An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Wednesday, 31 July 2013
ROBERT JOHN KENNEDY: The three deadliest words in the world: it's a gir...
ROBERT JOHN KENNEDY: The three deadliest words in the world: it's a gir...: The three deadliest words in the world: it's a girl Harrowing new film explores violence against women - "the greatest human ...
The three deadliest words in the world: it's a girl
The three deadliest words in the world: it's a girl
Harrowing new film explores violence against women - "the greatest human rights issue of our time".
MercatorNet: This is a very harrowing film. How did you come to make it?
Evan Grae Davis: I have spent the last nearly two decades travelling the world capturing stories of human need for humanitarian aid and development NGO's and non-profits. Throughout this time I witnessed a lot of injustice. I began asking the question, what are the cultural roots and mindsets that allow for human rights violations on the scale seen throughout the world today? I set out to explore this question through a documentary film. I and the team travelled to nine nations capturing stories for this film. One of the nations we visited was India, hoping to understand how the subjugation and devaluation of women could be justified by the deeply established son-preference culture.
What we discovered while filming in India about the epidemic of missing girls and dramatically skewed sex ratios and related abuse and neglect of girls was a game-changer for us. After hearing the UN statistic of as many as 200 million girls missing in the world today as a result of 'gendercide' we researched the issue in China, as well, and were completely astonished by how few people seemed to be aware of what appeared to be the greatest human rights issue of our time, and certainly the greatest form of violence against women in the world today.
Source: Mercator.net
ROBERT JOHN KENNEDY: Salesians launch course on child rights
ROBERT JOHN KENNEDY: Salesians launch course on child rights: Salesians launch course on child rights The course aims to enhance the capacity of individuals. ...
Salesians launch course on child rights
Salesians launch course on child rights
The course aims to enhance the capacity of individuals.
“The course focuses upon child rights, as outlined in the UN Convention,” said Fr. Stephen Mavely, university vice-chancellor.
“In the context of development using innovative research, education and capacity building, the course seeks to draw on the strengths of children, their families, communities and culture," he said.
The program, organized in collaboration with and conducted at the Snehalaya Centre for Child Rights and Research Guwahati, is seventh post graduate course program at the Assam Don Bosco University (ADBU).
The priest said that the course aims to enhance the capacity of individuals, organizations and governments to effectively use the existing legal provisions, insights from developmental psychology and the findings of contemporary research to transform systems and create peace and dignity for children and the world - moving child rights from rhetoric to reality.
Explaining the course methodology, Fr. Mavely adds, "assignments, presentations, field work and workshops and debates are key components of the program."
Fr. Lukose Cheruvalel, director of Snehalaya Centre for Child Rights said the practical involvement of the students builds upon a strong foundation given through theoretical inputs.
He further states that in this program, students are exposed to the ground realities to give them a better understanding of the issues concerning them.
Snehalaya (House of Love) is a social service project for the care and rehabilitation of children in distress in Guwahati, run by the Don Bosco Society since 2000.
The Don Bosco Society, spread across 130 countries, has been rendering committed service in the field of education and children's rights for over a century.
Though the society has 15 universities worldwide, ADBU is its first University in India.
ROBERT JOHN KENNEDY: உடல் உறுப்பு தானம்
ROBERT JOHN KENNEDY: உடல் உறுப்பு தானம்: உடல் உறுப்பு தானம் பொதுவாக நமக்குத் தெரிந்தது இரத்ததானம் மற்றும் கண்தானம். இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன...
உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்
பொதுவாக நமக்குத் தெரிந்தது இரத்ததானம் மற்றும் கண்தானம். இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன.
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும்போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள்: ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, இரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் :இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
உயிருடன் இருக்கும்பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள
பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. இரத்ததானம் செய்பவர்களிடமிருந்து
100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில்
எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி
விடும்.
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), இரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் என, ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.
