Wednesday 17 July 2013

நெப்டியூன் கிரகத்துக்கு மேலும் துணைக்கோள்:ஹப்பிள் மூலம் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!

நெப்டியூன் கிரகத்துக்கு மேலும் துணைக்கோள்:ஹப்பிள் மூலம் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!

சூரிய குடும்பத்தின் 8 வது கிரகம் நெப்டியூன். சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும் இது, நான்காவது மிகப்பெரிய கோளாகும். இந்த கிரகத்துக்கு மேலும் ஒரு சிறிய துணைக்கோள் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெப்டியூன் 13 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 14வது கோள் இவற்றில் மிகச் சிறியதாகும். இதற்கு எஸ்/2004 என 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் சுமார் 20 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர், நெப்டியூன் ஆராய்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த புதிய கோளை கண்டுபிடித்தார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...