சிகரெட் பிடிப்பதை நிறுத்த சிறந்த வழிகள்
*சிகரெட் பிடிப்பதை விடுவதில் உள்ள நன்மைகளைச் சிந்தித்தல். சிகரெட்டை கைவிடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
*சிகரெட் பிடிப்பதை உடனடியாக நிறுத்தாமல், எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, நிறுத்துவதே சிறந்த வழியாகும்.
*சிகரெட்
பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க உடற்பயிற்சி உதவும்.
*சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களைப்
படிக்கலாம்.
*நீங்கள்
சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த
நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள்.
*சிகரெட் பணத்தைச் சேமியுங்கள். பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களைச் சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம்.
*சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களைத் தூக்கி எறியுங்கள்.
*சிகரெட்
பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன.
மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
*பலருக்கும் குடிப்பழக்கம்தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.
ஆதாரம் : தினமணி
No comments:
Post a Comment