Thursday, 9 July 2020

அனைவருக்கும் பாதிப்பு

தொழிற்சாலையில் பணிபுரிவோர்

சமுதாயத்தில் நிகழும் நேர்மை குறைவான செயல் ஒவ்வொன்றுக்கும் உரிய விலையை, அனைவரும் வழங்கவேண்டியுள்ளது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
தன் பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் நோக்கத்துடன், தொழிலாளி ஒருவர், ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்காக, கோவிலுக்குச் சென்றார். அங்கு அமர்ந்திருந்த அருள்பணியாளரிடம் சென்று, "சாமி, நான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து ஒரு சுத்தியலைத் திருடிவிட்டேன். மற்ற தொழிலாளிகள், இதைவிட பெரிய பொருள்களைத் திருடுவது எனக்குத் தெரியும். நான் சுத்தியலைத் திருடியதால், அந்த நிறுவனத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பு இல்லை" என்று கூறினார் தொழிலாளி.
அந்த அருள்பணியாளர், தொழிலாளியிடம், அவர் பணிபுரியும் அத்தொழிற்சாலையைப் பற்றி செய்தித்தாளில் தான் படித்த ஒரு விவரத்தைக் கூறினார். அதாவது, அத்தொழிற்சாலையில், திருடப்படும் பொருள்களால், ஒவ்வொரு மாதமும், அந்நிறுவனத்திற்கு 50,000 டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும், எனவே, ஓராண்டில், அந்நிறுவனம், 600,000 டாலர்கள் இழப்பைச் சந்திக்கிறது என்றும், அச்செய்தியில் தான் வாசித்ததாக அருள்பணியாளர் கூறினார்.
தொடர்ந்து அவர், அத்தொழிலாளியிடம், "இந்த இழப்பை ஈடு செய்ய அந்நிறுவனம், தான் விற்பனை செய்யும் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கவேண்டியுள்ளது. அந்நிறுவனத்தில் உருவாகும் வாகனங்கள், வீட்டுப் பொருள்கள் அனைத்தும், கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன" என்பதையும் கூறினார். "நீங்கள் திருடிய சுத்தியலுக்காக, அந்நிறுவனத்தின் பொருள்களை வாங்கும் அனைவருமே பணம் தரவேண்டியுள்ளது" என்று அருள்பணியாளர் கூறி முடித்தார்.
சமுதாயத்தில் நிகழும் நேர்மை குறைவான செயல் ஒவ்வொன்றுக்கும் உரிய விலையை, அனைவரும் வழங்கவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...