பல்லுத் தீட்டி விடும் அதிசய பறவை
Source: Tamil CNN. சிட்னியில் வசிக்கும் ப்ளூம் குடும்பத்தினர் மேக்பை பறவையை வளர்த்து
வருகிறார்கள். மனிதர்கள் செய்யும் பல செயல்களையும் இந்த மேக்பை செய்து
அசத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டு, பெங்குவின்
என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். ப்ளூம் மகன்களுடன் படுக்கையில்
படுத்து தூங்குகிறது. அதிகாலை எல்லோரையும் எழுப்பி விடுகிறது.
பல் தேய்க்கும்போது தோளில் அமர்ந்து, பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது.
உடற்பயிற்சி செய்கிறது. குழந்தைகளைப் போலவே உரக்கக் குரல் கொடுத்து
அழைக்கிறது. பாடுகிறது. மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறது. ஒவ்வொரு
குழந்தைக்கும் அலகால் முத்தம் கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது.
கம்ப்யூட்டரில் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கிறது.
கால்குலேட்டரைக் கால்களால் தட்டி விளையாடுகிறது. குழந்தைகள்
படிக்கும்போது அவர்களின் கைகளை ஆதரவாகத் தன் கால்களால் பிடித்தபடி
படுத்துக் கிடக்கிறது. குழந்தைகளுடன் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுக்கிறது.
ஒரு நாயைப் போல இத்தனை அன்பாக பறவை பழகுவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
என்கிறார் ப்ளூம். பெங்குவின் மற்றும் ப்ளூம் குடும்பத்தினரின்
புகைப்படங்கள் இணையதளங்களில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment