அரிய வகை பறவை இனமான, இரவுக் கிளிகள், அவுஸ்ரேலிய காடுகளில் உயிர்வாழ்வது கண்டுபிடிப்பு!
அரிய வகை பறவை இனமான, இரவுக் கிளிகள், அவுஸ்ரேலிய காடுகளில்
உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல்
சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன. அவ்வகையில்,
100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரியவகை பறவை இனமான, இரவுக் கிளிகள்
அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், அவுஸ்ரேலிய காடுகளில் வன
விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, ஜான் யங், இந்த
கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக, இரவுக் கிளிகள் பற்றிய தேடலில்
ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, 2007ம் ஆண்டு, இரவுக் கிளிகளின்
குரல்கள், காடுகளில் வைக்கப்பட்டிருந்த, ஒலிப்பதிவு கருவிகளில்
பதிவாகியிருந்தன. இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன், கிளிகளை படம்
பிடிக்கும் முயற்சியில், யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக,
அவுஸ்ரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, ஒளிப்பதிவு
கருவிகளில், அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், இரவுக் கிளிகளின் அசைவுகள், செயல்பாடுகள், அதன் சப்தம் போன்றவை,
ஒளி மற்றும் ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளன. இதை, குயின்ஸ்லாந்து
மியூசியத்தில் ஒப்படைத்த யங், இது குறித்து, மேலும் ஆய்வு செய்ய
திட்டமிட்டுள்ளார். இவர் கொடுத்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த வன உயிரியல்
ஆய்வாளர்கள், இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
No comments:
Post a Comment