Monday 8 July 2013

இதுவரை தெரிந்திராத பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!

இதுவரை தெரிந்திராத பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!

வருடம் முழுவதும் கிடைக்க கூடிய ஏழைகளின் ஆப்பிள் பழம், இந்த பப்பாளிப் பழம். விலை மலிவுதான் ஆனால் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம்! பப்பாளிப்பழத்தில் உள்ள சத்துக்கள் நேரடியாக ரத்தத்தில் கலப்பதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவேதான் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பழம் பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவத் துறையில் மிகவும் சவாலான ஒரு நோய் என்றால் அது கேன்சர். இதற்கு பப்பாளி இலை சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் பப்பாளிப் பழத்தில் உள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை கேன்சரை கட்டுப்படுத்த வல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தைக் கொடுத்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருப்பதோடு, பல், எலும்பு போன்றவை உறுதி பெறவும் உதவும் என்பதும் மருத்துவ அறிக்கைத் தகவல்.
குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அதோடு அடிக்கடி பப்பாளிப் பழம் சாப்பிட்டு வருபவர்களை எந்தவித நோயும் அண்டாது என்றும் கூறுகிறார்கள். பப்பாளிப்பழத்தில் இயற்கையாகவே, விஷக் கிருமிகளைக் கொல்லும் ஒருவித சத்து இருப்பதால், பப்பாளிப்பழம் சாப்பிடுபவர்கள் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. வறண்ட சருமத்தைப் போக்கவும் அன்றாடம் புதிதாக ஜொலிக்கும் சருமத்தைப் பெறவும், தினமும் பப்பாளி சாப்பிட்டு வரலாம். உடனடி முக பிளீச் வேண்டும் என்றால் பப்பாளி பழத்தை மசித்து, முகத்தில் தடவி அரை மணி கழித்து கழுவினால் முகம் பளிச் என்று பிளீச் செய்தது போல மின்னும்.
பல் தொடர்பான குறைபாடுகளுக்கும் சிறுநீர் பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி கை கொடுக்கும். பப்பாளியில் பப்பாயின் என்கிற என்சைமில் உள்ள ஆர்ஜினைன் எனும் ஒருசத்து, ஆண்மைத் தன்மையை பலப்பட செய்கிறதாம். ரத்த விருத்திக்கும் ஞாபக சக்திக்கும் பப்பாளிப் பழத்தை அன்றாடம் உண்ணுங்கள். -

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...