Monday, 22 July 2013

டைனசோர்கள் (Dinosaur)

டைனசோர்கள் (Dinosaur)

டைனசோர்கள் (Dinosaur) என்பது ஏறத்தாழ 23 கோடியே 70 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் முதலில் நிலத்தில் வெளிப்பட்டு, 13 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள்வரை முழுஆற்றலுடன் வாழ்ந்துவந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். டைனசோர்கள் ஏறக்குறைய 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கும்முன் ஒரு பேரழிவு காரணமாக முற்றிலுமாய் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. டைனசோர்களில் ஏறக்குறைய 3,400 வகை இனங்கள் இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறினாலும், 2008ம் ஆண்டில் வெளியான ஆய்வில், 1047 வகை இனங்கள் பெயரோடு வெளியிடப்பட்டன. இவற்றில் பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன. டைனசோர்களில் சில இனங்கள் மரஞ்செடி கொடிகளையும், இன்னும் சில, மாமிசத்தையும் உண்பவைகளாக இருந்தன. டைனசோர்களில் சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், இன்னும் சில இருகால்களிலும் அல்லது நான்கு கால்களிலும் நடப்பனவாயும் இருந்தன. வரலாற்றுக்கு முந்தைய டைனசோர்களில் பல, பெரிய உடம்பைக் கொண்டதாய், 58 மீட்டர் நீளத்தையும், 9.25 மீட்டர் உயரத்தையும் கொண்டிருந்தன. பெரும்பாலான டைனசோர்களின் சராசரி எடை 500 கிலோ கிராம் எனக் கணக்கிட்டுள்ளனர். தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆய்வாளர்கள், 2,500 கிலோ எடை கொண்ட இந்த இராட்சத டைனோசோரின் புதிய இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனசோர், ஐந்து மீட்டர் நீளம்வரை வளரக் கூடியதாகவும், மிகப்பெரிய மூக்கையும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பையும் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என Utah பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலங்கினத்துக்கு Nasutoceratops titusi என்று பெயரிடப்படுள்ளது.

ஆதாரம் : விக்கிப்பீடியா / பிற ஊடகங்கள்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...