Wednesday, 29 July 2020

ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

மும்பையில் கோவிட்-19 சோதனைகள்

இந்தியாவில் தொடர்ச்சியாக 2வது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக உரைக்கிறது, மத்திய நலத்துறை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனா கொள்ளைநோயிலிருந்து மீண்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது நலமடைந்தோரின் எண்ணிக்கை, 64.23 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும், இந்திய நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மேலும் 47,704 பேருக்கு கொரோனா உறுதியாகி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.84 இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில், ஒரே நாளில் 654 பேர் பலியானதால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 33,425 ஆக அதிகரித்துள்ளது, என கூறும் அரசின் அறிக்கை, ஜூலை 27ம் தேதி, ஒரே நாளில், நாடு முழுவதும், 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து, நாட்டில் தற்போது நலமடைந்தோரின் எண்ணிக்கை, 64.23 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் தொடர்ச்சியாக 2வது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக கூறும் மத்திய நலத்துறை, ஜூலை 26ல் 5,15,000 மாதிரிகளும், ஜூலை 27ல்  5,28,000 மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...