கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மக்களிடையே நட்புணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இடம்பெறும் கூட்டம், இவ்வாண்டு, கணணிவழித் தொடர்புகள் வழியாக இடம்பெறுவதையொட்டி, திருத்தந்தையின் சார்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மக்கள் நடுவே நட்பு என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இச்சந்திப்பை கணணி வழித்தொடர்புகள் வழியாக நடத்துவோருக்கும், அதில் பங்குபெறுவோருக்கும் திருத்தந்தை தன் நெருக்கத்தையும், செபத்தையும் வெளியிடுவதாக உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில், நாம் ஒவ்வொருவரும், மேலும் மேலும், ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளோம் என அதில் கூறியுள்ளார்.
இன்றையக் கொள்ளைநோயால் துன்புறும் மக்கள் குறித்து நம் மனங்களில் எழுந்துள்ள கருணையுடன் கூடிய அக்கறையும், மருத்துவப்பணியாளர்களின் அர்ப்பணத்துடன் கூடிய சேவையும், நம் வாழ்வின் உடைபடும் நிலையை மட்டுமல்ல, மற்றவர்களுக்காக உழைக்க வேண்டிய உறுதிப்பாட்டையும் தந்துள்ளது என அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.
.இன்றையச் சூழலில், தங்கள் மாணவர்களுக்கு தூரத்தில் இருந்தே கணனி வழியாக ஆசிரியர்கள், அர்ப்பணத்துடன் கற்றுத்தருவது குறித்தும், திருத்தந்தையின் சார்பில், தன் நன்றியை வெளியிட்டுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்
No comments:
Post a Comment