகிஸ்தான் நாட்டில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் அம்சங்களாக உள்ளன என்று, CSJ எனப்படும் சமுதாய நீதி மையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மை சமுதாயங்களின் சமூக, அரசியல், மதம் ஆகிய சூழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் CSJ மையம், 2021ம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டிலும் நடைமுறையில் இருந்த தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் குறைந்தது 84 பேர் குற்றம் சாட்டப்பட்டனர் எனவும், இலங்கை குடிமகள் பிரியங்கா குமாரா உட்பட, மூன்று பேர் சட்டத்திற்குப் புறம்பே கொல்லப்பட்டனர் எனவும், CSJ மையம் அறிவித்துள்ளதாக, பீதேஸ் செய்தி கூறுகிறது.  

மேலும், 2021ம் ஆண்டில், 39 இந்துமதச் சிறுமிகள், 38 கிறிஸ்தவச் சிறுமிகள் மற்றும், பெண்கள், ஒரு சீக்கிய மதச் சிறுமி என, குறைந்தது 78 பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் CSJ மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பீட்டர் ஜேக்கப் என்ற கத்தோலிக்கரால் வழிநடத்தப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்ட CSJ மையம், பாகிஸ்தானில் சமய சுதந்திரம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மக்கள் தொகையில், 3.5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்கள். (Fides)


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...