Tuesday 30 July 2013

பிரேசில்

பிரேசில்

தென் அமெரிக்காவில் பெரிய நாடாக விளங்கும் பிரேசில், 1500ம் ஆண்டு சனவரி 26ம் தேதி Vincente Yanez Pinoz என்ற இஸ்பானியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர், புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பசின் குழுவில் இருந்தவர். ஏறக்குறைய 2,500 மைல் நீளத்தையும், 2,650 மைல் அகலத்தையும் கொண்டுள்ள பிரேசில், 32,18,130 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. தென் அமெரிக்காவில் சிலே நாட்டைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது பிரேசில். 1822ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டிடமிருந்து விடுதலை அடைந்த பிரேசில் பேரரசு, 1889ம் ஆண்டில் குடியரசானது. 1891ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின்படி அரசுத்தலைவரைக் கொண்ட ஒரு குடியரசாகச் செயல்படத் தொடங்கியது. 26 மாநிலங்களைக் கொண்டுள்ள இந்நாட்டில், 1964ம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால் 1985ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அதன்பின்னர் மீண்டும் பிரேசில் குடியரசானது. உலகிலே அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள பிரேசிலின் அதிகாரப்பூர்வ மொழி போர்த்துக்கீசியம். பிரேசிலில் சில முக்கிய நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. அவற்றில் பிரேசிலியா நகரம் மிகவும் புகழ்பெற்றது. பிரேசிலின் தலைநகரமான பிரேசிலியா, 1956ம் ஆண்டின் தொடக்கத்தில் Lúcio Costa, Oscar Niemeyer ஆகிய இரு கலைஞர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு 1960ம் ஆண்டில் அந்நாட்டின் தலைநகரமாக மாறியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திராத உலகின் பெரிய நகரமாகவும் பிரேசிலியா விளங்குகிறது. மூன்று சக்திகள் வளாகம், Paranoá ஏரி, அரசு மாளிகை, 124 வெளிநாட்டுத் தூதரகங்கள் என இந்நகரிலுள்ள ஆயிரக்கணக்கான அழகான இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. பிரேசிலுள்ள அமேசான் பருவமழைக்காடுகளும், அந்நாட்டில் பாயும்  அமேசான் நதியும் உலகப் புகழ்பெற்றவை.

ஆதாரம் : விக்கிப்பீடியா

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...