ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
மன்னிப்பதையும், மறப்பதையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள பல கதைகளில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதியவேண்டிய ஒரு கதை இது:
கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றியேப் பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மன்னித்து, மறந்துவிட்டேன். ஆனால், நான் மன்னித்து, மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார்.
காட்சி மாறுகிறது. பக்தனுக்கும், பரமனுக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடலில், "என் குற்றங்களை மன்னித்து, மறந்துவிடு, இறைவா!" என்று பக்தன் வேண்டுகிறார். "எந்தக் குற்றங்கள்? எனக்கு எதுவுமே நினைவில் இல்லையே!" என்று பதில் சொல்கிறார் பரமன்.
நம் குற்றங்களை மன்னிப்பதோடு, அவற்றை மறந்துவிடும் இறைவனின் இயல்பில், ஒரு துளி அளவாகிலும் நம் இயல்பாக மாறினால், மண்ணகம் விண்ணகமாக மாறும்.
No comments:
Post a Comment