முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …
முதுமையிலும் மூளைத்திறன் சிறப்பாக செயல்பட ஐந்து முக்கியத் தேவைகளைச் சொல்கின்றனர்.
சரியான உணவு, உடற்பயிற்சி, சவால்களை எதிர்கொள்ளுதல், புதுமைகளில் ஆர்வம் மற்றும் அன்பு.
அமெரிக்க நரம்பியல் கல்விக்கழக்த்தின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று, ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றது.
நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத்திறன் குறையாமல் இருப்பார்கள்.
நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருக்கும்.
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.
தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான
உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன
என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும்
பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம்.
நாம் மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை.
ஆதாரம் : சித்தார்கோட்டை
No comments:
Post a Comment