Tuesday 25 August 2020

மீதி இருக்கிற நாளை வாழ விரும்புகிறேன்

 ஏமன் நாட்டின் முதியவர் ஒருவர்


நான் சொத்துக்களை பிரித்து கொடுக்கலைன்னா, என்னோட சாவுக்காக ஆவலோடு காத்திருப்பாங்க. நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

எழுபத்தைந்து வயதான சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே, அது பக்கவாதம் என்பது  புரிந்து போனது. மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னரே போய்ச் சேர்ந்துவிட்டார். பசங்கள் நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள்.

சொத்தை பிரிக்கச்சொல்லி அழைத்த சிவப்பிரகாசத்தை நோக்கி, 'சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரித்து எழுதிக் கொடுத்திட்டின்னா, உன்னை, நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க', என்றார் வழக்குரைஞர் செந்தில்நாயகம்.

'எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில். நான் சொத்துக்களை பிரித்து கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடுமென்று என்னோடச் சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரித்து கொடுத்திட்டா, என்னை காவனிக்காம உட்ருவாங்கதான். ஆனா, நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஓர் ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன். நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது', என்று சிவப்பிரகாசம் சொன்னபோது, அதிலுள்ள நியாயம் புரிந்தது வழக்குரைஞர் செந்தில்நாயகத்திற்கு.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...