Thursday, 19 March 2015

செரிமானப் பிரச்சனையா? ஏலக்காய் சாப்பிடுங்கள்

செரிமானப் பிரச்சனையா? ஏலக்காய் சாப்பிடுங்கள்

Source: Tamil CNN. 9ecc3613-8c31-4e32-a27a-90a9d290860c_S_secvpfஉணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது.
இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ஏலக்காயை தேநீர் பாயாசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் அதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் இதில் உள்ளது.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும்.
இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.
அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும்.
எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். இதே போல ஏலக்காயை சூயிங்கம்மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும்.
குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும்.
அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...