சீன நிறுவனம் ஒன்று 100-மெகாபிக்சல் கொண்ட கேமராவை உருவாக்கி சாதனை!
இந்த கேமரா 10,240×10,240 (10,240 x 10,240 pixels) பிக்சல்கள் (pixels-படப்புள்ளி) அளவிலான புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டது.இது மிகவும் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. -20 டிகிரி செண்டிக்ரேட் முதல் +55 டிகிரி செண்டிக்ரேட் வரை எந்த வித வெப்பநிலையிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த கேமரா, உயர் தெளிவுத்திறன் உள்ள படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாலும், உயர் உணர்திறன் (high sensitivity) மற்றும் உயர் டைனமிக் (high dynamic range (HDR)) அம்சங்கள் கொண்டுள்ளதாலும், வான்வழி மேப்பிங், நகர திட்டமிடல், பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் துறைகளில், பிரயோகிக்கவல்லது.2001-2005-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராஒன்றையும் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment