Tuesday, 24 March 2015

காணாமல் போனோர் தொடா்பில் சர்வதேச விசாரணை வேண்டும் – கல்முனையில் ஒன்று கூடிய மக்கள் கோரிக்கை.

இலங்கை-காணாமல் போனோர் தொடா்பில் சர்வதேச விசாரணை வேண்டும் – கல்முனையில் ஒன்று கூடிய மக்கள் கோரிக்கை.

Source: Tamil CNN. 14காணாமல் போனவா்கள் தொடா்பாக நீதி நியாயமான சா்வதேச விசாரணையை வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று காணாமல் போன உறவுகளினால் அமைதிப்பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட காணாமல் போனவர்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கை இன்மையினை கண்டித்தும், காணாமல் போனவர்கள் தொடர்பில் உடனடியாக சர்வதேச தரத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல நுாற்றுக்கணக்கில் ஒன்று கூடி இவ் அமைதிப்பேரணியை செய்தனா்.
இப் பேரணியில் பங்குபற்றியோர் காணாமல்போன தங்களின் மகனை, மகளை, தாயை, தந்தையை, கணவனை, சகோதரனை நினைத்து கண்ணீர் மல்க புகைப்படங்களை தாங்கிச் சென்றனா்.
கல்முனை பிரதேச செயலகத்திற்கு இரு முனைகளில் இருந்தும் பேரணியாக வந்து காணாமல் போனோரின் உறவினர் அமைப்பினால் கல்முனை பிரதேச செயலாளர் எஸ்.லவநாதன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த. கலையரசன் ஆகியோரிடம் மகஜர்களையும் கையளித்தனர்.
இவ் அமைதிப் பேரணியில் பொது அமைப்புக்கள் மதகுருமார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினா்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினா்கள் .என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
-பாண்டிருப்பு கேதீஸ்-
01
02
03
05
06
07
08
09
12
13
09
09
10
11

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...