ஏழை மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து, மருத்துவமனை வழியாக சேவையாற்றி, தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள அருள்ககோதரிகளுக்காகச் செபிக்குமாறு, இரு ஆயர்கள் விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்அஸ்ஸாம் மாநிலத்தின் Dibrugarh மறைமாவட்டத்தின் ஏழைகளுக்கு மருத்துவப் பணிகள் ஆற்றிவந்த 12 கத்தோலிக்க அருள்சகோதரிகள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு உள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, அவர்கள் நடத்திவந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளதுடன், அவர்களும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dibrugarh மறைமாவட்டத்தின் புனித Vincenza Gerosa மருத்துவமனையில் ஏழைகளுக்கு மருத்துவச் சேவையாற்றி வந்த இந்த 12 அருள்சகோதரிகளும், அவர்களின் வீட்டுப்பணியாளர் ஒருவரும், கொரோனா தொற்றுநோயைப் பெற்றதைத்தொடர்ந்து, மருத்துவமனையை கொரோனா எதிர்ப்பு மருந்தால் சுத்தம் செய்து அதனை மூடியுள்ள அரசு, சகோதரிகளையும், பணியாளரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
ஏழை மக்களுக்கு சேவையாற்றிவந்த மருத்துவமனையின் பொதுப்பகுதி மூடப்பட்டதைத் தொடர்ந்து, Dibrugarh பகுதியிலும், அண்மைய அருணாச்சல மாநிலத்திலும் சேவைபெற்று வந்த ஏழைமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த மறைமாவட்ட ஆயரின் செயலர் அருள்பணி Palatty Devassy அவர்கள், 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை ஏழைகளுக்கு ஆசீராக விளங்கியது என்றார்.
ஏழை மக்களுக்கென தங்களை அர்ப்பணித்து மருத்துவமனை வழியாக சேவையாற்றி வந்த இந்த அருள்ககோதரிகளுக்காக அனைவரும் செபிக்குமாறு, அப்பகுதியின் Dibrugarh ஆயர் Joseph Aind அவர்களும், அருணாச்சல மாநிலத்தின் Miao மறைமாவட்ட ஆயர் George Pallipparambil அவர்களும் தனித்தனியாக விண்ணப்பங்களை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக St.John மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூர் முன்னாள் பேராயர் Bernard Moras அவர்கள், நலம்பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (UCAN)
No comments:
Post a Comment