Wednesday, 22 July 2020

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டிய இக்காலத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டங்களை இயற்றியுள்ள பிலிப்பீன்ஸ் அரசு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசால் எடுக்கப்பட்டுள்ள அண்மைய நடவடிக்கைகள் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
பயங்ககரவாதத்திற்கு எதிரான புதிய சட்டங்கள், ABS-CBN தகவல் தொடர்பு கூட்டமைப்பை மூட உத்தரவிடல் போன்ற அரசின் நடவடிக்கைகள் குறித்து கவலையை வெளியிடும் ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கை, இஞ்ஞாயிறு, ஜூலை 19ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் அனைத்து கோவில்களிலும் வாசிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதையொத்த சூழல் தங்கள் நாட்டிலும் உருவாகி வருவதாக உரைத்த பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தற்காலிகத் தலைவர், ஆயர் Pablo Virgilio David  அவர்கள், உரிமை பறித்தல் நடவடிக்கைகளிலிருந்து நாடு குணம்பெற, 21 நாள் செபத்திற்கும் மக்களிடம் விண்ணப்பித்தார்.
கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டிய இக்காலத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டங்களை இயற்றி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, கவலை தருவதாக உள்ளது என தங்கள் சுற்றறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அடிமட்ட மக்களின் தேவைகளையோ, கவலையையோ வெளிப்படுத்துவதாக அரசின் நடவடிக்கைகள் இல்லை என தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் என்ற பெயரில் வந்தாலும்,  அமைதியை விரும்பும் சாதாரண குடிமக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு இது அச்சுறுத்தலாகவே உள்ளது எனவும் கூறியுள்ளனர் பிலிபைன்ஸ் ஆயர்கள்.
ABS-CBN தகவல் தொடர்பு கூட்டமைப்பின் பதிவை புதுப்பிக்க அரசு மறுத்துள்ளது, கருத்துச் சுதந்திரத்தின் மீது அரசு எடுத்துவரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் கூறும் ஆயர்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் என்பது, பலவேளைகளில், நியாயமான எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்குரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர், பிலிப்பீன்ஸ் ஆயர்கள். (UCAN)

No comments:

Post a Comment