Thursday, 20 August 2020

தாயின் அக்கறை

 குட்டிகளுடன் தாய் யானை


இந்த ‘மிஸ்டு கால் மம்மி’யை இன்றாவது திருத்தவேண்டும் என்று வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு, ‘மிஸ்டு காலி’ன் காரணம் தெரிந்தபோது, ஆனந்த அதிர்ச்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தில் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார்  இராகவன். சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் நின்றுவிட்டது. தாய்தான் அழைத்திருந்தார். அவருக்கு கோபம் கோபமாக வந்தது. இப்படிப்பட்ட துண்டிப்பு ஒரு முறை, இருமுறையல்ல… எப்போதுமே. இந்த ‘மிஸ்டு கால் மம்மி’யை இன்றாவது திருத்தவேண்டும் என்று வீட்டிற்குள் நுழைந்த இராகவனை, அறைக்குள் தாயும் தந்தையும் உரையாடிக் கொண்டிருந்தது தடுத்தது.

'ஏம்மா, அவனுக்கு போன் போட்டா பேச வேண்டியதுதானே, எதுக்கு ‘மிஸ்டு கால்’? எதுக்காக இந்த கஞ்சத்தனம்? அவன்தான் நம் இருவருக்கும் மாதந்தோறும் கைத்தொலைபேசியில் காசு ரீசார்ஜ் பண்ணுகிறானே?,' என தந்தை கேட்க,

”புரியாமப் பேசறீங்களே, அவன் எந்நேரமும் வண்டியில சுத்தறவன். ரோட்ல வண்டியெல்லாம் எமனாட்டம் வருது. நான் விடாப்பிடியா ரிங் கொடுக்க… ஏதோ அவசரமான விஷயம்னு நினைச்சு, அவன் பதற்றமா எடுத்துப் பேசினா, ஆபத்துதானே? அதனால்தான், அவன் என் ‘மிஸ்டு காலை’ப் பார்த்து, எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது அழைக்கட்டும் என விட்டுவிடுகிறேன்' என்று தாய் கூறியதைக் கேட்ட இராகவனுக்கு, தாயின் பாசம் அறிந்து, கண்களில் கண்ணீர் வடிந்தது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...