Monday, 27 July 2020

ஏழை நாடுகளின் கடன் தள்ளுபடி குறித்து ஜி-20 நாடுகள்

காணொளி வழியாக தங்களிடையே விவாதங்களை நடத்திய ஜி.20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏற்கனவே 73 நாடுகளின் கடன்சுமை குறைக்கப்பட்டிருக்க, தற்போது, ஜூலை மாதம் வரை, 42 நாடுகள், தங்கள் கடன்சுமையைக் குறைக்கவேண்டும் என, ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
உலகிலுள்ள ஏழை நாடுகளின் கடன் நிவாரணம் குறித்து, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்த ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளின் கடன் தள்ளுபடி குறித்து, இவ்வாண்டின் இறுதிக்குள் கூடி விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் கடன் தள்ளுபடி, நிரந்தர கடன் குறைப்பு, கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடனை தள்ளுபடி செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கும் ஜி-20 கூட்டமைப்பின் நிதி அமைச்சர்கள் கூட்டம், இவ்வாண்டு இறுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று காணொளி வழியாக தங்களிடையே விவாதங்களை நடத்திய ஜி.20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், அக்கூட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஜி-20 பணக்கார நாடுகளிடம் பட்டுள்ள கடனுக்குரிய வட்டியை இவ்வாண்டு முழுவதும் செலுத்தத் தேவையில்லை என ஏற்கனவே 73 நாடுகளிடம், ஜி-20 நிதி அமைச்சர்கள் ஏப்ரல் கூட்டத்தில் அறிவித்திருக்க, தற்போது ஜூலை மாதம் வரை 42 நாடுகள், தங்கள்  கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொளி வழியாக விவாதம் நடத்துவதற்கு முன்னரே, அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள 'ஜூபிலி யு.எஸ்.ஐ.' என்ற மதத்தலைவர்கள், வளர்ச்சித்திட்ட நிறுவனங்கள் ஆகியவை இணைந்த கூட்டமைப்பு, ஏழைநாடுகளின் கடன் நிவாரணம், வளரும் நாடுகளுக்கு உதவிகள், ஊழலை ஒழிக்க உதவுதல், அவர்களின் வர்த்தகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...