உலகின் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட போதும் அன்புடன் புன்னகைக்கும் ஏடன்
ஏடனை பராமரிப்பதற்காக அவனது தாய் விக்கி எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டார். ஏடனைப் பற்றி அவர் கூறுகையில் “முதன் முதலாக ஏடனை வீட்டுக்கு கூட்டி வந்த போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் பயந்து ஓடி விட்டனர். அவனால் பேச முடியாது, நடக்க முடியாது. கழுத்துப்பகுதியில் தொங்கும் கட்டியால் முகத்தை அசைக்க முடியாமல் அவன் அனுபவித்த நரக வேதனையை அனுபவித்தான். வீட்டிலே இருக்கிறானே என்று எங்காவது வெளியே கூட்டிச் சென்றால் பார்ப்பவர்கள் எல்லாம் உன் மகனின் உடல் அங்கங்கே ஏன் வீங்கியிருக்கிறது என்று துக்கம் விசாரிப்பார்கள். ஏனென்று சொன்னால் அவர்களால் சரி செய்து விட முடியுமா?…”
சில மாதங்களுக்கு முன்பு கிரேட் ஆர்மாண்ட் தெருவில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவரை சந்தித்த ஏடனின் பெற்றோருக்கு அவரது வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கையளித்தது. ஏடனுக்கு ‘க்ளோவ் சிண்ட்ரோம்’ எனப்படும் மிகவும் அரிதான மரபியல் கோளாறு இருப்பதாக சொன்ன அவர், அவனது முகத்தின் சதைகளுக்குள்ளே நோயால் சிதைந்து போன நரம்புகளை நீக்கும் அறுவை சிகிச்சையை செய்வதாக தெரிவித்தார்.
5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஏடனின் உடல் நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கு சென்று வரும் ஏடன் மீது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அன்பைப் பொழிகின்றனர்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் குழு வருகிற ஜூலை தொடங்கி 6 மாதம் ஏடனுக்கு சோதனை சிகிச்சை ஒன்றை மேற்கொள்கின்றனர். இந்த சிகிச்சைக்குப் பின்னர் ஏடனும் மற்ற குழந்தைகளைப் போல் மாறி விடுவான் என்று அவனது பெற்றோர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment