Saturday, 8 August 2020

தகாத காரியங்கள், தடுமாற வைக்கும்

 

இத்தாலிய விமான நிலையத்தில்

நம்முடன் இருப்பவர்களுக்கு நாம் இடறலாக இருக்க வேண்டாமெனில், நம் பாதையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஓர் அருள்பணியாளர், வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப்பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக, விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.
இப்போது அருள்பணியாளரின் முறை வந்தது. அவரிடமும் பணிப்பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப்பெண், "ஐயா, எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
குருவானவர், "அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம். நான் ஓர் அருள்பணியாளர், மதுவெல்லாம் பருகமாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்", என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் பணிப்பெண் ஆடிப்போனார். "ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்...? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே. இத்தனை உயிர்கள் பறிபோகுமே" என்று பதறினார்.
அருள்பணியாளர் சொன்னார், "''சகோதரி, அருள்பணியாளர் வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால், புத்தி தடுமாறி, விபத்து நேரிடும். நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிற பல ஆன்மாக்களுக்கு அது இடறல் உண்டாக்கும். எனவே புத்தி தடுமாறாது இருக்கும்படி, நானும் எப்போதும் விழிப்புடன் இருக்க, இது போன்றச் செயல்களைத் தவிர்த்துவிடுகிறேன்" என்றார் .
பணிப்பெண் பேசாமல் நகர்ந்து போனார்.

 

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...