அமேசான் மழைக்காடுகள்
தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மழைக்காடுகள், 55 இலட்சம் சதுர கிலோ மீட்டர் (140 கோடி ஏக்கர்) பரப்பளவைக் கொண்டவை. உலகிலுள்ள மிகப்பெரிய பருவமழைக்காடுகளாகிய இவை குறைந்தது 5 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள் பழமையுடையன. இவை, உலகிலிருக்கும் மொத்த பருவமழைக்காடுகளில் பாதிக்கும் மேற்பட்ட அளவை உடையன
அமேசான்
பகுதியில் 11 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்குமுன்னர் மனிதர் குடியேறத்
தொடங்கினர். அக்காடுகளையொட்டிய பகுதிகளில் கி.பி. 1250ம் ஆண்டிலிருந்து
மனிதர் குடியேறத் தொடங்கியதால் அக்காடுகளின் அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
இம்மழைக்காடுகளில் 60 விழுக்காட்டுப் பகுதி பிரேசிலில் உள்ளது. பெரு, வெனெசுவேலா, ஈக்குவதோர், கொலம்பியா, கயானா, பொலிவியா, சுரினாம், ப்ரெஞ்ச் கயானா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலும் இம்மழைக்காடுகள் பரவியுள்ளன.
உலகில் அறியப்பட்ட உயிரினங்களில் 10 விழுக்காடும், உலகின் பறவையினங்களில் 20 விழுக்காடும், ஏறக்குறைய 25 இலட்சம் வகையான புழுபூச்சி இனங்களும், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தாவர வகைகளும், 2,200 வகையான மீன்களும், 1,294 பறவையினங்களும், 427 வகை பாலூட்டிகளும், 428 வகை நீர்நிலம் வாழ் உயிரினங்களும், 378 வகை ஊர்வனமும், 1,100 வகை மரங்களும் இம்மழைக்காடுகளில் உள்ளன.
உலகிலுள்ள பறவையினங்களிலும், நதிகளிலும் நீரூற்றுக்களிலும் வாழும் மீன்னங்களிலும் ஐந்தில் ஒன்றும் இம்மழைக்காடுகளில் வாழ்கின்றன. பிரேசிலில் மட்டும் 96,660 முதல் 128,843 வரையிலான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் உள்ளன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
புள்ளிப்புலி(cougar), பூனையினத்தைச்சேர்ந்த மாமிசம் உண்ணும் விலங்கு வகை(jaguar), பெரிய விலங்குகளையும் வளைத்துக் கொல்லும் மலைப்பாம்பு வகை(anaconda) போன்ற ஆபத்தான உயிரினங்களும் இம்மழைக்காடுகளில் உள்ளன.
2005
மற்றும் 2010ம் ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் கடும் வறட்சியை
எதிர்நோக்கின. இதில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில்
தாவரங்கள் அழிந்தன.
2010ம் ஆண்டில் உலக அளவில் வெப்பநிலை 3 டிகிரி உயர்ந்துள்ளதால், இது அமேசான் மழைக்காடுகளில் 75 விழுக்காட்டுப் பகுதியை அழிக்கக்கூடும் என அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.
No comments:
Post a Comment