Wednesday 22 July 2020

மொரோக்கோவில் கிறிஸ்தவர்களின் துயர்

மொரோக்கோ கத்தோலிக்க கோவில்

கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறும் மொரோக்கோ நாட்டினர், பல சட்டப்பிரச்னைகளை எதிர்நோக்கவேண்டியிருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் எப்போதும் அச்சுறுத்தல் உள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
மொரோக்கோ நாட்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறியவர்கள், தொடர்ந்து காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக, மத சுதந்திரத்திற்காக உழைக்கும் நடவடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
உரிமைகள், மற்றும், மத சுதந்திற்குரிய மொரோக்கோ அமைப்பின் தலைவர் Jawad Elhamidy அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு வழங்கிய பேட்டியில், கைதுசெய்யப்பட்டவர்கள், விசாரணைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டாலும், இஸ்லாம் மதத்திற்கு திரும்பும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறுபவர்கள், பல சட்டப்பிரச்னைகளை எதிர்நோக்கவேண்டியிருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் எப்போதும் அச்சுறுத்தல் இருந்துகொண்டிருப்பதாக மேலும் எடுத்துரைத்தார் Elhamidy.
தேவநிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் கிறிஸ்தவர்கள், பல நாட்கள் தொடர்ந்து சிறையில் வைக்கப்படுவதுடன், அவர்களின் குடும்பத்தினரும் காவல்துறையால் அச்சுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மொரோக்கோ நாட்டில், இஸ்லாம் தவிர, யூதம் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் வாழும் வெளிநாட்டு கிறிஸ்தவர்களின் வழிபடும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளவேளை, உள்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமைகள் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...