கூகுளை கலக்கப்போகும் இந்திய சிறுமி!
சண்டிகரை சேர்ந்த சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனம் நடத்தும் கூகுள் அறிவியல் கண்காட்சியில், ரசாயன பொருட்கள் கலந்த நீரை சுற்றுசூழலுக்கு பாதிப்பின்றி சுத்தப்படுத்தும் முறையை கண்டறிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மொஹாலியில் உள்ள மில்லேனியம் பள்ளியில் பயின்றுவரும் 15 வயதான ஸ்ருஷ்டி அஸ்தானா, ஆண்டுத்தோறும் நடத்தப்படும் கூகுள் அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட 15 இறுதி சுற்று போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கல்வி சுற்றுலாவின்போது, தனக்கு டிடர்ஜன்ட் கலந்த நீரை சுற்றுசூழலுக்கு பாதிப்பின்றி சுத்தபடுத்தும் முறையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதாக தெரிவித்த ஸ்ருஷ்டியின் இந்த கண்டுப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தேர்வு செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment