Friday 31 July 2020

தியான இல்லங்கள் மூடப்பட்டாலும், தியான வாழ்வு மறையாது

ஆழ்நிலை தியான வாழ்வு வாழ்கின்ற அருள்சகோதரிகள்

இவ்வுலகிற்கு உணவும், நீரும் எவ்வளவு தேவையோ, அதேவண்ணம், ஆழ்நிலை தியான வாழ்வும் தேவை - அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வு பேராயத்தின் தலைவர் கர்தினால் João Braz de Aviz

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகிற்கு உணவும், நீரும் எவ்வளவு தேவையோ, அதேவண்ணம், ஆழ்நிலை தியான வாழ்வும் தேவை என்று, அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வு பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Vida Nueva என்ற இஸ்பானிய இதழுக்கு, ஜூலை 27, இத்திங்களன்று வழங்கிய ஒரு பேட்டியில், கடந்த ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் 32 ஆழ்நிலை தியான இல்லங்கள் மூடப்பட்டன என்பது குறித்து எழுந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், கர்தினால் Braz de Aviz அவர்கள், தியான இல்லங்கள் மூடப்பட்டாலும், தியான வாழ்வு திருஅவையிலிருந்து மறையாது என்று கூறினார்.

ஆழ்நிலை தியான வாழ்வோ, பொதுவாக, துறவு வாழ்வோ, ஒரு தீவில் உருவாகும் வாழ்வு அல்ல, மாறாக, அது, ஓர் இல்லத்தில், ஒரு குடும்பத்தில் உருவாகிறது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Braz de Aviz அவர்கள், பொதுவாகவே, குடும்பங்களில் கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகரும் பண்பு குறைந்துவருகிறது என்று கூறினார்.

நம் குடும்பங்களிலும், துறவு இல்லங்களிலும் பின்பற்றப்படும் உருவாக்குதல் பணி இன்னும் ஆழமாக வேண்டும் என்றும், கிறிஸ்துவை சந்திப்பவர்கள், மற்றவருக்கு சாட்சிகளாக வாழ பல வழிகளிலும் அழைக்கப்படுகின்றனர் என்றும் கர்தினால் Braz de Aviz அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார். (CNA)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...