சிறுநீரகத்தை 72 மணி நேரம் வரையும், கல்லீரலை 18 மணி நேரம் வரையும், இதயம் மற்றும் நுரையீரலை 5 மணி நேரம் வரையும், கணையத்தை 20 மணி நேரம் வரையும், கண் விழித்திரையை (கார்னியா) 10 நாட்கள் வரையும், தோல், எலும்பு மற்றும் இதயத்தின் வால்வுகளை 5 வருடமும், அதற்கு மேலும் பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இதுவே சிறந்த வழி.
ஆதாரம் : சித்தார்கோட்டை
ROBERT JOHN KENNEDY: ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank)
ROBERT JOHN KENNEDY: ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank): ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank) சமுதாய நீதி , வறியோர் மீது அன்பு , இயற்கை மீது அக்கறை என்ற கருத்துக்களைத் தன் உரையில் அடிக்கடி வ...
ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank)
ரொட்டி பீரங்கி வண்டி (The Bread Tank)
சமுதாய நீதி, வறியோர் மீது அன்பு, இயற்கை மீது அக்கறை என்ற கருத்துக்களைத் தன் உரையில் அடிக்கடி வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கவனத்தை ஈர்க்க, ரியோ தெ ஜனெய்ரோ நகரில் பல குழுக்கள் முயன்றன. அவற்றில் ஒன்று, World Future Council - அதாவது, 'உலக எதிர்கால அவை'. இவ்வமைப்பு உருவாக்கியிருந்த The Bread Tank - ரொட்டி பீரங்கி வண்டி ஒரு புதுவகை போராட்ட முயற்சி.
போர்க்களங்களில் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியைப் போன்ற ஒரு வாகனம், முழுவதும் ரொட்டியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ரொட்டிகளை மக்கள் உண்ணும்போது, அந்த
ரோட்டிகளுக்கு அடியில் உருவாக்கப்பட்டிருந்த அழகியத் தோட்டம் ஒன்று
வெளியானது. இவ்வகையில் இந்த ரொட்டி பீரங்கி வண்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
உலகில் இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் பரிதவிக்கும்போது, ஒவ்வோர் ஆண்டும் 1.74 டிரில்லியன் டாலர்கள், அதாவது, 1740 கோடி டாலர்கள் இராணுவத்திற்காகச் செலவிடப்படுவது எவ்வகையிலும் நியாயம் அல்ல என்பதை வலியுறுத்த 'ரொட்டி பீரங்கி வண்டி' முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2012ம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற Rio+20 உலக உச்சி மாநாட்டையொட்டி 'ரொட்டி பீரங்கி வண்டி' முதல் முதலாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திருத்தந்தை ரியோ நகருக்குச் சென்றபோது, இந்த முயற்சி மீண்டும் ஒரு முறை மேற்கொள்ளப்பட்டது.
2013ம்
ஆண்டிலிருந்து உலக அரசுகளின் இராணுவச் செலவு 10 விழுக்காடாகிலும்
குறைக்கப்படவேண்டும் என்பது இவ்வமைப்பினரின் போராட்டக் கோரிக்கை. நொபெல்
பரிசுபெற்ற பலரின் ஆதரவுடன் 'உலக எதிர்கால அவை' அமைப்பினரின் போராட்டம் தொடர்கிறது.
Catholic News in Tamil 31/07/13
1. புனித பிரான்சிஸ் சேவியரும், அருள்பணியாளர் அருப்பேயும் இயேசுசபையினருக்கு அழகான அடையாளங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. 47வது உலக அமைதி தினம் : சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது
4. இங்கிலாந்து பேராயர் : திருத்தந்தை மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றது தன்னை அதிகம் கவர்ந்தது
5. பேராயர் Lahham : புலம்பெயர்ந்தோர் முகாமில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல
6. Los Angeles பேராயர் : நாம் கத்தோலிக்கத் திருஅவையாக இருப்பதால், குடியேற்றதாரர் குறித்த விவாதத்தில் ஆர்வமாய் இருக்கிறோம்
7. 27வது அனைத்துலக அமைதிக் கருத்தரங்கு : நம்பிக்கையின் துணிச்சல்
8. அனைத்துலக நட்பு தினம் : நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் தினம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனித பிரான்சிஸ் சேவியரும், அருள்பணியாளர் அருப்பேயும் இயேசுசபையினருக்கு அழகான அடையாளங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூலை,31,2013. இயேசு சபையினர் எவரும், கிறிஸ்துவுக்குப் பதிலாக தன்னை மையப்படுத்துவது தவறு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூலை 31, இப்புதனன்று, இயேசு சபையைத் தோற்றுவித்த புனித லொயோலா இஞ்ஞாசியார் அவர்களின் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, உரோம்
நகரில் உள்ள இயேசு ஆலயத்தில் காலை 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் ஆற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.
கிறிஸ்துவை மையமாக்குதல், பணியாற்றுவதற்கென கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படுதல், குறைகளை உணர்ந்து, கிறிஸ்துவுக்கு முன்பும், மற்றவர்களுக்கு முன்பும் பணிவுடன் வாழ்தல் என்ற மூன்று கருத்துக்களை, தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
கிறிஸ்துவும், திருஅவையும் இணைபிரியாத ஒரே நெருப்பு என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருஅவை வழியாக கிறிஸ்துவுக்குப் பணி செய்வதே ஒவ்வொரு இயேசு சபையினரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
புனித பவுல், புனித இஞ்ஞாசியார் என்ற இருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக்கூறி, இயேசு சபையினரும் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
நான் கிறிஸ்துவுக்கு என்ன செய்திருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்ன செய்ய வேண்டும்? என்று புனித இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் எழுப்பிய முக்கியக் கேள்விகளை, கூடியிருந்த இயேசு சபையினருக்கு மீண்டும் நினைவுறுத்தினார் திருத்தந்தை.
வாழ்வின் இறுதிகாலத்தில் ஒவ்வொரு இயேசு சபையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டிய அழகான அடையாளங்கள், புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களும், அருள் பணியாளர் அருப்பே அவர்களும் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விருவர் வாழ்வின் இறுதியிலும் அவர்கள் கிறிஸ்துவுக்குத் தங்களையே முற்றிலும் அர்ப்பணமாக்கியதைச் சுட்டிக்காட்டினார்.
200க்கும் அதிகமான இயேசு சபையினரும், 500க்கும் அதிகமான ஏனைய துறவியரும், போதுநிலையினரும் கலந்துகொண்ட இத்திருப்பலியின் துவக்கத்தில், இயேசு சபையின் உலகத் தலைவர் அருள் பணியாளர் Adolfo Nicolas அவர்கள், திருத்தந்தையை, ‘நம் சகோதரர் பிரான்சிஸ்’ என்று அழைத்து, தன் வரவேற்பை வழங்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனதால் மட்டுமல்ல, தன் எண்ணங்களிலும், செயல்பாட்டிலும்
ஒரு இயேசு சபையினராய் இருப்பதை அவர் பிரேசில் நாட்டிலிருந்து திரும்பிய
பயணத்தில் குறிப்பிட்டார் என்பதை அருள் பணியாளர் Nicolas தன் வரவேற்புரையில் எடுத்துரைத்தார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
2. 47வது உலக அமைதி தினம் : சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை
ஜூலை,31,2013.
2014ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கத்தோலிக்க உலகில் சிறப்பிக்கப்படும்
47வது உலக அமைதி தினத்துக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தெரிவு
செய்யப்பட்டுள்ள தலைப்பு இப்புதனன்று வெளியிடப்பட்டது.
"சகோதரத்துவம், அமைதிக்கான அடித்தளம் மற்றும் பாதை" என்பது, 47வது உலக அமைதி தினத்துக்கான தலைப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலக அமைதி தினம், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தனது பாப்பிறைப் பணியில் முதன்முறையாகச்
சிறப்பிக்கவிருக்கும் உலக கத்தோலிக்க அமைதி தினமாக இருக்கும்.
1968ம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக கத்தோலிக்க அமைதி தினம், ஆண்டுதோறும் சனவரி முதல் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது
ஜூலை,31,2013. "என் அன்பு நண்பர்களே, உயர்வான இலட்சியங்களுக்காக, அனைத்தையும் பணயம் வைப்பது சிறந்தது. கிறிஸ்துவின் மீதும், அவரது நற்செய்தியின் மீதும் நமது வாழ்வைப் பணயம் வைப்பது தகுதியானது" என்ற Twitter செய்தியை இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், ஜூலை 26, கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரியோ தெ ஜனெய்ரோ நகர் வீதிகளில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரியோ நகரின் சாலைகளில் தன் திறந்த காரில் பயணித்தபோது, கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவலர்களை மீறி, Nathan de Brito என்ற 10 வயது சிறுவன் திருத்தந்தையிடம் ஓடிச்சென்று அவரை அணைத்தார்.
ஒரு சில நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வில், சிறுவன் Nathan திருத்தந்தையிடம் தான் கிறிஸ்துவுக்காக ஒரு குருவாக விழைவதாகத் தெரிவித்ததாகவும், திருத்தந்தை அவர்கள், கண் கலங்கியபடி, இன்று முதல் உன் அழைப்பு உறுதியாகிவிட்டது என்று சொன்னதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA
4. இங்கிலாந்து பேராயர் : திருத்தந்தை மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றது தன்னை அதிகம் கவர்ந்தது
ஜூலை,31,2013. திருத்தந்தையிடம் விளங்கிய சக்தியும், அவர் மக்களை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் முயன்றதும் தன்னை அதிகம் கவர்ந்தன என்று இங்கிலாந்து பேராயர் ஒருவர் கூறினார்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ரியோ தெ ஜனெய்ரோ நகருக்குச் சென்றிருந்த Birmingham பேராயர் Bernard Longley அவர்கள், தன் அனுபவங்களை CNA கத்தோலிக்கச் செய்தியிடம் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
கரங்களை நீட்டி அனைவரையும் அரவணைக்கும் உலக மீட்பரின் திரு உருவத்திற்குக் கீழ் நடைபெற்ற இந்த இளையோர் விழாவில், மற்றொரு மேய்ப்பரும் மக்களை அரவணைக்க எப்போதும் காத்திருந்தார் என்ற உணர்வை திருத்தந்தை இளையோரிடையே உருவாக்கினார் என்று பேராயர் Longley அவர்கள் கூறினார்.
புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் உறுப்பினரான பேராயர் Longley அவர்கள், திருத்தந்தையின் நேரடியான, தெளிவான, எளிய கருத்துக்களைக் கேட்க இளையோர் ஆவலாக இருந்ததைப் போலவே, ஆயர்கள் பலர் வழங்கிய மறைகல்வி அமர்வுகளிலும் இளையோர் ஆர்வம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்று கூறினார்.
ஆதாரம் : CNA
5. பேராயர் Lahham : புலம்பெயர்ந்தோர் முகாமில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல
ஜூலை,31,2013. புலம் பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை அளிக்கும் தருணத்தில், அவர்களுக்கு விவிலியத்தையும் கொடுத்து, கிறிஸ்துவ மறையை பரப்ப முயல்வது சரியான வழிமுறை அல்ல என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை பேராயர் Maroun Lahham கூறினார்.
Jordan நாட்டின் Zaatari எனுமிடத்தில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில், ஒரு சில கிறிஸ்தவக் குழுக்கள், விவிலியத்தையும், வேறு சில துண்டு பிரசுரங்களையும் மக்களிடம் அளித்தது ஓலி-ஒளி காட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளைக் குறித்து, Jordan நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகியான பேராயர் Lahham அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கிறிஸ்துவை இவ்வழியில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தருணத்தில், அதுவே கிறிஸ்துவ அன்புக்கு சாட்சியாக விளங்கும் வலிமை பெற்றது என்றும், அத்தருணத்தை மறைபரப்பு வாய்ப்பாக பயன்படுத்துவது சரியான சாட்சியமாக இருக்காது என்றும் பேராயர் Lahham எடுத்துரைத்தார்.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், அதாவது, 2012ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, 2,000 கூடாரங்களில் 10,000க்கும் அதிகமான மக்களுடன் துவங்கிய Zaatari முகாமில், தற்போது, 1,20,000 புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides
6. Los Angeles பேராயர் : நாம் கத்தோலிக்கத் திருஅவையாக இருப்பதால், குடியேற்றதாரர் குறித்த விவாதத்தில் ஆர்வமாய் இருக்கிறோம்
ஜூலை,31,2013.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த விவாதம்
தலத்திருஅவையின் எதிர்காலம் மற்றும் கத்தோலிக்கர் குறித்ததாய் உள்ளது என, அந்நாட்டின் Los Angeles பேராயர் Jose H. Gómez கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றதாரர் விவகாரம் குறித்து Fides செய்தி நிறுவனத்துடன் செய்திகளைப் பகிந்துகொண்டுள்ள பேராயர் Gómez, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்கர்கள் இவ்விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அமெரிக்க அரசியல்வாதிகளால் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர் என்றும், திருஅவை, தனது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையல்ல, ஆனால் எத்தனை சிறார் திருமுழுக்குப் பெற்றுள்ளார்கள் என்பதையே கவனத்தில் கொள்கின்றது என்றும் கூறினார் பேராயர் Gómez.
Los Angeles உயர்மறைமாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 84,000 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கின்றது, இவர்களில் பெரும்பாலானோர் இலத்தீன் அமெரிக்காவையும் பிற சிறுபான்மை இனங்களையும் சேர்ந்தவர்கள் என்றும் பேராயர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவையின் வரவுசெலவு அலுவலகம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த சீர்திருத்த மசோதா அங்கீகரிக்கப்பட்டால், அந்நாட்டில் சரியான ஆவணங்கள் இன்றி வாழ்கின்றவர்களில், நான்கு பேருக்கு ஒருவர் வீதம் தங்களது நிலைகளைச் சரிசெய்ய முடியாத நிலைக்கு உட்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஆதாரம் : Fides
7. 27வது அனைத்துலக அமைதிக் கருத்தரங்கு : நம்பிக்கையின் துணிச்சல்
ஜூலை,31,2013. “நம்பிக்கையின் துணிச்சல் : உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்” என்ற தலைப்பில், உலகில் அமைதியை ஊக்குவிக்கும் 27வது அனைத்துலக கருத்தரங்கு உரோம் ஜான் எஜிதியோ பிறரன்பு அமைப்பினால் நடத்தப்படவுள்ளது.
வருகிற செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகள், ஐரோப்பிய
அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் பிரதிநிதிகள் என அறுபதுக்கும்
மேற்பட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இடம்பெறும் நெருக்கடிகள், ஆப்ரிக்காவில் ஒப்புரவு, ஆசியாவில் மதங்களின் பங்கு, இலத்தீன் அமெரிக்காவின் எதிர்காலம், குடியேற்றம், மத நம்பிக்கையற்றவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளருக்கிடையே உரையாடல், துன்பத்தில் வாழ்வின் மதிப்பு, நீண்ட ஆயுள்காலம் ஓர் ஆசீர்வாதம், இன்றைய மறைசாட்சிய வாழ்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை என, பல தலைப்புகளில் இக்கருத்தரங்கு நடைபெறும்.
உரோமையில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் இடம்பெறும் உரைகள், கருத்துப் பகிர்வுகள், பொதுவான விவாதங்கள் போன்றவை, உரோம் நகரை அமைதி மற்றும் ஒன்றிணைந்த வாழ்வின் அடையாளத் தலைநகராகக் காட்டும் என அந்தேரயா ரிக்கார்தி என்பவர் கூறியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. அனைத்துலக நட்பு தினம் : நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் தினம்
ஜூலை,31,2013. உலகளாவிய சமுதாயம், நட்பின் ஆற்றலைப் பயன்படுத்தி, பொதுவான உறவை வலுப்படுத்தவும், அமைதி மற்றும் உறுதியான வளர்ச்சிக்கான முயற்சிகளைத் தூண்டவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
ஜூலை 30, இச்செவ்வாயன்று அனைத்துலக நட்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இன்றைய
உலகில் பல பதட்டநிலைகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமாக இருக்கும்
புரிந்துகொள்ளாமை மற்றும் நம்பிக்கையின்மையை எதிர்த்துச் செயல்படுவதற்கு
இந்த நட்பு தினம் முக்கியமான வாய்ப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான அமைதியை ஊக்குவித்து, உறுதியான
முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு மனித ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்பதை இந்த
நட்பு தினம் நினைவுபடுத்துகின்றது என்றும் கூறியுள்ள பான் கி மூன்,
போர்கள் மனிதர்களின் மனங்களில் தொடங்குவதால் அமைதியைப் பாதுகாப்பதும்
மனிதர்களின் மனங்களில் உருவாக வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக நட்பு தினம், 2011ம் ஆண்டு மே மாதத்தில் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
Catholic News in Tamil 30/07/13
1. திருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு
3. பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்
4. 28வது உலக இளையோர் தினம் கொரியத் திருஅவைக்கு ஏராளமான வரங்களை வழங்கியுள்ளது, Daejeon ஆயர்
5. இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள்
6. அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம்
7. ஜிம்பாபுவே நாட்டுக்காகச் செபிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள்
8. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்
ஜூலை,30,2013.
பிலிப்பீன்ஸ் மற்றும் இலங்கையிலிருந்து அழைப்பிதழ்கள் வந்திருப்பதால்
அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று
இத்திங்களன்று விமானப் பயணத்தில் பன்னாட்டு நிருபர்களிடம் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ரியோ
தெ ஜனெய்ரோவிலிருந்து உரோமைக்குத் திரும்பிய நீண்ட விமானப் பயணத்தில்
தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு நிருபர்களின் கேள்விகளுக்கு ஒரு மணி, இருபது நிமிட நேரம் பதிலளித்துக் கொண்டுவந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது அடுத்த வெளிநாட்டுத் திருப்பயணங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, 2014ம் ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து சிந்திக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகியோரின் புனிதர்பட்ட விழா, வத்திக்கான் வங்கி, திருப்பீடத் தலைமையகத்தின் சீரமைப்பு, வத்திக்கானில் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த விவகாரம், திருமணம், திருமணமுறிவு, மற்றும்
மறுதிருமணம் செய்துள்ளவர்களுக்கு மேய்ப்புப்பணி... இப்படி வத்திக்கான்
சார்ந்த பல சூடான விவகாரங்கள் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மிக
எளிமையாகத் திறந்த மனத்துடன் பதிலளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பிரேசில் திருப்பயணத்துக்குப் பின்னர் தான் உடலளவில் களைப்பாக இருந்தாலும், ஆன்மீகரீதியில் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், முப்பது இலட்சம் இளையோருடன் தனக்கு மிக நல்ல அனுபவங்கள் கிடைத்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு
ஜூலை,30,2013. இளையோர் நண்பர்களே, உலக
இளையோர் தினத்தில் ஒன்றிணைந்து நாம் அறிக்கையிட்டதை இப்போது தினம்தோறும்
தொடர்ந்து வாழ வேண்டும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், “ரியோவில் விவரிக்க முடியாத சிறந்த அனுபவம் பெற்றேன். ஒவ்வொருவருக்கும் நன்றி, எனக்காகச் செபியுங்கள்” என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில்
நாட்டுக்கான தனது ஒரு வாரத் திருப்பயணத்தை நிறைவுசெய்து இத்திங்கள்
நண்பகல் வேளையில் வத்திக்கான் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தினமும் ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டரில் எழுதி வருகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயணம் அவரின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைந்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்
ஜூலை,30,2013.
தென் இத்தாலியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானவர்கள்
மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பேருந்து
விபத்தில் இறந்தவர்கள் இறைவனின் நிறைசாந்தியை அடையத் தான் செபிப்பதாக
அச்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த அனுதாபச் செய்தியை நேப்பிள்ல்ஸ் பேராயர் கர்தினால் Cresenzio Sepe அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.
நேப்பிள்ல்ஸ்
நகருக்கும் கனோசா நகருக்கும் இடையே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த
சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில்
அதில் பயணம் செய்த ஏறக்குறைய 50 பேரில் 38 பேர் இறந்துள்ளனர் மற்றும்
குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் இறந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக Pozzuoliவில், இச்செவ்வாயன்று அடக்கச் சடங்கு நடத்தப்பட்டது. Pozzuoli ஆயர் Gennaro Pascarella நிகழ்த்திய இவ்வடக்கச் சடங்கு திருப்பலியில் இத்தாலிய பிரதமர் Enrico Letta உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 28வது உலக இளையோர் தினம் கொரியத் திருஅவைக்கு ஏராளமான வரங்களை வழங்கியுள்ளது, Daejeon ஆயர்
ஜூலை,30,2013. தென் கொரியாவிலிருந்து ரியோ தெ ஜனெய்ரோ சென்ற அருள்பணியாளர்கள், இளையோர் என ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் 28வது உலக இளையோர் தினம் சிறப்பான அருள் வழங்குவதாக இருந்தது என Daejeon ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புன்சிரிப்பு, நட்புணர்வு, இன்னும் குறிப்பாக அவரது அன்பின் செய்தி இந்த இளையோர் தினத்தை மேலும் அழகானதாக அமைத்தன என்றுரைத்த ஆயர் You, இவ்வுலக தினம் கத்தோலிக்கத் திருஅவைக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமிக்கக் கொண்டாட்டமாக இருந்தது என்று கூறினார்.
ரியோவில் இடம்பெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகள் குறித்த தனது அனுபவங்களை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஆயர் You, தான் திருத்தந்தையோடு நேரில் பேசிய அனுபவம் பற்றியும் விளக்கினார்.
கொரியத் திருஅவை உறுதியாக இருக்கின்றது, தொடர்ந்து அதனை உறுதியுடன் நடத்திச் செல்லுங்கள் என்று, தனது இயல்பான புன்சிரிப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் You கூறினார்.
Daejeon ஆயர் You, கொரியாவிலிருந்து 350 இளையோருடன் இவ்வுலக இளையோர் தினத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
5. இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள்
ஜூலை,30,2013. சிரியாவில் கடத்திவைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள்
Astalli, Magis உட்பட இத்தாலியில் இயங்கும் இயேசு சபையின் சமூகப்பணி அமைப்புகள், சிரியாவின் Raqqa நகரிலிருந்து கடத்தப்பட்டுள்ள அருள்பணி Dall'Oglio உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளன.
தமாஸ்கு நகரிலுள்ள திருப்பீடத் தூதரகமும் இவ்வருள்பணியாளர் கடத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளவேளை, இவர் சிரியாவில் இருக்கும்போதெல்லாம் வழக்கமாகத் தன்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் எனவும், ஆனால் கடந்த சில நாள்களாக அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையெனவும் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக சிரியாவில் மறைப்பணியாற்றிவரும் அருள்பணி Paolo Dall'Oglio, அந்நாட்டில் ஒப்புரவுக்கும் அமைதிக்கும் உரையாடலுக்கும் முன் நின்று உழைத்து வருபவர்.
அருள்பணி Dall'Oglio காணாமற்போயுள்ள தகவல் தொடர்பாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இயேசு சபையினரின் Astalli என்ற ஆலோசனை மையம், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு சட்டரீதியாக ஆலோசனை வழங்கி அம்மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றது.
Magis என்ற அச்சபையினரின் அரசு சாரா இயக்கமும் புலம்பெயர்ந்தோர்க்கு உதவி வருகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம்
ஜூலை,30,2013. அரபு ஐக்கிய குடியரசான அபு தாபியில் புதிய கத்தோலிக்க ஆலயம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டி, அப்புதிய ஆலயப் பணிகளை ஆசீர்வதித்துள்ளார் தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Paul Hinder.
அபு தாபியின் Mussafah நகரில் புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள இப்புதிய ஆலயத்துக்கான அடிக்கலை ஆசீர்வதித்த நிகழ்ச்சியில் குருக்கள், அருள்சகோதரிகள் உட்பட உள்ளூர் கத்தோலிக்கர் பலர் கலந்து கொண்டனர்.
அச்சமயம் உரையாற்றிய ஆயர் Hinder, இறைவன் ஒவ்வொரு மனிதரிலும் வாழ்கிறார், அன்பும் விசுவாசமும் இப்புதிய ஆலயத்தில் நம்மை ஒன்றுசேர்த்துள்ளன எனக் கூறினார்.
அபு தாபியில் ஏறக்குறைய 3,500 கத்தோலிக்கக் குடும்பங்களும், 15,000 கத்தோலிக்கரும் வாழ்கின்றனர்.
அபு தாபியின் தென் மேற்கேயுள்ள Mussafah தொழிற்சாலை நகரத்தில் ஆலயம் கட்டுவதற்கென உள்ளூர் அரசு 1.1 ஏக்கர் நிலத்தை 2011ம் ஆண்டில் வழங்கியது.
ஆதாரம் : CNA
7. ஜிம்பாபுவே நாட்டுக்காகச் செபிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள்
ஜூலை,30,2013.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் இப்புதனன்று நடைபெறும் தேர்தல்கள்
வன்முறையின்றி நடப்பதற்கு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு
கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
2008ம்
ஆண்டில் ஜிம்பாபுவே நாட்டை இரத்தக்காடாக்கிய வன்முறையைக் குறிப்பிட்டு
அந்நாட்டில் அனைத்து வனமுறைகளையும் தவிர்த்து நடக்குமாறு அரசியல்
தலைவர்களைக் வலியுறுத்தியுள்ளனர் அக்கிறிஸ்தவத் தலைவர்கள்.
ஜிம்பாபுவே நாட்டுக்கு, ஊழலும் தீமையும் நிறைந்த ஆட்சியாளர்கள் அல்ல, மாறாக, கடவுள் பயமிக்க மற்றும் அமைதியை அன்புகூரும் தலைவர்கள் தேவை என்றும் அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ZCC
என்ற ஜிம்பாபுவேயின் கிறிஸ்தவ சபைகள் அமைப்பின் சார்பில் அந்நாட்டின்
கிறிஸ்தவத் தலைவர்கள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு
கேட்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : ICN
8. மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் நேரடிப் பேச்சுவார்த்தை
ஜூலை,30,2013. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையேயான முதல் நேரடிப் பேச்சுவார்த்தைகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலின் சார்பாக Tzipi Livniயும், பாலஸ்தீனாவின் சார்பாக Erekatம் இதில் கலந்து கொள்கின்றனர்.
இரமதான் நோன்பு காலத்தில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறுவது, பாலஸ்தீனாவுக்கு மிகவும் விசேடமான ஒன்று என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerry கூறினார்.
100க்கும்
அதிகமான பாலஸ்தீனியக் கைதிகளை விடுதலை செய்வதற்கு இஸ்ரேல் அரசு இசைவு
தெரிவித்ததையடுத்து இப்பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தது
பாலஸ்தீனம்.
வரவிருக்கும்
மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை வரைவுத்தொகுப்பு
பற்றி தற்போது பேசப்பட்டதாக அமெரிக்க அரசுச் செயலகம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...