நாவைப் பற்றி நாலு விடயங்கள்...
- உடலின் மிக வலுவான தசை, நமது நாக்கு. Thomas Blackstone என்பவர் தன் நாவில் மாட்டப்பட்ட ஒரு கொக்கியைக் கொண்டு 24 பவுண்டு எடையுள்ள ஒரு பொருளைத் தூக்கினார். எப்பக்கமும் வளைந்துகொடுக்கும் திறன் பெற்றதும் இதுவே.
- நாவின் மேல்பரப்பு இயற்கையான இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது நல்ல அடையாளம். இதற்கு மாறாக, நாவில் வெள்ளைப்படலம் படிந்திருந்தால், 'பாக்டீரியாக்கள்' அதிகம் உள்ளன என்று பொருள். நாவை நாம் சுத்தமாக, இளம் சிவப்பு நிறத்தில் பாதுகாத்து வந்தால், பல நோய்களைத் தடுக்கலாம். மருத்துவர்கள் நமது நாவை நீட்டச் சொல்லிப் பார்ப்பது, நமது உடலின் நலனை அறிந்துகொள்ளவே.
- நமது நாவில் உள்ள 3,000க்கும் அதிகமான சுவை உணரும் முகடுகளுடன் சேர்த்து, நமது வாயில் 10,000க்கும் அதிகமான சுவை முகடுகள் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பொருள்களின் சுவைகளையே நாவினால் உணர முடியும்.
- கைவிரல்களில் உள்ள தனித்துவம் மிக்க இரேகைகள் போலவே, ஒவ்வொருவர் நாவிலும் தனித்துவம் மிக்க இரேகைகள் உள்ளன.
God is love! Catholic blogwalking http://emmanuel959180.blogspot.in/
ReplyDelete