Saturday, 28 March 2015

சீனாவில் ரகசியமாக விமான நிலையம் கட்டிய தொழில் அதிபர்

சீனாவில் ரகசியமாக விமான நிலையம் கட்டிய தொழில் அதிபர்

Source: Tamil CNN. gg
சீனாவில் ராணுவத்திடம் அனுமதி பெற்று தனியார் விமான நிலையங்கள் அமைத்துள்ளனர். ஆனால் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு தொழில் அதிபர் விமான நிலையம் கட்டியிருந்தார்.
அதில் இருந்து தனது நிறுவன விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கி வந்தார். அவரது பெயர் லீ.
இந்த நிலையில் அவரது நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆன் ஹுயி கிழக்கு பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
அதில் 25 வயது வாலிபர் ஒருவர் பலியானார். அதற்கு நஷ்ட ஈடாக இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. இதனால் அவர் ரகசியமாக விமான நிலையம் கட்டியிருந்தது வெளியே தெரிய வந்தது.
அதை தொடர்ந்து சீன ராணுவம் அந்த விமான நிலையத்தை பறிமுதல் செய்தது. அது 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அதில் 3 ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. 400 மீட்டர் அளவு ஒடு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளமும் உள்ளது.
அரசின் அனுமதி பெறாமல் விமான நிலையம் கட்டியதை தொடர்ந்து தொழில் அதிபர் லீ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment