Wednesday, 17 July 2013

Nyungwe மழைக்காடு, ருவாண்டா (Nyungwe Forest, Rwanda)

Nyungwe மழைக்காடு, ருவாண்டா  
(Nyungwe Forest, Rwanda)

Nyungwe மழைக்காடுகள், ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டின் தென்மேற்கே, புருண்டி நாட்டின் தெற்கு எல்லையில், Kivu ஏரிக்கும் காங்கோ குடியரசுக்கும் மேற்கே அமைந்துள்ளன. காங்கோ நதிக்கு மேற்கேயும், நைல் நதிக்கு கிழக்கேயும் உள்ள பள்ளத்தாக்கில் இக்காடுகள் அமைந்துள்ளன. 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Nyungwe தேசிய பூங்கா, Nyungwe மழைக்காடுகளின் ஏறக்குறைய 970 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இப்பூங்காவில் அடர்ந்த மூங்கில் மரங்கள், புல்தரைகள், சதுப்புநிலங்கள், Bigugu மலை ஆகியன உள்ளன. இம்மழைக்காடுகளில், 13 வகையான அரியவகை உயிரினங்கள் உட்பட 275 பறவையினங்கள், 1068 தாவர வகைகள், 85 பாலூட்டிகள், 32 வகை நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள், 38 வகை புழுபூச்சிகள் ஆகியன வாழ்கின்றன. ஆப்ரிக்காவிலுள்ள மொத்த அரியவகை உயிரினங்களில் 25 விழுக்காடு இம்மழைக்காடுகளில் இருப்பதோடு, இவை ஆப்ரிக்காவில் விலங்குகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. Nyungwe மழைக்காடுகள், கடல்மட்டத்தைவிட மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இருப்பதால் பழங்குடி இன மக்கள் வாழ்வதற்கு ஏற்புடையதாகவும் இருந்திருக்கின்றன. ஆயினும் இங்கு வாழ்ந்த அங்கோலா colobus இனமக்கள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. NASA விண்வெளி ஆய்வு மையம் 2009ம் ஆண்டில் வெளியிட்ட தகவலின்படி ருவாண்டா நாட்டின் இந்த மழைக்காடுகளில் 99 விழுக்காட்டுப் பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 1994ம் ஆண்டில் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின்போது மக்கள் இம்மழைக்காடுகளில் குடியேறியதால், இதன் ஒரு இலட்சம் ஹெக்டேர் பகுதியில் 600 ஹெக்டேர் பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...