Tuesday 30 July 2013

உலகின் உயரமான நீர்வீழ்ச்சி

உலகின் உயரமான நீர்வீழ்ச்சி

நயாக்ரா நீர்வீழ்ச்சி, உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவிலுள்ள Angel நீர்வீழ்ச்சியாகும். Auyantepui அல்லது சாத்தானின் மலையிலிருந்து Angel நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்நீர்வீழ்ச்சி குறித்து உலகு அறிவதற்கு முன்னர், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடுகாண் பயணி Ernesto de Santa Cruz என்பவர், இதனை முதலில் பார்த்தார். பின்னர், Jimmy Angel என்ற அமெரிக்கர், 1933ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இம்மலைக்கு மேலே விமானத்தில் பறந்து தங்கப்படுகைகளைத் தேடியலைந்தார். ஆனால் அவர் தங்கத்துக்குப் பதிலாக இந்நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தார். பின்னர் 1936ம் ஆண்டில் மீண்டும் அவ்விடத்துக்கு வந்து தனது விமானத்தை நிறுத்தினார் Angel. அதனால் இந்நீர்வீழ்ச்சி அந்த அமெரிக்கர் பெயரால் Angel நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. எனினும், Pemon பூர்வீக இன  இந்தியர்கள் இதனை "Auyan-tepui" அல்லது "சாத்தானின் மலை" என்றே அழைக்கின்றனர். இந்நீர்வீழ்ச்சி எந்தத் தடங்கலும் இன்றி, ஏறக்குறைய 807 மீட்டர்(2,647அடி) உயரத்திலிருந்து விழுகிறது. இந்த Angel நீர்வீழ்ச்சி, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படலாம் என்பது பலரது கணிப்பு. Angel நீர்வீழ்ச்சி, வெனெசுவேலா நாட்டின் Canaima தேசிய பூங்காவில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி Carrao ஆற்றில் விழுகிறது. இந்த ஆற்றுத் தண்ணீரின் அளவு ஒவ்வொரு காலத்துக்கு ஏற்றால்போல் மாறுகின்றது. இங்குள்ள காடுகள் வழியாகவோ அல்லது படகிலோ சென்றால் அபூர்வ இன விலங்குகளையும் தாவரங்களையும் காணலாம். Angel நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் விழும் வேகத்தைப் பொருத்து இது விழுகின்ற ஆற்றில் நீந்தலாம்.

ஆதாரம் : விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...