நீர் இன்றி தாவரம் வளர புதிய வழி கண்டுபிடித்த ஆய்வாளர்! (photos)
நீர் இல்லாது போனாலும் தாவரங்களின் வறட்சியை தடுத்து வளர்ச்சியை மேம்படுத்த கூடிய வகையில் ஆய்வாளர் ஒருவர் புதிய இரசாயனவியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அதாவது நீரில்லாத வறட்சியான பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளைmex-ten-02 மேற்கொள்ளும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பொன்றினை மெக்சிகோவைச் சேர்ந்த இரசாயனவியலாளராருவர் மேற்கொண்டுள்ளார்.
அவரது கண்டுபிடிப்பு என்னவெனில் நீரை உறிஞ்சு சேமித்து வைப்பதன் மூலம் அதனை எதிர்காலத்தேவைக்கு உபயோகப்படுத்தலாகும். நீரை உறிஞ்சு சேமித்து வைக்கும் பொருட்டு ‘சொலிட் ரெய்ன்’ எனும் சீனியைப் போன்ற தூள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பொட்டாசியம் பொலியகிரைலேட் எனும் மூலப் பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. (யாழ்மீடியா )
குறித்த தூளானது அதன் உருவத்தைப் போல 500 மடங்கு அளவு நீரை உறிஞ்சு வைத்துக்கொள்ளக்கூடியது. மேலும் 10 கிராம் ‘சொலிட் ரெய்ன்’ தூள்கள் 1 லீட்டர் நீரினை ஜெல்லாக மாற்றி தம்முள் சேமித்துவைக்கும் திறன் படைத்தன. சுமார் 1 வருட காலத்திற்கு ஆவியாகாமல் அந்நீரை ‘சொலிட் ரெய்ன்’ தூள்கள் சேமித்து தனக்குள் வைக்கக்கூடியது. பின்னர் இதனை மண்ணுக்குள் போடுவதன் மூலம் தாவரங்களின் வேர்களால் அந்நீர் உறிஞ்சப்படும். இது தாவரங்கள் செழிப்பாக வளர வழிசெய்கின்றது.
இப்புதிய கண்டுபிடிப்பானது வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைவதை பெரிதும் குறைக்குமென இதனை உருவாக்கிய மெக்சிகோ இரசாயனவியலாளரான சேர்ஜியோ ஜீசஸ் ரிகோ வெலஸ்கோ தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment