Monday, 1 July 2013

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்!

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்!

Source: Taamil CNN
கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது.
இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது.
அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் செலியாபின்ஸ்கில் இந்த இராட்சத எரிகல் நெருப்புடன் சென்ற காட்சி பல சென்சார்களில் பதிவானது.
அணுகுண்டு சோதனை செய்தபிறகு ஏற்படும் ஒலி அலைகளின் நுணுக்கங்களை துல்லியமாக பிடிக்கும் சென்சார்கள் இந்த இராட்சத எரிகல்லின் அதிர்ச்சி அலைகளின் பாதையையும் விளைவையும் பதிவு செய்துள்ளது.
இந்த இராட்சத எரிகல்லின் தாக்கம் 460 கிலோ டன்கள் டி.என்.டி.க்கு சமம் என்று பிரான்சில் உள்ள அணுசக்தி ஆணையத்தின் அலெகிசிஸ், லீ பைச்சான் என்பவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
1908ஆம் ஆண்டில் சைபீரியாவை நாசம் செய்த மிகப்பெரிய, இராட்சத எரிகல் நிகழ்வுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நிகழ்வு பதிவானது இப்போதுதான்.உண்மையில் அன்று பூமியில் எதுவேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஏன் நிகழவில்லை என்பது பற்றி விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...