Saturday, 11 July 2020

எதில் மகிழ்ச்சி?

பலூன்களால் வடிவமைக்கப்பட்ட ஜெபமாலையை பறக்கவிட்டுள்ளனர்

எல்லாரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பதில்லை.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒரு பெரிய அரங்கில் கருத்தரங்கு நடந்துகொண்டிருந்தது. அப்போது, பேச்சாளர், அங்கிருந்த ஒவ்வொருவரின் கையிலும் ஒரு பலூனை கொடுத்து, அதில், அவரவர் பெயரை எழுதச்சொன்னார். எல்லாரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் வைக்கச் சொன்னார். பின்னர், அந்த பேச்சாளர், “உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்” என்று அறிவித்தார். உடனடியாக, அனைவரும் விழுந்தடித்து அந்த அறைக்குள் ஓடிச்சென்று, நெருக்கித் தள்ளிக்கொண்டு கீழே விழுந்து, தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாகத் தேடினர். 5 நிமிடம் கடந்தபிறகும் ஒருவராலும் அவரவருக்குரிய பலூனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த சில நிமிடங்களில், தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லாருக்கும் கிடைத்துவிட்டது. அப்போது, அந்த பேச்சாளர் சொன்னார்: ’இதுதான் வாழ்க்கை. எல்லாரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஆனால், அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பதில்லை. நம் மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்’.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...